Author: admin

ஆசியாவில் இந்தியாவுக்குப் பிறகு சிறந்த அணி ஆப்கானிஸ்தான் தான் என்ற அடையாளம் எங்கள் மேல் மற்றவர்கள் ஏற்றிக் கூறுவது. நாங்கள் அவ்வாறு கூறிக்கொள்ளவில்லை என்று கேப்டன் ரஷீத் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அசத்தினார்கள். ஆனால் அரையிறுதியில் இவர்கள் நுழையும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தன் அதிரடி இரட்டைச் சதம் மூலம் தகர்த்தார். கேட்ச்களை விட்டு கிளென் மேக்ஸ்வெல்லை அன்று செய்ய முடியாததைச் செய்ய வைத்தது ஆப்கானிஸ்தான். 2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குள் நுழைந்தனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றனர். இதனையடுத்து ஆசியாவில் இந்திய அணிக்குப் பிறகு ஆப்கன் தான் என்று ஊடகத்தில் சில தரப்பினர் பிராண்ட் செய்தனர். இந்த அடையாளத்தை மறுத்த ரஷீத் கான் கூறியதாவது: ஊடகங்களில் எங்களை ஆசியாவின் 2-வது சிறந்த அணி என்று எங்களை அழைக்கின்றனர். நாங்கள் அப்படி எங்களைக் கூறிக்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் நாங்கள் நன்றாக…

Read More

சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் மீது சுமத்திய சட்ட விரோத கொலைப்பழி பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்.எஸ் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதூறாக கருத்துகளை தெரிவித்து, அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் கோர விபத்தில் 41 பேர் பலியான உயிரிழப்பு சம்பவத்தின் அரசியல் சதி குறித்து, நிர்வாக சீர்கேடுகள் குறித்து உண்மைகளை வெளிக்கொணர தமிழக மக்கள் கோபத்துடன் கேள்வி கேட்பதை திசை திருப்பும் முயற்சியாக முதல்வர் ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் மீது பொய் பிரச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் ஆர் எஸ் எஸ் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு எதிராக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த…

Read More

புதுடெல்லி: “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் சக்தியாக இந்தியா உள்ளது. அதேநேரத்தில், இதில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘கவுடல்யா பொருளாதார மாநாடு 2025’-ல் கலந்து கொண்டு ‘கொந்தளிப்பான காலத்தில் செழிப்பைத் தேடுதல்’ என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக இந்தியா திகழ்கிறது. அதேநேரத்தில், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன. சர்வதேச ஒழுங்கு மாறி வருகிறது. வர்த்தக அளவு மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. கூட்டணிகள் சோதிக்கப்படுகின்றன, முதலீடுகள் புவிசார் அரசியல் வழிகளில் மாற்றியமைக்கப்படுகின்றன. பகிரப்பட்ட உறுதிமொழிகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. நாம் எதிர்கொள்வது தற்காலிக இடையூறுகள் அல்ல, மாறாக ஒரு கட்டமைப்பு மாற்றமாகும். இதில் சில கேள்விகள் இருக்கின்றன. இந்த மாற்றத்தின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது? புதிய சமநிலை எப்படி இருக்கும்? அதை யார் வடிவமைப்பார்கள்,…

Read More

தொடர்ச்சியான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் (யுடிஐக்கள்) பாதிக்கப்படுவது ஒரு எளிய தொற்றுநோயை விட அதிகமாக சமிக்ஞை செய்யலாம் – இது சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம், நிபுணர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். பெரும்பாலும் “அமைதியான நோய்” என்று அழைக்கப்படும் சிறுநீரக புற்றுநோய் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் உருவாகலாம், இது வெற்றிகரமான சிகிச்சைக்கு ஆரம்பகால கண்டறிதலை முக்கியமானது. பெரும்பாலான யுடிஐக்கள் பாதிப்பில்லாதவை என்றாலும், மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் கடுமையான சிறுநீரக பிரச்சினைகளை மறைக்கக்கூடும். முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளில் சிறுநீரில் இரத்தம், பக்கத்தில் அல்லது பின்புறத்தில் தொடர்ச்சியான வலி, சோர்வு மற்றும் விவரிக்கப்படாத எடை இழப்பு ஆகியவை அடங்கும். ஐந்து சிறுநீரக புற்றுநோய் வழக்குகளில் கிட்டத்தட்ட நான்கு பேர் தொடர்பில்லாத நிலைமைகளுக்கான ஸ்கேன்களின் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள், இது சிறுநீர் அறிகுறிகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு மருத்துவரை உடனடியாக கலந்தாலோசிப்பது ஆரம்பகால நோயறிதலை உறுதிசெய்து சிகிச்சை விளைவுகளை…

Read More

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இத்திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில்துறைக்குத் தயாரான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் இலட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 42 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம்திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களையும் உயர்த்துவதற்கு Microsoft, IBM, ORACLE, GOOGLE, CISCO, HCL, Infosys, AWS, Siemens, FANUC,Dassault, L&T…

Read More

கோவை: கோவை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் நேற்று மாலை காட்டு யானை புகுந்தது. வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில். இந்தக் கோயிலில் அவ்வப்போது காட்டு யானைகள் வருவது வழக்கம். நேற்று மாலை உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை கோயிலுக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர் தொடர்ந்து இரவு முழுவதும் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

Read More

பொதுவாக, ஒரு கடுமையான வொர்க்அவுட்டிற்குப் பிறகு, காலணிகள் அல்லது ஸ்னீக்கர்களை கழற்றி, கடுமையான மற்றும் தவறான வாசனையின் ஒரு துடைப்பால் மட்டுமே வரவேற்கப்பட வேண்டும், இது பலருக்கு ஒரு பழக்கமான அனுபவமாகும். துர்நாற்றம் வீசும் காலணிகள் எரிச்சலூட்டும் என்றாலும், இது கால் தூய்மை மற்றும் பாக்டீரியாவின் அதிகப்படியான வளர்ச்சி தொடர்பான மறைக்கப்பட்ட சுகாதார பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். கால்கள் ஏன் வாசனை மற்றும் அது பாதத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்து, நாற்றங்களை மட்டுமல்ல, நோய்த்தொற்றுகளையும் வலியையும் தடுப்பதற்கான தீர்வாகும்.

Read More

புதுடெல்லி: புல்​லட் ரயில், மெட்ரோ ரயில் திட்​டப் பணி​களை மேற்​கொள்ள சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களின் தேவை அதிகரித்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் சீனா மற்றும் ஜெர்​மனி​யிடம் இருந்து சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் வாங்​கப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​திடம் இருந்து அதிக இயந்​திரங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​துக்கு சீனா​வின் குவாங்​சூ, வூஹான், செங்டூ ஆகிய பகு​தி​களில் மிகப் பெரிய ஆலைகள் செயல்​படு​கின்​றன. இந்த ஆலைகளில் தயாரிக்​கப்​படும் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான ஜெர்​மனி தூதர் பிலிப் அக்​கர்​மேன் கூறிய​தாவது: ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​தின் சீன ஆலை​யில் இருந்து 3 சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களை இந்​தி​யா​வுக்கு ஏற்​றுமதி செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. ஆனால் சீன சுங்​கத் துறை அதி​காரி​கள், சுரங்க இயந்​திரங்​களின் ஏற்​றும​தியை உள்​நோக்​கத்​தோடு தடுத்து நிறுத்​தினர். மிக நீண்ட போராட்​டத்​துக்கு பிறகு 2 சுரங்க இயந்​திரங்​கள் அண்​மை​யில் இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.…

Read More

முகமது சிராஜ் தன் பந்து வீச்சில் புதிய மெருகேற்றியுள்ளார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களிலிருந்தே இதைப் பார்த்து வருகிறோம். நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் அதே போல் தன் ‘வாபுள் சீம்’ என்ற பந்தின் தையலை வித்தியாசமாகப் பிடித்து காற்றில் பந்து தள்ளாடிக் கொண்டே வருமாறு வீசி மே.இ.தீவுகளின் வீரர்களை சந்தேகத்திலேயே வைத்திருந்தார். வழக்கமாக பந்தின் தையலை நேராகப் பிடித்து கடைசி நேர மணிக்கட்டு விசையில் பந்தை எழுப்புவதும், திசை மாற்றுவதும் வழக்கம். ஆனால் சிராஜ் ஒன்று பந்தின் தையலைக் குறுக்காகப் பிடிக்கிறார் இல்லையெனில் ஒரு கோணத்தில் பிடித்து ஒரு கோணத்தில் பந்தை அந்த வேகத்தில் செலுத்தும் போது பந்து ஆடிக்கொண்டே வரும். இதனால் பேட்டர்கள் பந்து எப்படி ஸ்விங் ஆகும் என்பதைக் கணிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஓவல் டெஸ்ட் போட்டியில் அந்த ஃபேமஸ் கடைசி விக்கெட் பந்து இப்படித்தான் காற்றில் ஆடியபடியே வந்ததால் அட்கின்சனுக்குப் புரியவில்லை ஸ்டம்ப் பதம் பார்க்கப்பட்டது இந்திய…

Read More

ராமநாதபுரம்: ‘தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா எனப் பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், பல திட்டங்களை தொடங்கிவைத்தும் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மீனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை இலங்கை கடற்படையின் தாக்குதல்தான். இதனை நாம் தொடர்ந்து கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். ஆனால், ஒன்றியத்தை ஆளும் பாஜக மீனவவர்களை காக்க எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை மீட்பதே மீனவர் நலனை காக்க உதவும் என தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதனை வைத்து இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசு கோரிக்கை…

Read More