சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 10) இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்களின் உடனடி வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பேரணியல் கலந்துகொள்ளும் பொதுமக்களும், தங்களுக்குத் தேவையான குடிநீர் கொண்டுவருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர்புரிந்துவரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் கடற்கரைச் சாலையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, இன்று (மே 10) மாலை 5 மணிக்கு சென்னை கடற்கரை சாலையில் காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் படைவீரர்கள்,…
Author: admin
சண்டிகர்: இந்தியா – பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சண்டிகர் நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் தொகுதி சிவில் பாதுகாப்பு தன்னார்வளர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி தாகூர் அரங்கில் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் விரைவில், செக்டார் 17-ல் உள்ள திரங்கா பூங்காவில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த பயிற்சி அமர்வுக்கு சரியான நேரத்திலான உங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகும்.” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக இணைந்து, அவசரகால முன்தயாரிப்புகளுக்கு உதவும் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களாக பதிவுசெய்ய பெரும் அளவிலான இளைஞர்கள் இன்று சண்டிகரில் திரண்டனர். தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர்.…
பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்துக்கு ‘டூட்’ (DUDE) எனத் தலைப்பிடப்பட்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். இதனை சுதா கொங்காராவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கி வந்தார். இப்படத்தின் பூஜையுடன், முதல் காட்சி வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் படத்துக்கு ‘டூட்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் தீபாவளி வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக நிக்கத் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், ஒரே சமயத்தில் தமிழ்,…
சென்னை: “வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள், “சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமை எரிசக்தியை பயன்படுத்துமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, தமிழக அரசு பசுமை எரிசக்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது சூரியசக்தி மின்னுற்பத்தி நிறுவுதிறன் 10 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. எனினும், 12 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு நிறுவுதிறன் அமைப்பதற்கான போதிய இடவசதி உள்ளது. ஒரு மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மேலும், காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கு, காற்றாலை சீசன் ஒருசில மாதங்கள் மட்டுமே நிலவுவதால், அதை விட சூரியசக்தி மின்னுற்பத்தி ஓராண்டில் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், சூரியசக்தி மின்னுற்பத்திக்கான…
இலகுரக, தென்றல் மற்றும் நுட்பமான கவர்ச்சியான, சந்தேரி புடவைகள் கோடைகால நிகழ்வுகள் மற்றும் பகல் செயல்பாடுகளுக்கு ஏற்றவை. பட்டு மற்றும் பருத்தியின் கலவையுடன் தயாரிக்கப்பட்டவை, அவை பெரும்பாலும் நாணயங்கள், பூக்கள் மற்றும் மயில்கள் போன்ற மையக்கருத்துகளை கோல்டன் ஸாரியில் பிணைக்கின்றன. அவர்களின் நேர்த்தியான எளிமை குறைவான அழகை விரும்புவோருக்கு முறையிடுகிறது. குறைவான கனமான ஆனால் இன்னும் பாரம்பரியமாக பணக்கார ஒன்றை விரும்பும் என்.ஆர்.ஐ.க்களுக்கு, சாண்டரிஸ் சரியானவர். அவர்கள் நன்றாகப் பயணம் செய்கிறார்கள், அழகாக வரைகிறார்கள், அரை முறையான சந்தர்ப்பங்கள், கோயில் வருகைகள் அல்லது வெளிநாடுகளில் கலாச்சார விளக்கக்காட்சிகளுக்கு கூட சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 பாதுகாப்பு கவசத்தை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி ஐந்து எஸ்400 பாதுகாப்பு கவசங்களை ரஷ்யா வழங்க வேண்டும். இதுவரை மூன்று எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள இரண்டு எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் அடுத்த ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் இந்திய விமானப் படையின் எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் துவம்சம் செய்து வருகின்றன. எஸ்400 வான் பாதுகாப்பு கவசத்தில் 91என்6இ ரக ரேடார் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ரேடாரின் மூலம் 1,000 கி.மீ. தொலைவு வரை இலக்குகளை கண்காணிக்க முடியும். குறைவான தொலைவு (40 கி.மீ.) , நடுத்தர தொலைவு (120 கி.மீ),…
புதுச்சேரி: “போர்க் காலத்தில் ரெஸ்டோ பார்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதிப்பது தேசப்பற்று மிக்க மக்களின் நெஞ்சில் ஈட்டிகொண்டு துளைப்பது போல் உள்ளதாகவும், போர் நடைபெறும் வேளையில், வரும் 20-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டம் அவசியமற்ற ஒன்றாகும்,” என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவர் நலமுடன் வாழவும், எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற வேண்டியும் புதுச்சேரி அதிமுக சார்பில் மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை இன்று (மே 10) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் அக்கட்சியினர், 1008 தேங்காய் உடைத்து தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சுப்பையா சாலையில் இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும்…
பிரபலமான இன்னும் இழந்த இந்திய நகைகளைப் பார்ப்போம்.
இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான ‘ஆகாஷ்தீர்’, பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்கள் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் பரஸ்பரம் அதிதீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் ட்ரோன், ஏவுகணைகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படை தளங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இவை அனைத்தும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: இஸ்ரேல் ராணுவம் சார்பில் உள்நாட்டு தயாரிப்பான ‘அயர்ன் டோம்’ மற்றும் அமெரிக்கதயாரிப்பான தாட் ஆகிய வான்வழி பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரேல் வான் எல்லைக்குள் எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்கள்,…
இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். அதற்கு, “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம்.” என்று இஷாக் தார் தெரிவித்துள்ளார். ‘சீண்டும் பாகிஸ்தான்’ – முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று (மே 10) நடைபெற்றது. அதில் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இதற்கு இந்தியா பொறுப்புடனும், அளவிடப்பட்ட முறையிலும் பாதுகாப்புக்கான எதிர்வினையை ஆற்றி உள்ளது. பாகிஸ்தான் இந்திய…