புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பிறகு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த 10-ம் தேதி மாலை ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது 19 நாட்கள் பதற்றத்துக்குப் பின் எல்லையில் மோதல்கள் அற்ற இரவு நீடித்ததாகவும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மே-11 ஆம் தேதி இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய…
Author: admin
தருண் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்துள்ள மலையாள படம், ‘துடரும்’. ஏப். 25-ம் தேதி வெளியான இந்த கிரைம் டிராமா திரைப்படத்தில் பர்ஹான் ஃபாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பாப்பு, தாமஸ் மாத்யூ, கிருஷ்ண பிரபா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை ரூ.190 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் அசத்தியுள்ளது. கேரள மாநிலத்திலும் அதிகம் வசூலித்துள்ளது. இதனால், இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களில் கேரளாவில் மட்டும் அதிகம் வசூலித்த படமாக ‘துடரும்’ இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதிக வசூல் செய்த மலையாளப் படமான ‘2018’ படத்தின் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. மோகன்லாலின் ‘எல் 2: எம்புரான்’ (ரூ.265.5 கோடி), மஞ்சும்மள் பாய்ஸ் (ரூ.240 கோடி) ஆகிய படங்களின் வசூலை அடுத்து மூன்றாவது இடத்தில் துடரும் உள்ளது. இந்தப் படம் தமிழில் ‘தொடரும்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
சென்னை: “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர்நாள் வாழ்த்துகள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி,மதம், நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாள் வாழ்த்துகள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக – ‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரே, செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடும்பத்தில் பிறந்தவர். ‘இறைவனால் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகவே’ எண்ணி செவிலியர் பணியை…
நாம் உடல் ரீதியாக எப்படி இருக்கிறோம் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகையில், நாம் மனதளவில் எப்படி உணர்கிறோம் என்பதைப் பற்றி எப்போதாவது சிந்திக்கிறோம். நினைவக மூடுபனி, குழப்பம், தகவல்களைத் தக்கவைக்க இயலாமை போன்ற நோய்கள் உண்மையானவை, எனவே நீண்ட கால நன்மைக்காக நம் மூளையையும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.நல்ல ஊட்டச்சத்து அவசியம் என்றாலும், அது போதாது, மேலும் ஒருவர் தங்கள் உணவை வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவற்றுடன் கூடுதலாக வழங்க வேண்டும். உங்கள் நினைவகத்தை மேம்படுத்த சில இயற்கை கூடுதல் இங்கே …ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள். அவை மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸாகவும் கிடைக்கின்றன. இந்த கொழுப்புகள் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம், ஏனெனில் அவை மூளை செல்கள் தொடர்பு கொள்ளவும் வளரவும் உதவுகின்றன.ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது நினைவகத்தை மேம்படுத்தலாம் என்று…
ஒரு மைல்கல் கண்டுபிடிப்பில், நாசா ஆராய்ச்சியாளர்கள் ஒரு தரிசு, சூடான பாலைவன கிரகம் என்று நம்பப்படும் வீனஸ் உண்மையில் புவியியல் ரீதியாக செயலில் இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும் தரவை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய கண்டுபிடிப்பு கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் டெக்டோனிக் இயக்கத்தைப் பொறுத்து அதன் செயலற்ற தன்மையைப் பற்றிய நீண்டகால கோட்பாடுகளை முறியடிக்கிறது. மேம்பட்ட மாடலிங் நுட்பங்களைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக பழமையான ரேடார் தரவை மறுபரிசீலனை செய்தனர் வீனஸில் டெக்டோனிக் செயல்பாடுசெயலில் உள்ள கிரகத்தை பரிந்துரைக்கிறது. இது வீனஸின் நமது கருத்தாக்கத்தை திருத்துவதோடு மட்டுமல்லாமல், பூமியின் புவியியல் செயல்முறைகளின் மறு விளக்கத்தையும் புதுப்பிக்கிறது, மேலும் கிரக பரிணாம வளர்ச்சியை நோக்கிய புதிய முன்னோக்குகளையும், வாழ்விடத்தைத் தக்கவைக்க தேவையானவற்றையும் அளிக்கிறது.நாசா ஆய்வு வீனஸின் மேற்பரப்பில் டெக்டோனிக் செயல்பாட்டின் ஆதாரங்களை வெளிப்படுத்துகிறதுபல தசாப்தங்களாக, வீனஸ் எந்தவொரு உள் செயல்பாடும் இல்லாமல் ஒரு திடமான, அசையாத மேலோடு இருப்பதாக நம்பப்பட்டது. அடர்த்தியான கார்பன் டை…
புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் (மே.12) ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக்.…
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், கோலி தனது விருப்பத்துக்கு முன்னிலை கொடுத்து ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக கோலி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம் என்னை இவ்வளவுதூரம் கூட்டிச் செல்லும் என்று நான் நினைத்ததில்லை. அது என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, என்னை செதுக்கி, எனக்கு பல பாடங்களைக் கற்றுக்…
மலையாள நடிகரான விநாயகன், தமிழில், சிலம்பாட்டம், மரியான், காளை, திமிரு, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ள விநாயகன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் ஏற்கெனவே கைதும் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புக்காகக் கொல்லம் சென்ற விநாயகன், அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் பிரச்சினை செய்துள்ளார். அங்குள்ள ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விநாயகனை அஞ்சலுமூடு போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர் போலீஸ்காரர்களிடமும் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று (மே 11) இரவு நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார். தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா – 2025’ விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நேற்று (மே 11) இரவு நடைபெற்றது. முன்னிஜி நாயக் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விழாக்கள் சிறப்பாக நடைபெறும். அதேபோன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்றது. மாவட்டம் பிரிந்த பிறகும், தொடர்ந்து நடைபெறுவது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது. பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள திருநங்கையர்களை அன்புடன் வரவேற்கிறோம். மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று…
உங்கள் ஆரோக்கியத்திற்கு யோகா நல்லது என்று சொல்வது ஒரு குறை. யோகா, மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் சேர்ந்து, உங்கள் உடல் உடலுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. எந்த நேரமும் யோகா செய்ய ஒரு நல்ல நேரம் என்றாலும், காலையில் அதை முதலில் செய்வது பல சுகாதார நன்மைகளை அறுவடை செய்கிறது. அது மட்டுமல்லாமல், சில ஆசனங்கள், காலையில் தொடர்ந்து செய்யப்படும்போது, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், பதட்டம் போன்ற பல வாழ்க்கை முறை நிலைமைகளைத் தணிக்கும். இங்கே 5 ஆசனங்கள் உள்ளன …