சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகரம் சூரமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில நாள்களுக்கு மின் கதவடைப்பு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் அனைவரும் தானாக பணி விலகும் சூழலை ஏற்படுத்தி நிறுவனத்தை நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. சூரமங்கலத்தில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தலேமா நிறுவனம் பின்னர் ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்ட காமிக் குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தலேமா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக லாபம் ஈட்டி…
Author: admin
புதுடெல்லி: பல ஆயிரம் வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சம்மனை அடுத்து இன்று (ஆக.5) அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார். 66 வயதான அவர், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறையில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த வழக்கில் அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறையின் துணை மற்றும் இணை இயக்குனர்களின் மேற்பார்வையில் உதவி இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரி, அனில் அம்பானியிடம் விசாரணை மேற்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கின் பின்னணி: லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் இன்று அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் கடந்த…
ஸ்கின்கேர் என்று வரும்போது, நெய் மற்றும் மலாய் இரண்டும் தேசி பிடித்தவை, ஆனால் எது வெற்றி பெறுகிறது?
புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது. “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கிய எரிபொருள்களில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கிறது. ரஷ்யாவின் போர் ஆயுங்களால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது. உண்மையில், மோதல் வெடித்த பிறகு, வழக்கமாக கச்சா எண்ணெய் விநியோகம்…
காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ‘அம்பரன்’ என்ற அசுரனை அஷ்டபுஜ பத்ர காளியம்மன் அழித்து அகிலத்தை காத்ததால், இவ்வூருக்கு ‘அம்பரகரம்’ என்று பெயர் வந்தது. பின்னர் ‘அம்பகரம்’ என்றாகி, தற்போது ‘அம்பகரத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது. மதலோலை என்ற பெண்ணுக்கு துருவாச மாமுனியின் சாபத்தால் அம்பரன், அம்பன் என்ற 2 அசுரக் குழந்தைகள் பிறந்தன. இவ்விருவரும் அசுர குருவான சுக்கிரனிடம் கல்வி பயின்று, இறைவனிடம் வேண்டி எல்லையற்ற ஆற்றலைப் பெற்றனர். பின்னர் தேவர்களுக்கும், நன்மக்களுக்கும் பெருந்துயர் இழைத்து வந்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பார்வதியையும், திருமாலையும் சிவபெருமான் அம்பலுக்கு அனுப்பி வைத்தார். பார்வதி அழகான பெண் உருவில் அங்கு சென்றபோது, அவரை திருமணம் செய்து கொள்ள இரு அசுரர்களும் விரும்பினர். இதனால் அசுர சகோதரர்களிடையே போட்டி ஏற்படுத்தி முதலில் அம்பனையும், திருமால் கொடுத்த வாளால் அம்பரனையும் பார்வதி அழித்தாள். பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தி, பத்ரகாளி…
சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதுகுறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை…
சிறுநீரக புற்றுநோய் வளர்சிதை மாற்ற மாற்றங்களை உருவாக்குகிறது, இது உங்கள் பசியையும் சாப்பிட விருப்பத்தையும் குறைக்கிறது. உணவு முயற்சிகள் இல்லாமல், நீங்கள் எடையைக் குறைப்பீர்கள், மேலும் உங்கள் பசி ஒரு டாஸுக்கு செல்லும். பல கடுமையான சுகாதார நிலைமைகள் இந்த அறிகுறியை உருவாக்கக்கூடும், ஆனால் பிற எச்சரிக்கை அறிகுறிகளுடன் எடை இழப்பு தோன்றும் போது மருத்துவ மதிப்பீடு அவசியம். எந்தவொரு திடீர் எடை இழப்பும் உங்கள் உடல் ஒரு நோயை (புற்றுநோய் போன்றவை) எதிர்த்துப் போராடுகிறது என்பதற்கான எச்சரிக்கை குறிகாட்டியாக செயல்படுகிறது. இத்தகைய எடை மாற்றங்கள் விரைவாக நிகழ்கின்றன, மேலும் எடை இழப்பு தெளிவாகிறது. பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் கலவையானது அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைக்கிறது, அதில் வீட்டு வேலைகள், வேலைக்கு பயணம் அல்லது உடற்பயிற்சி ஆகியவை அடங்கும்.ஆதாரங்கள்:அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி: சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள்NHS: சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்புற்றுநோய் ஆராய்ச்சி யுகே: சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்மயோ கிளினிக்:…
மயக்கும் பார்வை விண்வெளியில் இருந்து இந்தியா விண்வெளி வீரர்களை பல தசாப்தங்களாக பிரமிப்புடன் விட்டுவிட்டார். அவற்றில், மைக் மாசிமினோஒரு முன்னாள் நாசா விண்வெளி வீரர் விண்வெளி அனுபவங்களை ஆன்லைனில் பகிர்வதில் முன்னோடி, இந்தியாவுடன் ஒரு சிறப்பு தொடர்பைக் கொண்டுள்ளது. ரன்வீர் அல்லாஹ்பாடியா நடத்திய சமீபத்திய போட்காஸ்டில், மாசிமினோ இந்தியாவின் நிலப்பரப்பு, குறிப்பாக மும்பை மற்றும் இரவில் புது தில்லி ஆகியோரை எவ்வாறு சுற்றுப்பாதையில் இருந்து மூச்சடைத்தது என்பதை நினைவு கூர்ந்தார். பூமியின் இருண்ட மேற்பரப்பில் பரவிய நகைகள் போல, பிரகாசமான எரியும் நகரங்கள் அதிர்ச்சியூட்டும் காட்சி வடிவங்களை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். அவரது அனுபவங்கள் பூமியின் அழகைப் பற்றி வேறுபட்ட கண்ணோட்டத்தை எவ்வாறு வழங்குகின்றன என்பது மட்டுமல்லாமல், அங்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே நாடுகளுடனான தனிப்பட்ட தொடர்புகளை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.நாசா விண்வெளி வீரர் மாசிமினோ விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகைப் பற்றிய முதல்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது. பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி சார்பில் இந்த முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான பாதுகாப்புப் படையின் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர்…
இந்தியாவில் ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் இதனைக் கொண்டாடி வருகிறார்கள். மக்களிடையே கிடைத்த வரவேற்பால், இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் அனிமேஷன் படங்களில் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது ‘மகாவதார் நரசிம்மா’. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில், அடுத்த பாகத்தினை மேலும் நல்ல பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் அடுத்த பாகங்களாக, ‘மகாவதார் பரசுராம்’ (2027), ’மகாவதார் ரகுநந்தன்’ (2029), ’மகாவதார் துவாரகாதீஷ்’ (2031), ’மகாவதார் கோகுல நந்தா’ (2033), ’மகாவதார் கல்கி பார்ட்…
