சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள Scene திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
டீசரில் சூர்யா DSP இன்பராஜ் என்ற வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது தெரியவந்துள்ளது. வழக்கமான போலீஸ் கதாபாத்திரமாக இல்லாமல், சற்று முரட்டுத்தனமான மற்றும் கணிக்க முடியாத குணம் கொண்டவராக அவரது கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை விசாரிக்கும் விதம், சக போலீசாரிடம் நடந்து கொள்ளும் விதம் என டீசர் முழுவதும் சூர்யாவின் கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Aavesham படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து மாதவனின் முதல் தமிழ் திரைப்படம் இது. நஸ்ரியா நஸீம், நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள Scene திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
