ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வக ஊழியர் மர்மமான நிமோனியா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய அந்த பெண் அக்டோபர் 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
ஆனால் ரஷ்ய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பிளேக் நோய் கண்டறியப்படவில்லை. அவர்களிடம் COVID 19 மற்றும் rhinovirus போன்ற பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பும் ரஷ்யாவிடம் கூடுதல் தகவல்களை கேட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பரிசோதனை முடிவுகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவில் பிளேக் நோய் பரவல் ஏற்பட்டுவிட்டதாக தற்போது கூற முடியாது. அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை பிளேக் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், உலகின் சில பகுதிகளில் மனிதர்களுக்கு பிளேக் பாதிப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பிளேக் நோய் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பிளேக் பரவல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து நடைபெறும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளே உண்மையா
