புதுடெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹமீத் ரசாக்கும் தேர்வாகி உள்ளார். சிங்கப்பூரில் சீனர்கள், மலாயர்கள், இந்தியர்கள் என வெவ்வேறு இன மக்கள் உள்ளனர். சிங்கப்பூர் மக்கள் தொகை சுமார் 60 லட்சம் ஆகும். இதில் சீனர்கள் 76, மலேசியர்கள் 15 மற்றும் இந்தியர்கள் 7.4 சதவீதங்களில் உள்ளனர். மலேசியர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில், சிங்கப்பூர் குழு பிரதிநித்துவ தொகுதி நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், தமிழ் பின்புலம் கொண்ட 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர். மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், கே.சண்முகம், விக்ரம் நாயர், இந்திராணி துரை ராஜா, முரளி பிள்ளை, ஹமீத் ரசாக், தினேஷ் வாசு…
Author: admin
இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்பதற்கு ஏற்ப இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். இதனால், பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைக்குத் தயார் என ஏற்கனவே தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த விசாரணையில் இணைய சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து 2வது முறையாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், ஷெபாஸ் ஷெரீப் தொலைபேசி மூலம் பேசி உள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர்…
‘ரெட்ரோ’வை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தகவல் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், எதிர்பார்த்த வசூலையும் இப்படம் அடையவில்லை. ஆனால், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே, ‘ரெட்ரோ’ படம் குறித்து அளித்த பேட்டியில் தனது அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில், “அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்குப் பின் ஒரு சின்ன படமொன்று பண்ணலாம் என தீர்மானித்தேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. அதனை முடித்து திரைப்பட விழாக்களுக்கு எல்லாம் அனுப்பிவிட்டு, ஓர் ஆண்டு கழித்து திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அந்தப் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது எல்லாம் மனதில் வைக்காமல்…
சென்னை: அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, மின் தடைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய வேண்டும் என, மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, மின்வாரியம் முன்னெடுத்துள்ள புதிய திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் அவற்றின் தற்போதைய நிலை மற்றும் செயலாக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: அனைத்து அனல் மற்றும் புனல் மின்னுற்பத்தி நிலையங்களிலும் முறையான பராமரிப்பை மேற்கொண்டு, முழுத் திறனில் இயங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நடைபெற்று வரும் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, அவற்றை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு…
பெசன் பூச்சுடன் ரொட்டி போதுமானது என்பது பிரபலமான நம்பிக்கை. ஆனால், இதற்கு சிறந்த புரத காப்புப்பிரதி தேவை.பக்கத்தில் 75 கிராம் டோஃபு புர்ஜியைச் சேர்க்கவும், தக்காளி, மஞ்சள் மற்றும் ஜீராவுடன் வதக்கப்பட்ட நொறுக்கப்பட்ட டோஃபுவுடன் தயாரிக்கப்படுகிறது.2 பெசன் டோஸ்ட்கள் = 6 ஜி75 ஜி டோஃபு = 12 ஜிபக்க தயிர் = 5 ஜிமொத்தம்: 23 கிராம் புரதம்இது வழக்கமான சிற்றுண்டி மற்றும் ஜாம் காலை அல்ல. இது சுவையானது, நிரப்புதல் மற்றும் மென்மையான டோஃபு துருவல் மூலம் ஊட்டமளிக்கிறது, இது கிரீம் மற்றும் திருட்டு சேர்க்கிறது.
புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார். மரபணு திருத்தம் எனப்படும் 21-ம் நூற்றாண்டு இனப்பெருக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலநிலை மாற்ற பாதிப்புகளை தாக்குப் பிடிக்கும் வகையில் இரு புதிய நெல் ரகங்களை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இவற்றை உருவாக்கியுள்ளனர். வெளி மரபணு சேர்க்கப்படதால் இவற்றை மரபணு மாற்ற ரகமாக கருத முடியாது. இதன் மூலம் மரபணு திருத்த அரிசி ரகங்களை உருவாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. டிஆர்ஆர் தன் (கமலா), பூசா டிஎஸ்டி 1 என்ற இந்த புதிய நெல் ரகங்களை டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங்…
Last Updated : 06 May, 2025 11:29 AM Published : 06 May 2025 11:29 AM Last Updated : 06 May 2025 11:29 AM அனில் ரவிப்புடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதன் பட பூஜை முடிந்து முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூனில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக, இப்படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இன்னொரு நாயகியாக நடிக்க கேத்ரீன் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதர கதாபாத்திரங்கள் அனைத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டன. இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, சிரஞ்சீவி உடன் நடிக்கும்…
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர், நிகழ்ச்சியில் பேசியதாவது: வணிகர் தினமான மே 5-ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படும் வகையிலான அறிவிப்பு, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வணிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக தற்போது ரூ.3 லட்சம் வழங்கப்பட்ட வருகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அமைதியான மாநிலத்தில்தான்…
பதினேழு தலைவர் எஸ்.சூப்ஸ், அதன் உண்மையான பெயர் சோய் சியுங்சியோல், 2025 மெட் காலாவில் அலைகளை உருவாக்கியது, முதல் முறையாக பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், தென் கொரியாவின் பெருமையின் அடையாளமாகவும். முதலாளிக்கான உலகளாவிய தூதராக தனது சமீபத்திய அறிவிப்பிலிருந்து புதிதாக, ராப்பர் நியூயார்க் நகரில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகத்திற்கு வந்தார், இது ஒரு தைரியமான, ஹான்போக்-ஈர்க்கப்பட்ட அலங்காரத்தில் உடனடியாக கவனத்தை ஈர்த்தது. அவரது இருப்பு உலகின் மிகப்பெரிய பாணி நிலைகளில் ஒன்றில் கே-பாப் மற்றும் கொரிய பேஷன் செல்வாக்கிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தைக் குறித்தது.மெட் காலா 2025 இல் எஸ். சப்ஸின் அலங்காரத்தின் கூடுதல் விவரங்கள் எஸ்.சூப்ஸ் ஒரு அடுக்கு, ஹான்போக்-ஈர்க்கப்பட்ட குழுமத்தை அணிந்திருந்தார், இது ஒரு லேசான சாம்பல், சாடின் போன்ற மேல், உலர்த்தப்பட்ட நெக்லைன், இருண்ட சாம்பல், கட்டமைக்கப்பட்ட உடுப்புடன் ஜோடியாக இருந்தது. அதன் மேல், அவர் ஆழமான சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் பாயும் இருண்ட கோட்டை…
வயநாடு: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது வயநாடு மக்களவை தொகுதிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்காவிடம் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, “சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு அளிப்பது என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார். முன்னதாக, வயநாடு தொகுதியில் உள்ள சுல்தான் பாதரி நகரில் உள்ள வனத்துறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை பிரியங்கா தொடங்கி வைத்தார். இதற்காக மக்களவை…