புதுடெல்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய பலமே அதன் ஜனநாயகம்தான். எனவே மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும் கூட இந்தியா உலகளவில் மிகப்பெரிய கல்வி மையமாக மாறமுடியும். இது, நமக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். உலகளவில் தற்போது இந்திய பொருளாதாரமானது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நமது பொருளாதாரம் நான்காவது இடத்துக்கு முன்னேறும். அதன்பிறகு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். சர்வதேச நிதிய தகவலின்படி, இந்திய பொருளாதாரத்தின் அளவு தற்போது 4.3 டிரில்லியன் டாலராக (ரூ.367 லட்சம் கோடி) உள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை இந்தியப் பொருளாதாரம்…
Author: admin
யோகா மற்றும் நடைபயிற்சி இரண்டு குறைந்த தாக்க நடவடிக்கைகள், அவை உங்களுக்கு சுகாதார நன்மைகளைத் தருகின்றன. யோகா மற்றும் நடைபயிற்சி இரண்டும் ஒட்டுமொத்த உடற்தகுதிக்கு மிகச் சிறந்தவை, ஆனால் குறிப்பாக உங்கள் கைகள், கால்கள், மன அழுத்த நிவாரணம், எரியும் கலோரிகள் (எடை இழப்புடன்), நேர்மறையான மனநிலையை வளர்ப்பது போன்றவை. யோகா நெகிழ்வுத்தன்மை, வலிமை, சமநிலை மற்றும் மன அமைதியை மேம்படுத்த யோகா உதவுகிறது, நடைபயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, கலோரிகளை எரிக்க உதவுகிறது, மேலும் மோசடி செய்கிறது. சுறுசுறுப்பாக இருக்க இது எளிதான வழிகளில் ஒன்றாகும். ஆனால் எது சிறந்தது?
புதுடெல்லி: பஞ்சாப், ஹரியானா, குஜராத், உ.பி., உத்தரகண்ட் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் மாணவர் விசா விண்ணப்பங்களை “தடை” செய்வதாகக் கூறும் அறிக்கைகளை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.”குறிப்பிட்ட இந்திய மாநிலங்களிலிருந்து இந்திய பல்கலைக்கழக மாணவர் விண்ணப்பங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன அல்லது தடைசெய்யப்பட்டுள்ளன என்ற கூற்று தவறானது” என்று செய்தித் தொடர்பாளர் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம்புது தில்லி கூறினார்.”தற்போது ஆஸ்திரேலியாவில் 125,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் -எந்தவொரு நாட்டிலிருந்தும் இரண்டாவது பெரிய மாணவர்களான -மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்து எங்கள் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களை செயலாக்குகிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கல்வித் துறையில் மிகவும் வலுவான உறவைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா இந்திய மாணவர்களை ஆழமாக மதிப்பிடுகிறது, மேலும் ஆஸ்திரேலிய சமூகங்கள் மற்றும் ஆஸ்திரேலிய சமுதாயத்தை வரவேற்கிறது.இந்திய மாணவர்களுக்கான குடிவரவு விதிமுறைகளை இறுக்குவதில் ஆஸ்திரேலியா அமெரிக்காவிலும் கனடாவிலும் சேர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் பரிந்துரைத்த…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி,…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா 6ஜிபி…
சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பொறியியல் பிரிவில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், இசிஇ, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல், டிப்ளமா மற்றும் இளநிலை பட்டம் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் (https://nats.education.gov.in) ஏப்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 35-வது ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. இதைத் தொடர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம், ஐபிஎல் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.07 ) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, உலகையே உலுக்கி வரும் அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்புகளை குறைக்குமாறு நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலஸ்தீனம், ஹமாஸ், ஈரான் உடனான பதற்றமான சூழல் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பேசிய நெதன்யாகு, “மீண்டும் ஒருமுறை என்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததற்காக அதிபருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு இன்றியமையாத நண்பர். அவர் எங்களது சிறந்த ஆதரவாளர். அவர் சொல்வதைச் செய்கிறார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை நாங்கள் நீக்குவோம். அதை மிக விரைவாகச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதுவே சரியான செயல் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் வர்த்தகத் தடைகளையும் நாங்கள் அகற்ற இருக்கிறோம். இஸ்ரேல் பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்பட முடியும் என்று நான்…
மூலவர் / உற்சவர் : பாலசுப்ரமணிய சுவாமி. அம்பாள் : வள்ளி, தெய்வயானை. தல வரலாறு: சோழ பேரரசன் முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் ஒருகோமாதா புல்லை மேயும் போது அருவுருவாகிய பிம்பத்தில் பால் சொரிந்தது. அதை மாடு மேய்க்கும் சிறுவன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். அன்றே அச்சிறுவன் முருகப் பெருமான் ரூபத்தில் முசுகுந்த சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். முருகப் பெருமானின் தரிசனத்தால் பேரானந்தம் அடைந்த அரசன் ஸ்ரீ பால முருகனுக்காக இத்தலத்தை அமைத்தார் என்பது புராண வரலாறு. ஸ்கந்த புராண காலத்தில் தேவேந்திரன் அசுரர்களுக்கு பயந்து அக்ஞாத வாசம் செய்தபோது தன் நித்ய ஆத்மார்த்த பூஜைகளுக்கு வேண்டி இந்த ஊரில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்தார். புஷ்பவனம் அமைத்தபோது, ஈசன் மழையை வரவழைத்து அருள்பாலித்தார். அதனால் இங்குள்ள ஈஸ்வரன் தேவேந்திரேஸ்வரர் என்றும், அம்மன் தேனாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். கோயில் சிறப்பு: இந்திரன்…
பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி, தங்கர்பச்சான் என பலர் நடித்துள்ள படம் ‘யங் மங் சங்’. ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. “17-ம் நூற்றாண்டில் தொடங்கி, 1980-ல் நடப்பது போல இதன் கதை அமைக்கப் பட்டுள் ளது. இந்தியாவில் இருந்து சீனா செல்லும் மூன்று இளைஞர்கள், அங்கு பிரபலமான குங்ஃபூ கலையை கற்கிறார்கள். பிறகு ‘யங் மங் சங்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டுக்குத் திரும்புகிறார்கள். அதை வைத்து இங்கு என்னென்ன செய்கிறார்கள் என்பது திரைக்கதை” என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் கோடையில் வெளியாக இருக்கிறது