பெடரல் நீதிமன்றம் இந்திய மாணவர் பிரியா சக்சேனாவை சிறிய போக்குவரத்து மீறல் தொடர்பாக நாடுகடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது (பட கடன்: சென்டர், எக்ஸ்) ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் பாதுகாக்கும் ஆரம்ப தடை உத்தரவை வழங்கியுள்ளது பிரியா சக்சேனாஒரு 28 வயது இந்திய மாணவர் சமீபத்தில் தனது பிஎச்டி இன் முடித்தார் தெற்கு டகோட்டாஇருந்து நாடுகடத்தல் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் (டி.எச்.எஸ்) அவரது விசாவை ரத்து செய்ய முயற்சித்ததைத் தொடர்ந்து.தெற்கு டகோட்டா ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் & டெக்னாலஜியிலிருந்து ரசாயன மற்றும் உயிரியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற சக்சேனா அவளைக் கொண்டிருந்தார் எஃப் -1 விசா (2027 வரை செல்லுபடியாகும்) எதிர்பாராத விதமாக ஏப்ரல் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. புதுதில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மின்னஞ்சல் வழியாக அவர் அறிவிப்பைப் பெற்றார், மேலும் அவரது மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் தகவல் அமைப்பு (SEVIS) பதிவு நிறுத்தப்பட்டது, இது தனது பிஎச்டி பெறும்…
Author: admin
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவர்களுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா அருகே உள்ள நாதர் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போகு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர் ஆசிப் அகமது ஷேக், அமிர் நசிர் வானி மற்றும் யவர் அகமது பட் ஆகியோர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆசிப் அகமது ஷேக் என்பவர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது.…
ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் கின்வென்னுடன் மோதினார். இதில் செங் கின்வென் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலென்காவை தோற்கடித்தார். அரை இறுதி சுற்றில் செங் கின்வென், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதுகிறார். கோ கோ காஃப் கால் இறுதி சுற்றில் 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 5-ம் நிலை…
சென்னை: கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (மே 17) வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தப்பட்டதால் மீண்டும் படத்துக்கான விளம்பரங்களை தொடங்கி இருக்கிறது படக்குழு. அதன் படி நாளை (மே 17) ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மே 24 சென்னையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. படத்தின்…
உதகை: “வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உதகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “உதகை பயணம் சிறப்பாக அமைந்துள்ளது. மக்களை சந்தித்துப் பேச முடிந்தது. அவர்களது கருத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது, சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களின் கருத்தையும் அறிய முடிந்தது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி, அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தலிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என்றார்.
நாம் அனைவரும் சில நேரங்களில் மூளை மூடுபனியை அனுபவிக்கிறோம். இது வழக்கமாக கவலையில்லை என்றாலும் (அவ்வப்போது இருந்தால்), அது மிகவும் வெறுப்பாக இருக்கும், மேலும் தற்காலிகமாக இருந்தாலும் உங்களை கியரிலிருந்து வெளியேற்றலாம். ஆனால் மூளை மூடுபனி என்றால் என்ன, அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறதா?மூளை மூடுபனி முறையான மருத்துவ நோயறிதல் அல்ல என்றாலும், இது மாதவிடாய் நிறுத்தம், தூக்க பிரச்சினைகள், நீண்ட கோவிட் மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்கள் போன்ற பல நிலைமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வு இன்று எவரும் முயற்சி செய்யக்கூடிய மூளை மூடுபனியைக் குறைக்க ஒரு எளிய, விஞ்ஞான ஆதரவு வழியை வழங்குகிறது: மிதமான-க்கு-ஆழமான உடல் செயல்பாடுகளை அதிகரித்தல்.மூளை மூடுபனி என்றால் என்ன?மூளை மூடுபனி ஒரு மேகமூட்டமான மனம் போல உணர்கிறது, ஒரு ஜாம்பி போல சுற்றுவது போல. நீங்கள் கவனம் செலுத்தவோ, விஷயங்களை நினைவில் கொள்ளவோ அல்லது தகவல்களை விரைவாக செயலாக்கவோ போராடலாம். இது யாருக்கும்…
பிரதிநிதி படம் (AI- உருவாக்கிய) ஒரு போக்குவரத்து நிறுத்தத்தின் போது தென்மேற்கு வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு துணைவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு கருப்பு வாகன ஓட்டியின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தவறான மரண வழக்கை 3.5 மில்லியன் டாலருக்கு தீர்த்துக் கொண்டனர். 2021 ஆம் ஆண்டு ஜெனோவா டொனால்ட் இறந்ததில் பணம் செலுத்த கிளார்க் கவுண்டி கவுன்சில் புதன்கிழமை ஒப்புக்கொண்டது என்று கொலம்பியன் தெரிவித்துள்ளது. டொனால்ட் வாஷிங்டனின் சிட்டி ஆஃப் பேட்டில் மைதானத்தில் வசித்து வந்தார், கிளார்க் சவுன்டி ஷெரிப் அலுவலகத்துடன் துணை, சீன் பாயில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 12, இறந்தார். தவறான மரணம், தாக்குதல் மற்றும் பேட்டரி, அலட்சியம் மற்றும் சிவில் உரிமைகள் இழப்பு என்று குற்றம் சாட்டி 2022 ஆம் ஆண்டில் டகோமாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் குடும்பம் கூட்டாட்சி வழக்கை தாக்கல் செய்தது. சோதனை ஜூன் 9…
இம்பால்: மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் படையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா – மியான்மர் எல்லைக்கு அருகில், மணிப்பூரின் சந்தேல் மாவட்டம், நியூ சாம்தால் கிராமத்தில் ஆயுதமேந்திய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக புதன்கிழமை உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து கணிசமான அளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன” என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொஹிமாவில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அங்கு ராணுவ நடவடிக்கை தொடர்கிறது. அது முடிவுக்கு வந்தவுடன் அது தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றார். இதற்கிடையில் மணிப்பூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்தாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.…
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான உனதி ஹூடா, மாளவிகா பன்சோத் ஆகியோர் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தனர். பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் 17 வயதான உனதி ஹூடா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சொச்சுவாங்கை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சொச்சுவாங் 21-14, 21-11 என்ற செட் கணக்கில் உனதி ஹூடாவை வீழ்த்தினார். உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மாளவிகா பன்சோத், முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசயில் 5-வது இடத்தில் உள்ளவருமான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்த்து விளையாடினார். இதில் மாளவிகா 12-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப் 9-21, 14-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபானிடா காடேதாங்கிடம் தோல்வி…
நியூயார்க்: அமெரிக்காவில் நிகழ்ந்த மலையேற்ற விபத்தில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் காஸ்கேட்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்நிலையில் சியாட்டில் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரான விஷ்ணு இரிகிரெட்டி (48) கடந்த சனிக்கிழமை தனது 3 அமெரிக்க நண்பர்களுடன் இந்த மலைத்தொடரின் ‘நார்த் இயர்லி வின்ட்டர் ஸ்பயர்’ பகுதியில் ஏறினார். அப்போது புயல் வருவதை கவனித்த மலேயற்ற குழு பின்வாங்கத் தொடங்கியது. அவர்கள் இறங்கும்போது ஒரு கட்டத்தில் நங்கூரம் பெயர்ந்ததில் 200 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தனர். இதில் விஷ்ணு உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ட்செலிக் என்ற ஒரு மலையேற்ற வீரர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் கடின மலைப் பகுதியில் இரவு முழுவதும் நடந்து சென்று தனது காரை அடைந்தார். பிறகு மிக அருகில் உள்ள கட்டண தொலைபேசி மையம் சென்று அதிகாரிகளிடம்…