‘தனி ஒருவன் 2’ குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா மேடையேறினார்கள். அவர்களிடம் ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன் ராஜா “‘தனி ஒருவன் 2’ மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும் போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்” என்றார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அர்ச்சனா, “மோகன் ராஜா சாரிடம் பேசினால் 4 கதைகள் சொல்வார். ஒவ்வொன்றுமே அற்புதமாக இருக்கும். ஒரு கதையை மட்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தான் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ‘தனி ஒருவன் 2’ பெரிய முதலீட்டைக் கொண்ட படம். முதல் பாகத்தை விட…
Author: admin
சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சியில் தன்னிகரற்று முன்னேறும் நிலையில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டினைக் கட்டாயமாக…
புகைப்படம்: மெரினா வின்பெர்க்/ இன்ஸ்டாகிராம் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மிகவும் கோபமாக உள்ளன. இந்த எளிய, வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் அவை ஒரு நபரின் உண்மையான தன்மையை சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.எப்படி? சரி, இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட விசித்திரமான படங்கள், அவை வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாக தோன்றும். அவர்களில் ஒருவர் முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்க்கிறார் என்பதன் அடிப்படையில், படங்கள் ஒரு நபரின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் மெரினா வின்பெர்க் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் பகிரினார். முதலில், ஒரு நபர் இந்த படத்தில் உள்ள மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே கவனிக்க முடியும்- ரீட்ஸ், ஒரு ஸ்வான் அல்லது ஒரு பெண். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, நீங்கள்…
புதுடெல்லி: மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, ஆபரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மாநில டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க மத்தியப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச கேடரில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழு உறுப்பினர்களில் யாரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு விசாரணைக் குழு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின்…
‘பகவந் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் கைப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. இதனை படக்குழு மறுக்கவில்லை என்பதால் இது உண்மையாக இருக்குமோ என கருதப்பட்டது. தற்போது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழு கைப்பற்றியதன் காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது. ‘பகவந்த் கேசரி’ படத்தில் பள்ளி குழந்தைகள் மத்தியில் பாலகிருஷ்ணா பேசுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அதில் ‘குட் டச், பேட் டச்’ குறித்து நீண்ட வசனம் ஒன்றை பேசியிருப்பார் பாலகிருஷ்ணா. அந்த ஒரு காட்சிக்காகவே ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘ஜனநாயகன்’ படக்குழு. இப்படத்திலும் இதே போன்று ஒரு காட்சி இருப்பதால், பட வெளியீட்டு சமயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதே இதற்கு காரணம். கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில்…
சேலம்: கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரக்கோணம் – சேலம்- அரக்கோணம் ரயில் சேவை, 12 நாட்களுக்குப் பின்னர் நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்குகிறது. சேலம்- அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலின் சேவை, கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, 12 நாட்களாக இயக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம்- அரக்கோணம் இடையிலான ரயில் சேவை நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்கும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, அரக்கோணம்- சேலம் (எண். 16087) பயணிகள் ரயிலானது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் நாளை அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை காலை 10.50 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில், சேலம்- அரக்கோணம் (எண்.16088 ) பயணிகள் ரயிலானது, நாளை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு,…
புதுடெல்லி: 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கேரளாவின் குட்டநாடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெங்காயத் தாமரை எனப்படும் ஆகாயத் தாமரையை (Water hyacinth) அகற்றுவதை 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நடவடிக்கையாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எம்.பி கொடிகுன்னில் சுரேஷ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நீர்நிலைகளை பாதிக்கும் நீர்வாழ் களையான ஆகாயத் தாமரையை அகற்றுவதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் அனுமதிக்கப்படும் பணிகளின் பட்டியலில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த…
சென்னை: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’ எடுத்த முயற்சி காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலைய பேருந்து நிலையத்தில் அண்ணா சதுக்கத்தில் இருந்து வரும் அனைத்துமே நின்று செல்ல போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, அண்ணாசாலை, அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்துக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்து வழித்தடம் 2-ஏ, 29-ஏ, 27-பி, 29-டி மற்றும் விவேகானந்தர் இல்லத்துக்கு இயக்கப்படும் தடம் எண் 32-பி, 38-சி ஆகியவை டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. அதே சமயம், அண்ணா சதுக்கம் மற்றும் விவேகானந்தர் இல்லத்தில் இருந்து திரும்பி வரும் பேருந்துகள் டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நிற்பது கிடையாது. அண்ணா சதுக்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் கலைவாணர் அரங்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று விட்டு அடுத்ததாக, சிம்சன் பேருந்து நிலையத்திலும்,…
பிரபலமான யூடியூப் சேனலின் சமீபத்திய வீடியோ உண்மையான பொறியியல்”தி இந்திய விண்வெளி திட்டத்தின் சாத்தியமான எழுச்சி” என்ற தலைப்பில், இந்தியாவில் பெரிய பின்னடைவைத் தூண்டியுள்ளது. இந்த வீடியோ இஸ்ரோவின் சாதனைகளைப் பாராட்டினாலும், அது இந்தியாவின் சிதைந்த வரைபடத்தைக் கொண்டிருந்தது, இது தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருக்கும் பிரதேசங்களைத் தவிர. இந்த சேனல் ஒரு “மேற்கத்திய கதை” ஐ ஊக்குவிக்கிறது மற்றும் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை இந்த விடுபாடு தூண்டியது.பின்னடைவு எவ்வாறு தொடங்கியதுவிண்வெளி ஆய்வில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு இந்த வீடியோ ஒரு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தாலும் – அதன் உற்பத்தித் தரத்திற்கு பாராட்டுக்களைப் பெற்றது – அதன் புவிசார் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு விரைவாக விமர்சனங்களை ஈர்த்தது. இந்திய பார்வையாளர்கள் கருத்துகள் பிரிவில் வெள்ளம் புகுந்தனர், உண்மையான பொறியியல் உணர்வற்ற தன்மை மற்றும் அரசியல் சார்பு என்று குற்றம் சாட்டினர். பலருக்கு, பிரச்சினை உள்ளடக்கம் அல்ல, ஆனால் இந்தியாவின் எல்லைகளின்…
சென்னை: தமிழகத்தில் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பில் இருந்த வரை ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் 2017 ஆம் ஆண்டில் உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இதனால் ஒன்றிய அரசின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தை எடப்பாடி அரசு ஏற்படுத்தி விட்டது. அஇஅதிமுகழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வலுவாக எதிர்த்து வந்த உதய் மின் திட்டத்தில்…