Author: admin

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் விமானப்படை மையங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்திய வெற்றிகரமாக முறியடித்தது. இதில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. 600 கி.மீ தொலைவில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள கண்காணித்து 400 கி.மீ தூரம் வரை எஸ்-400 ஏவுகணைகள் வானில் இடைமறித்து தாக்கின. போர் விமானம், ஏவுகணை, ட்ரோன் என எதுவந்தாலும், 4 வித ஏவுகணைகள் மூலம் இது நடுவானில் இடைமறித்து அழிக்கும். இதனால் எஸ்-400 ஏவுகணை யூனிட்டுகளை இந்தியாவுக்கு கூடுதலாக விநியோகிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

Read More

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன. மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 7.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மலர் மாடம் உட்பட…

Read More

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர மே 28 வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்ப கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் மே 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பட்டப்படிப்புுகளுக்கு விண்ணப்பிக்க…

Read More

பார்கின்சன் நோய் என்பது வேறுபட்ட மூளைக் கோளாறு ஆகும், இது முதன்மையாக இயக்கத்தை பாதிக்கிறது. இது வழக்கமாக நடுக்கம் (நடுக்கம்), தசை விறைப்பு, மெதுவான இயக்கங்கள் மற்றும் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புடன் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது. இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான வேதியியல் டோபமைனை உருவாக்கும் நரம்பு செல்கள் இழப்பால் பார்கின்சன் ஏற்படுகிறது. அல்சைமர்ஸைப் போலல்லாமல், பார்கின்சன் பெரும்பாலும் 50 முதல் 65 வயதுக்கு முன்னதாகத் தொடங்குகிறார். பார்கின்சன் முக்கியமாக இயக்கத்தை பாதிக்கும் போது, ​​சிலர் டிமென்ஷியாவை உருவாக்குகிறார்கள், பின்னர் பார்கின்சன் நோய் டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த டிமென்ஷியா சிக்கல் தீர்க்கும், சிந்தனையின் வேகம், நினைவக மீட்டெடுப்பு மற்றும் மனநிலை ஆகியவற்றை பாதிக்கிறது. இது பெரும்பாலும் மாயத்தோற்றம் மற்றும் பிரமைகளை உள்ளடக்கியது, அவை அல்சைமர் டிமென்ஷியாவில் குறைவாகவே காணப்படுகின்றன.

Read More

சென்னை: தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் வெற்றி கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் ‘மூவர்ண கொடி பேரணி’ சென்னை புதுப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதுப்பேட்டை சித்ரா தியேட்டர் அருகில் நேற்று மாலை தொடங்கிய பேரணி…

Read More

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 12 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. ஒருசில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மீதும், அந்தமான் கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று (மே 15) முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (மே 15) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (மே 16) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

Read More

ரியாத்: ‘‘இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியா சென்றார். அங்கு சவுதி – அமெரிக்க முதலீடு கூட்டமைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சில நாட்களுக்கு முன் எனது நிர்வாகம், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில் தலையிட்டு வெற்றிகரமாக சமரசம் செய்தது. இருதரப்பு இடையே சிறியளவில் ஏற்பட்ட மோதல், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது. இது தொடர்ந்திருந்தால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர். இதை நிறுத்த நான் வர்த்தக பேச்சுவார்த்தையை பயன்படுத்தினேன். இரு நாட்டு தலைவர்களிடம் நாம் வர்த்தகம் செய்யலாம் என கூறினேன். ‘‘அணு ஆயுத வர்த்தகத்தில் நாம் ஈடுபட வேண்டாம். நாம் அருமையான வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.…

Read More

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் அரசிதழ்களில் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக…

Read More

மதுரை: பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், 4 ஆண்டுகள் இம்சை அரசன் புலிகேசி போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவரது அமைச்சரவையில் ஆஸ்தான கொத்தடிமை ரகுபதி, இத்தனை ஆண்டுகள் முட்டு கொடுத்து, கொடுத்து அதிமுக தொண்டனிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போது தான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கை காட்டவில்லை என்றால், அதிமுக தொண்டன் வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இந்த ரகுபதி எங்கு இருந்திருப்பார்? அவருக்கே தெரிந்து இருக்காது. இவருக்கு அரசியல் வாழ்வளித்த அதிமுக தொண்டனின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியை விடக் கேவலமானவர். தமிழ்நாட்டில் சட்டம்…

Read More

கோவை: விரைவில் தொடங்க உள்ள நடப்புக் கல்வியாண்டில், கோவை மாநகரில் உள்ள 59 மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் புதியதாக தொடங்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 81 ஆரம்பப்பள்ளிகள், 48 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப் பள்ளிகள், 1 சிறப்புப் பள்ளி ஆகியவை உள்ளது. இப்பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். நடப்பு 2025-26-ம் கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்கப்படுவதையொட்டி, மாநகராட்சிப் பள்ளிகளி்ல் மாணவ, மாணவிகள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை…

Read More