Author: admin

சைனூசிடிஸ் பரனசல் சைனஸைக் கொண்டிருக்கும் சளி சவ்வு வீக்கத்திற்கு செல்கிறது. இது பெரும்பாலும் பொதுவான குளிர் மற்றும் பொதுவான நோய்த்தொற்றுகளைப் பின்பற்றுகிறது. சைனசிடிஸின் அறிகுறிகள் தும்மல், மூக்கு ஒழுகுதல், ஒன்று அல்லது இரண்டின் நாசியின் அடைப்பு, தலைவலி மற்றும் தலையைச் சுற்றியுள்ள அழுத்தம்.நாசி சுத்திகரிப்பின் ஒரு பாரம்பரியமான நடைமுறையான ஜால் நெட்டி, இது நாசி சளியை அகற்றி வடிகட்டுகிறது மற்றும் சைனஸ்களை ஒளிபரப்புகிறது என்பதால் மிகவும் நன்மை பயக்கும். இது ஒரு சுத்திகரிப்பு நுட்பமாகும், இது நாசி பத்திகளை NETI பானையைப் பயன்படுத்தி மந்தமான உமிழ்நீர் நீரில் கழுவுவதை உள்ளடக்கியது. இது சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கான தடைகளைத் துடைக்கிறது, மாசுபடுத்திகள், மகரந்தம் மற்றும் பாக்டீரியாவை நீக்குகிறது, மேலும் ஒவ்வாமை, சளி மற்றும் சைனசிடிஸ் ஆகியவற்றுடன் உதவுகிறது. நிபுணர் சொல்வது இங்கேஅக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனர் யோகா குரு, இமயமலை சித்தா அக்ஷரின் கூற்றுப்படி, “இந்த நடைமுறை சுவாச நோய்த்தொற்றுகளின் அதிர்வெண்ணைக் குறைக்கிறது,…

Read More

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்ற தகவல் களத்தில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. போர் பதற்றத்தை அடுத்து முன்னெச்சரிக்கை கருதி இந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தடைகளும் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று காலையில் திரும்ப பெற்றுள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இன்று (மே 11) காலை முதல் ட்ரோன் தாக்குதல், குண்டு வீச்சு போன்ற எந்தவித தாக்குதலும் இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள…

Read More

கும்பகோணம் தனி மாவட்ட அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தனி மாவட்டம் அறிவிக்கப்படவில்லை என கும்பகோணம் பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, கோட்டம், வட்டம், மக்கள் தொகை, பரப்பளவு என ஒரு மாவட்டத்துக்கு தேவையான அம்சங்கள் இல்லாததால், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வழிவகை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், கும்பகோணம் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட அறிவிப்பு இல்லை ஏன்?: கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்பதில் உள்ள சிக்கல்…

Read More

தாய்மார்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அவர்கள் துணிச்சலானவர்கள் மற்றும் தன்னலமற்ற மனிதர்கள், அவர்கள் பாதுகாத்து, நேசிக்கிறார்கள், கவனித்துக்கொள்கிறார்கள், மேலும் பல. அன்னையர் தினம், அவர்களின் தன்னலமற்ற அன்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாட, இங்கே இலக்கியத்திலிருந்து தாய்மார்கள் மீது 10 சின்னச் சின்ன வரிகளைக் குறிப்பிடுகிறோம்.

Read More

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை, மாறாக அது 78 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார். இதுகுறித்து மணிஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் உள்ள யாராவது அவர்களது அதிபர் ட்ரம்புக்கு காஷ்மீர் பிரச்சினை 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை என்று தீவிரமாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். காஷ்மீர் பிரச்சினை கடந்த 1947 அக்.22-ல் தொடங்கியது. 78 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்த போது அது உருவானது. பின்பு 1947 அக்டோபர் 26-ல் மகாராஜா ஹரி சிங் அதனை (காஷ்மீர்) இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளும் அடங்கும். இந்த எளிய உண்மையை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா?” என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின்…

Read More

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கக்கூடிய தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது. (மோதல் தொடர்ந்திருந்தால்) மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம்! உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் வீரதீரமான முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக…

Read More

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே அர்ச்சகர்கள் மூலம் கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, காலை 4:20 மணியிலிருந்து 6 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு வழிபாடுகளுக்கு அடுத்து வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நகரில் உள்ள முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா வந்தார். இதில்,…

Read More

(பட வரவு: Pinterest) சந்தையில் கே-பியூட்டி தயாரிப்புகள் அதிகரித்து வருவதால், இன்றைய உலகில் ஒரு சில பெண்கள் தங்கள் தோலுக்கு இயற்கை சமையலறை ஸ்டேபிள்ஸின் நன்மைகளை நம்புகிறார்கள். இயற்கை பொருட்கள் எப்போதுமே தோல் பராமரிப்புக்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகும்.மக்கள் தங்கள் தோலுக்கு பெசன், பால், மஞ்சள் மற்றும் பலரைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், தோலில் மசூர் டாலின் நன்மைகள் பற்றி பலருக்கு முற்றிலும் தெரியாது. இந்த குறிப்பிட்ட எண்ணெயை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் இணைப்பதன் மூலம், நீங்கள் ஒரு கதிரியக்க மற்றும் ஆரோக்கியமான நிறத்தைப் பெறலாம். தோலில் மசூர் டாலின் சில நன்மைகளைப் பார்ப்போம்.தோல் சுத்திகரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களுடன் செறிவூட்டப்பட்ட இது ஒரு பயனுள்ள சுத்திகரிப்பு முகவரைப் போல செயல்படுகிறது, இது அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளிலிருந்து விடுபடுகிறது. மசூர் தால் ஃபேஸ் பேக் அனைத்து அழுக்குகளையும் ஊறவைத்து, மென்மையான எக்ஸ்போலியேட்டரைப்…

Read More

தன்னைப் பற்றிய புரிதல், பணி வாழ்க்கையைத் தேர்வு (Career Selection) செய்வதில் மிக முக்கியமானது. உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்து படிக்கும் போதும், அதன் பிறகு அது தொடர்புடைய பணிக்கு செல்லும் போதும் உங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி சாதனைகள் படைக்க முடியும். உளவியலாளர் பிராங்க் பார்சன் கருத்துப்படி, பணி வாழ்க்கையைத் தேர்வு செய்வதன் மூன்று முக்கிய காரணிகளுள் ஒன்று தன்னைப் பற்றி அறிதல் ஆகும். தன்னைப் பற்றிய புரிதல் மற்றும் படித்து முடித்த பின்பு செய்யப்போகும் வேலையை பற்றிய புரிதல், இவை இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பே வாழ்க்கைப் பணியை (Career Choice) தேர்வு செய்தல் என்கிறார் பிராங்க் பார்சன். ஆய்ந்தறிந்து இதனை அறிவியல் பூர்வமான உளவியல் தேர்வுகள் (Psychometric Test) மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்துதலே கரியர் கவுன்சிலிங். இதுகுறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் எம்.கருணாகரன் கூறியது:…

Read More

சென்னை மாநகரத்துக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் அருண் நேற்று கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சந்தேக நபர்களைக் கண்டறிய மக்களோடு மக்களாக போலீஸார் மப்டி உடையிலும், சீருடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை முழுவதும் வாகன சோதனையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரத்துக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எந்தவொரு அச்சுறுத்தலும் வரவில்லை. நேற்று சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக வரும் வெடிகுண்டு மிரட்டல் உண்மையா…

Read More