புதுடெல்லி: எந்தவொரு சைபர் அச்சுறுத்தல்களையும் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வர்த்தக உறுப்பினர்களுக்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், “ரான்சம்வேர், விநியோகச் சங்கிலி ஊடுருவல், டிடிஓஎஸ் தாக்குதல், வலைத்தள சிதைப்பு, மால்வேர் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்கள் குறித்து சந்தை பங்கேற்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இடர்பாடுகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும். நமது நாட்டின் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறையில் செயல்படும் அமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக இண்டியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்) சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது” என பிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து வங்கிகள் தங்களது இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள தங்களது கிளைகளில் வங்கிகள்…
Author: admin
சைக்கிள் நெருக்கடிகள் உங்கள் மேல் மற்றும் கீழ் ஏபிஎஸ் மற்றும் உங்கள் சாய்வுகளை (பக்க தசைகள்) குறிவைக்கின்றன, இது தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதை எப்படி செய்வது:உங்கள் முதுகில் படுத்து, கால்களைத் தூக்கி, 90 டிகிரி கோணத்தில் முழங்கால்களை வளைக்கவும்.உங்கள் கைகளை உங்கள் தலையின் பின்னால் வைக்கவும்.உங்கள் வலது காலை நேராக்கும்போது உங்கள் வலது முழங்கையை உங்கள் இடது முழங்காலை நோக்கி கொண்டு வாருங்கள்.உங்கள் இடது முழங்கையை உங்கள் வலது முழங்காலுக்கு கொண்டு வருவதன் மூலம் பக்கங்களை மாற்றவும்.30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை சைக்கிள் ஓட்டுதல் இயக்கத்தில் மாற்றுவதைத் தொடரவும்.இந்த உடற்பயிற்சி உங்கள் மையத்தை தொனிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது. மேலும் ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் உஷார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால்…
ஜெய்சல்மார்: பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயணித்த எஃப் 16 ரக விமானத்தை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய நிலையில், அதிலிருந்து வெளியேறிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சல்மாரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்டதாக தகவல். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லையோர பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் ‘யாரும் வெளிவர வேண்டாம்’ என எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல். முன்னதாக, வியாழக்கிழமை இரவு 8.20 மணி அளவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரை குறிவைத்து இந்த தாக்குதல் இருந்தது. இதை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு கருவி மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜம்மு விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அவரிடம் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதில் தாக்குதலை இந்தியா கொடுக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாது கத்தார், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். “அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உடன் பேசினேன். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதியை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு இந்தியா தகுந்த பதிலடியை கொடுக்கும் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டி பேசியுள்ளேன். அதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துள்ளேன்” என கூறியுள்ளார்.…
கிழக்கு இங்கிலாந்தின் டெர்பியில் உள்ள லாயிட்ஸ் வங்கி கிளைக்குள் 37 வயதான இந்திய வம்சாவளி மனிதரான குர்விந்தர் ஜோஹால் செவ்வாய்க்கிழமை பிபிசி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் செயின்ட் பரந்த பகலில் நடந்தது. பீட்டர்ஸ் தெரு. பிற்பகல் 2:30 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன, ஆனால் விரைவில் ஜோஹல் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.டெர்பியில் உள்ள நார்மண்டனைச் சேர்ந்த ஹேபே கப்டிராக்ஸ்மான் நூர் என்ற 47 வயதான சோமாலிய நபர் மீது ஜோஹலின் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நூர் தெற்கு டெர்பிஷைர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வீடியோ சோலிங்க் வழியாக ஆஜரானார், சோமாலிய மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மட்டுமே பேசினார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார், அடுத்ததாக டெர்பி கிரவுன் கோர்ட் முன் ஆஜர்படுத்தப்படுவார்.கிழக்கு மிட்லாண்ட்ஸின் துணை தலைமை கிரீடம் வழக்கறிஞர் சமந்தா மேலோட்டமானவர், “டெர்பிஷைர் கான்ஸ்டாபுலரி சமர்ப்பித்த ஆதாரங்களை மறுஆய்வு செய்த பின்னர், 37 வயதான குர்விந்தர் ஜோஹலின் மரணம் தொடர்பாக ஒரு…
புதுடெல்லி: வியாழக்கிழமை இரவு இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு, பொருட் சேதம் ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளரின் எக்ஸ் தள கணக்கில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு சுமார் 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லை பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது. அந்த முயற்சியை நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) ஏற்ப முறியடிக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகள் அல்லது பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயார் நிலையில் உள்ளது என அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள…
தரம்சாலா: இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு அத்துமீறி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்த சூழலில் தரம்சாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் வியாழக்கிழமை 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா, 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங், 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ரேயஸ் ஐயர், பேட் செய்ய வந்திருந்த நிலையில் மைதானத்தில் இருந்த மூன்று கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டன. தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க குவிந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தான் எதிரான கோஷத்தை மைதானத்துக்கு வெளியில் பார்வையாளர்கள் எழுப்பினர். இந்த ஆட்டம்…
ஸ்ரீநகர்: ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல். இருப்பினும் இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதை முறியடித்துள்ளது இந்திய பாதுகாப்பு படை. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு இயந்திரம் மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவல். எல்லை பகுதிகளில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி என தகவல். உதாம்பூர்,…
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பிரபலமான பானமாக இருக்கும் மவுண்டன் டியூ, ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த பானத்தில் புரோமினேட் காய்கறி எண்ணெய் (பி.வி.ஓ) உள்ளது, இது நினைவகம் மற்றும் தோல் பிரச்சினைகள் போன்ற சுகாதார கவலைகளுடன் தொடர்புடையது. மேலும், பானத்தின் தனித்துவமான நிறம் மஞ்சள் 5 எனப்படும் சாயத்திலிருந்து பெறப்பட்டது, இது குழந்தைகளில் அதிவேகத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.