பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பவர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் என இலவச ஐஏஎஸ் பயிற்சியாளரும், கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை தலைவருமான பி.கனகராஜ் கூறுகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: “பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பைப் பொறுத்தவரையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முக்கிய பாடமாக உள்ளது. யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வில் அரசியல் அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்கள் உள்ளது. முதன்மைத் தேர்வில் பொது அறிவு இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்கள் வருகிறது. பொது கட்டுரை தாளில் 250 மதிப்பெண் வருகிறது. சிவில் சர்வீஸ் போட்டி தேர்வு நேர்காணலில் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படும். சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் விருப்ப பாடமாக அரசியல் அறிவியலை…
Author: admin
வாஷிங்டன்: “இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் அளித்துள்ளன. இரு நாடுகளும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சி: இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா இன்று வலியுறுத்தியது. முன்னதாக, “போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார். கூடவே, பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக்…
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனை கணக்கில் கொண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. தற்போது சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். 90-களில் நடக்கும் கதை என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக்குழு. ‘ஃப்ரீடம்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
கிருஷ்ணகிரி: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும், என பர்கூரில் அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில பட்டியலில் இருந்த கல்வியை, இந்திராகாந்தி ஆட்சியில் தான் மத்திய அரசு பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அதனை, இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. அதிமுக கொள்கை ரீதியாக நீட் தேர்வு வேண்டாம் என்றாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறோம். இதனை தவிர்த்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதால், அது மத்திய அரசின்…
உஜாலா சிக்னஸ் மருத்துவமனைகளின் ஆலோசகர் நுரையீரல் நிபுணர் டாக்டர் வசீம் உட் தின் கூற்றுப்படி, “முதுகெலும்புக்கு முதுகெலும்பு சீரமைப்பை ஆதரிப்பது மற்றும் குறைந்த முதுகுவலியை நிவர்த்தி செய்வது போன்ற சில நன்மைகள் உள்ளன. இருப்பினும், இது குறட்டை அதிகரிக்கும் மற்றும் தூக்கத்தை தூக்கத்திற்கு ஆளாக்கும் மக்களில் காற்றுப்பாதை அடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும், இது சூதாட்ட சிரமங்களுக்கு குறைவானதாக இருக்கும்.
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் 26 இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படைத் தளங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் லூனியில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை ஜம்மு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அழித்தனர். மேலும், பஞ்சாபில் உள்ள பாகிஸ்தானின் சர்கோதா விமானப்படை தளத்தின் மீது இந்தியா ஒரு சக்திவாய்ந்த பதிலடி தாக்குதலை நடத்தியது. மேலும், இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில், ரஹிம் யார் கான் விமானநிலையம் முற்றாக சேதமடைந்தது. அதோடு,…
தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபு, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்களை கற்பதால் ஆசிரியர் துறையில் வேலைவாப்பு பெறலாம். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார் துறையிலும் நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் துறை மட்டுமல்ல ஊடகத் துறை, அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை என ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்புகள் உள்ளன. அடிப்படையான பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம் பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்தம், செய்திகளைச் சேகரித்தல், தொகுத்து வழங்குதல் என காட்சி ஊடகங்களில் திரைக்கு முன், பின் வேலைவாய்ப்புகள் உள்ளன. எழுத்து சார்ந்து மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் சாதிக்கின்றனர். பி.ஏ. பட்டப் படிப்போடு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த…
‘ஒரு நொடி’ படக்குழுவினரின் அடுத்த படமான ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் தொடங்கினார்கள். இதன் படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹாரர் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த தலைப்பை மாலை 6 மணி, 6 நிமிடங்கள், 6 நொடிக்கு வெளியிட்டார்கள். இப்படம் குறித்து இயக்குநர் பி.மணிவர்மன், “முந்தைய ‘ஜென்ம நட்சத்திரம்’ போன்றே இந்தப் படமும் பேசும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான தலைப்பு அதன் நிஜ ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். இந்தப் படத்தை பார்க்கும்போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள…
புதுச்சேரி: சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு நாளை (மே 11) மாமல்லபுரம் அருகே நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வழியாக வருவோர் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க புதுச்சேரி கலால்துறை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி கலால்துறை இணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரியில் உள்ள சாராயம், கள், பார் உட்பட அனைத்து மது விற்பனைக் கூடங்களையும் நாளை (மே 11) மதியம் 1 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ககும் வகையில் இந்த தடுப்பு நவடிக்கை எடுக்கப்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய ஆயுதப்படைகள், கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில், பஹவல்பூரில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மையம், முரிட்கே பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தளம் ஆகியவையும் அடங்கும். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹமது ஆகியவற்றின் முக்கிய நபர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலில், சில முக்கிய பயங்கரவாதிகள்…