Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, April 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் – நடந்தது என்ன?
    உலகம்

    நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் – நடந்தது என்ன?

    adminBy adminOctober 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பார்சிலோனா: காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர்.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அப்போது அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும்.

    இந்தப் படகு பயணத்தில் உள்ள சிரியஸ், அல்மா, அடாரா படகுகள் காசா கடற்கரையை நெருங்க சுமார் 80 மைல்கள் தொலைவு இருந்த நிலையில் இஸ்ரேல் கடற்படையினர் படகுகளை இடைமறித்துள்ளனர். அதை படகுகளில் பயணித்தவர்கள் சமூக வலைதள பதிவுகளில் பகிர்ந்து உறுதி செய்துள்ளனர். அப்போது ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்’ என அவர்கள் முழங்கினர். ஏற்கெனவே இதே போல கடந்த ஜூன் மாதம் நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி வந்த படகுகளுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    “சுமார் 12-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இஸ்ரேல் கடற்படையினர், பாலஸ்தீன கடல் பரப்பை நெருங்கிய எங்கள் படகுகளை இடைமறித்தனர். நாங்கள் பயணித்த படகுகளின் இயக்கத்தை நிறுத்துமாறு அவர்கள் தெரிவித்தனர். அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை எங்களை காத்திருக்குமாறு கூறியுள்ளனர். இல்லையெனில் எங்களது படகுகள் கைப்பற்றபடும் என கூறியுள்ளனர். மேலும், அதற்கான விளைவுகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர்” என்று காசாவுக்கு உதவு பொருட்களுடன் படகில் சென்ற அமெரிக்கர் கிரேக் ஸ்டாகர் தெரிவித்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரெட்டா தன்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். அந்தப் பதிவில் படகின் மேல்புறத்தில் கிரெட்டா தன்பெர்க் அமர்ந்துள்ளார். இந்த பயணத்தில் நெல்சன் மண்டேலாவின் பேரனும் பயணித்துள்ளார். அவர்களுடன் ஐரோப்பியாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களும் உள்ளனர். சிவப்பு நிற லைஃப்-ஜாக்கெட்டை படகில் பயணித்த அனைவரும் அணிந்துள்ளனர்.

    அடுத்து என்ன நடக்கும்? – இஸ்ரேலின் நடவடிக்கை சில மணி நேரம் வரை தொடரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களது படகுகள் அனைத்தும் இஸ்ரேலின் அஸ்தோது நகரில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படலாம். பின்னர் அங்கிருந்து அவர்கள் நாடு கடத்தப்படலாம் என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

    இஸ்ரேலின் இந்த செயலுக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கு எதிராக இஸ்ரேல் செயல்படுகிறது. நிவாரண உதவி பொருட்களுடன் படகுகளில் காசா சென்ற துருக்கி நாட்டினர் மற்றும் அவர்களுடன் உள்ளவர்களை உடனடியாக இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் படகுகளில் பயணித்தவர்களின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சூழலில் பாலஸ்தீனியர்கள் அல் மவாசி பகுதிக்குப் பெயரும்படி இஸ்ரேல் படைகள் வலியுறுத்தி வருகின்றன. அங்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை காசாவில் இருந்து 4,50,000-க்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    மாணவர் விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், ஃபெடரல் ஊழியர் என்று காட்டி முதியவரை ஏமாற்றியதற்காக குற்றவாளி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 21, 2026
    உலகம்

    H-1B விசா மோசடி: கலிபோர்னியாவில் இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்; இல்லாத பதவிகளுக்கு ஆட்களை நியமித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 21, 2026
    உலகம்

    கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்டார்: கனடாவில் இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவின் கொலையாளி குற்றவாளி, ஸ்கிசோஃப்ரினியா சீரற்ற கொலைக்கு மன்னிப்பு இல்லை என்று நீதிபதி கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 21, 2026
    உலகம்

    கனடாவில் உள்ள பஞ்சாபி தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு அமெரிக்காவிலிருந்து 108 கிலோ மெத்தையை டஃபில் பைகளில் கடத்தியதற்காக 5.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 19, 2026
    உலகம்

    மார்க் கார்னி குருத்வாரா சாஹிப் ஒட்டாவாவைப் பார்வையிடுகிறார்: பார்க்க: கனடா பிரதமர் மார்க் கார்னி சீக்கிய பாரம்பரிய மாதத்தைக் கொண்டாடுகிறார், ஒட்டாவா குருத்வாராவில் சமூக சேவையில் சேர்ந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 19, 2026
    உலகம்

    80 வயதான சீக்கியர், ஃபவுஜா சிங்கால் ஈர்க்கப்பட்டு, முதல் முறையாக லண்டன் மராத்தான் ஓடினார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் விரிப்பு மிக வேகமாக வயதானதா? ஒருவேளை நீங்கள் காணாமல் போனது இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கவனச்சிதறலுடன் சாப்பிடுவது ஏன் செரிமானத்தை அதிகரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறந்த கழிப்பறை விவாதம்: மூடியை மூடுவது உண்மையில் உங்கள் குளியலறையை சுத்தமாக வைத்திருக்குமா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உணவு உண்ணும் போது இசையைக் கேட்பது உணவை சுவையாக மாற்றுமா? விஞ்ஞானம் ஒரு ஆச்சரியமான பதில் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: மரம், கண்கள், இரண்டு முகங்கள்? நீங்கள் முதலில் கவனிக்கும் விஷயம், நீங்கள் புறம்போக்கு, உள்முக சிந்தனையாளர் அல்லது உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறவரா என்பதை வெளிப்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.