புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபட தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலில், பயங்கரவாத கட்டமைப்புகள் பலத்த இழப்பைச் சந்தித்தன. இதையடுத்து, இந்தியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்தும், பொதுமக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் நடந்த இந்த ராணுவ மோதல், பாகிஸ்தான் டிஜிஎம்ஓவின் கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. எனினும், இந்த மோதலின்போது பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள்…
Author: admin
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. முன்னணி எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மார்கன்’. இப்படம் மர்மம் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகும் படம் இது. மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் இதில் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, கலை இயக்குநராக ராஜா, இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இதன் தமிழக விநியோக வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு…
மதுரை: வடகாடு மோதல் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுகோட்டை மாவட்டம் வடகாடு மாரியம்மன் கோயிலில் திருவிழாவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். பட்டியலின சமூக மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் கண்துடைப்பாக 10 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். எனவே, வடகாடு மோதல் தொடர்பாக விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதி செய்யவும், மோதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில்…
நெஞ்செரிச்சல் என்பது உங்கள் மார்பகத்தின் பின்னால் மார்பில் எரியும் வலி. தொண்டை (அமில ரிஃப்ளக்ஸ்) நோக்கி பயணிக்கும் வயிற்று அமிலத்தால் வலி ஏற்படுகிறது. சாப்பிட்ட பிறகு, குறிப்பாக மாலையில், அல்லது படுத்துக் கொள்ளும்போது அல்லது வளைந்தபின் ஹியர்பர்ன் அடிக்கடி மோசமடைகிறார். நெஞ்செரிச்சல் வெளிப்படையான காரணமல்ல, ஆனால் அதை பாதிக்கக்கூடிய சில காரணிகள் உணவுகள் (காபி, தக்காளி, ஆல்கஹால், சாக்லேட் மற்றும் கொழுப்பு அல்லது காரமான உணவுகள் போன்றவை), அதிக எடை, புகைபிடித்தல், கர்ப்பம், மன அழுத்தம், பதட்டம், வயிற்று புண் மற்றும் வயிற்றில் பாக்டீரியா தொற்று ஆகியவற்றாக இருப்பது.
சென்னை: ‘என்னை கணவனாக இல்லை, பொன் முட்டையிடும் வாத்து போலவே அவர் நடத்தினார். காதல் என்கிற பெயரில் என் பணம், சொத்து என எல்லாவற்றையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார்’ என ஆர்த்தி ரவி குறித்து நடிகர் ரவி மோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் நீண்டநாட்களாக மவுனம் காத்து…
ராமேசுவரம்: பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டதால் திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு ராமேசுவரம் வரையிலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரை வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16343) இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் மதுரையில் இருந்து எதிர் மார்க்கத்தில் (வண்டி எண் 16344) திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு ஏசி முதல் வகுப்பு, ஒரு ஏசி இரண்டு டயர் கோச், ஏசி மூன்று டயர் கோச், 13 சிலிப்பர் கிளாஸ் கோச், மூன்று பொது இரண்டாம் வகுப்பு, இரண்டு இரண்டாம் வகுப்பு கோச் என மொத்தம், 23 பெட்டிகளை கொண்டது. இந்த ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பாம்பன் புதிய ரயில்…
ரேகா வெறுமனே ஒரு பெயரை விட அதிகம்; அவர் நேர்த்தியான மற்றும் ஆடம்பரத்தின் நித்திய சின்னம் மற்றும் ஒரு வாழ்க்கை புராணக்கதை. கஞ்சிவரம் புடவைகள் மீதான அவரது ஆர்வம் அவரது மிகவும் தனித்துவமான பேஷன் அறிக்கைகளில் ஒன்றாகும். ஒரு கஞ்சிவாரத்தில் உள்ள ரேகா, அவர் சிவப்பு கம்பளத்தை நடத்துகிறாரா அல்லது ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்கிறாரா என்பது முழுமையான கவிதைகளின் படைப்பாகும். திவாவின் தனித்துவமான பட்டு புடவைகள் நம்மை கவர்ந்த பத்து நிகழ்வுகள் இங்கே.
புல்வாமா: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இன்று அதிகாலையில் ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில் மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், பயங்கரவாதிகளில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஒரு கான்கிரீட் தூணின் பின்னால் பதுங்கியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொலைவில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், பயங்கரவாதிகள் உடைந்த கொட்டகைக்குள் பதுங்கியிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 48 மணி நேரத்தில் காஷ்மீரில் நடந்த இரண்டாவது மோதலாகும். இந்த மோதல் முதலில்…
இஸ்தான்புல்: துருக்கியில் வியாழக்கிழமை நடக்கும் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின், துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை தொடங்கும் என்று ரஷ்யா உறுதி செய்திருந்தது. முன்னதாக முன்நிபந்தனைகள் இல்லாமல் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புதின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விரும்பினால் அவரை நேரடி பேச்சுவார்த்தையில் சந்திக்கத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியிருந்தார். புதன்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் பங்கேற்பது உறுதியான பின்பே,எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை…
பல்வேறு இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பாடல் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் ‘கிஸ்ஸா’ என்ற பாடலில் ‘சீனிவாசா கோவிந்தா’ பாடல் வரிகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருப்பதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப் பாடலை உடனடியாக நீக்கி, ஏழுமலையான் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட், சந்தானம், தி ஷோ பீப்பிள் தயாரிப்பாளர் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். தற்போது…