ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ கடந்த 12-ம் தேதி அறிவித்தது. திருத்தியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி லீக் ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று 29, 30 மற்றும் ஜூன் 1-ம் தேதியும் இறுதிப் போட்டி 3-ம் தேதியும் நடைபெறுகின்றன. இதனால் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திருப்பி அனுப்ப நடடிவக்கை எடுக்கும்படி ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. சிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 11-ம் தேதி லண்டனில் ஆஸ்திரேலியா…
Author: admin
சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, கீதா கைலாசம், பானுப்பிரியா என பலர் நடித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் மணி இயக்கியுள்ளார். மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி கார்த்திகேயன் மணி கூறும்போது, “ஐடி படித்துவிட்டு அது தொடர்பான வேலையில் இருந்தேன். சினிமா ஆசை சிறு வயதிலேயே இருந்தது. கரோனா காலகட்டத்தில் சங்க இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன். தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகமானது. பின்னர் ‘கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ என்ற புறநானூற்றுப் பாடலை மையமாக வைத்து குறும்படம் ஒன்றை எடுத்தேன். திரைப்பட விழாக்களில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. பிறகு அமெரிக்க நண்பர் ஒருவர் படம் எடுக்க உதவுவதாகச் சொன்னார். அவர் உதவியுடன் ‘மெட்ராஸ்…
சென்னை: பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி, தற்போது, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாற்றிய அழகப்பன் மோசடி செய்து அபகரித்ததாகவும், சட்ட விரோதமாக அனுமதி பெற்று அங்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் காவல் துறையில் சமீபத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், கட்டுமானம் நடைபெறும் இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், தன்னை சிலர் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி புகார் கொடுத்துள்ளார். ‘வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் வாட்ஸ்அப் மூலம் என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர்.…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரபேல் போர் விமான முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்த நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரான்சின் ரபேல் போர் விமானங்களும் முக்கிய பங்கு வகித்தன. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்துக்கு எதிரான லட்சுமண ரேகையைத் தாண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், பாரிஸ் பங்குச் சந்தையில் ரபேல் விமானங்களை தயாரிக்கும் பிரான்சின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவன பங்குகள் விலை 2-வது நாளாக நேற்றும் உயர்ந்தன. வர்த்தகத்தின் இடையே ஒரு பங்கின் விலை 1.5% உயர்ந்து 305 யூரோவாக இருந்தது. கடந்த ஓராண்டில் இந்த பங்கு 43% உயர்ந்துள்ளது.
உலகளவில், இருதய நோய்கள் ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகின்றன, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளது. புரோட்ரோமல் அறிகுறிகள் என அழைக்கப்படும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது மிக முக்கியமானது. மார்பு அச om கரியம், மூச்சுத் திணறல், அசாதாரண சோர்வு, குளிர் வியர்வை, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் மாரடைப்புக்கு வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பு வெளிப்படும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் (சி.வி.டி) இறக்கின்றனர். சி.வி.டி.க்கள் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும், மேலும் ஐந்து சி.வி.டி இறப்புகளில் நான்குக்கும் மேற்பட்டவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக உள்ளன. உலகளவில் மரணத்திற்கு இதய நோய் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், மாரடைப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு தோன்றக்கூடிய பலவீனமான இதயத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை பலர் கவனிக்கவில்லை. மக்கள் மாரடைப்புக்கு வழிவகுக்கும் நாட்கள் அல்லது மாதங்களில் அறிகுறிகளை அனுபவிப்பதாக…
புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு உதவ உளவாளிகளாக செயல்படுபவர்களை ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்கின்றனர். இவர்கள் கிராமம், நகரங்களில் சாதாரண பொதுமக்கள் போல் ஊடுருவி வாழ்கின்றனர். இவர்களில் படிப்பறிவு இல்லாதவர்கள் முதல் அனைத்து வகைப் பிரிவினரும் உள்ளனர். இந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு உதவிகளை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து மாநில அரசு ஒழித்துள்ளது. இவர்கள் உருவாக்கிய போலி இணையதளங்கள் மற்றும் அறக்கட்டளைகள், அவற்றின் நிதி, மத தீவிரவாதம், போலி ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடுருவல் போன்றவற்றை உ.பி. காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 2017 முதல் 8 ஆண்டுகளில் ஸ்லீப்பர் செல்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதால், உத்தர பிரதேசத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த…
பெங்களூரு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் அவர், பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. பெங்களூரு அணிக்கு இந்த ஆட்டம் உட்பட 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் பெங்களூரு அணி ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 3-ம் தேதி சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பீல்டிங்கின்…
இஸ்லாமாபாத்: இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது. அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார். இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர்…
நடிகர் பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்’ பட வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டியூட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டைட்டில் தோற்றம் வெளியிடப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று தெலுங்கு நடிகரும் இயக்குநருமான தேஜ் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “ஒரு வருடத்துக்கு முன்பே ‘டியூட்’ படத்தை அறிவித்து விட்டோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதே தலைப்பை வைத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மைத்ரி போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்த விஷயத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார். தேஜ், கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள படத்துக்கு ‘டியூட்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதை தெலுங்கு,…
திருவாரூர்: நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். இந்நிலையில், தமிழகத்தில் விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்துவதாக கூறி, மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பில் அனுமதி பெற்று, தமிழக அரசிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு தனிநபர் ஒருவர் அனுமதி பெற்றுள்ளார். இவரது நிறுவனத்துக்கு நெல் கொள்முதலில் முன் அனுபவம் கிடையாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணியாளர்கள், கட்டமைப்புகளை பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கின் மூலம்…