Author: admin

செனட்டர் எலிசபெத் வாரனைக் குறிப்பிட டொனால்ட் டிரம்ப் “போகாஹொண்டாஸ்” என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தியது புதியதல்ல, ஆனால் அது மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. மே 28, 2025 அன்று, ஜனாதிபதி டிரம்பின் ஆலோசகர் டேவிட் சாக்ஸ், வாரன் முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடனின் தன்னியக்கத்தை கட்டுப்படுத்தியதாகக் கூறி சர்ச்சையை வெளிப்படுத்தினார், அவர் தனது நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாகக் கூறினார். பூர்வீக அமெரிக்க வம்சாவளியின் வாரனின் கடந்த கால கூற்றுக்களில் மற்றொரு ஸ்வைப்பாக பரவலாகக் காணப்பட்ட இந்த கருத்து, தனது 2012 செனட் ஓட்டத்தின் போது தொடங்கிய ஒரு அரசியல் சண்டையை புதுப்பிக்கிறது. இந்த பிரச்சினையில் புதிய கவனத்துடன், இந்த புனைப்பெயர் எவ்வாறு தொடங்கியது, அது ஏன் ஒரு நரம்பைத் தாக்கியது, இன்று அரசியல் சொற்பொழிவு பற்றி வெளிப்படுத்துகிறது என்பதை ஆராய்வது மதிப்பு.“போகாஹொண்டாஸ்” சர்ச்சையின் ஆரம்பம்சர்ச்சை மையமாகக் கொண்டுள்ளது, வாரனின் பகுதி பூர்வீக அமெரிக்க வம்சாவளியின் நீண்டகால கூற்றைச் சுற்றி. 1980…

Read More

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் திருடப்​படும் செல்​போன்​கள், கண்​டறியப்​பட்டு வெற்​றிகர​மாக உரியவர்களிடம் சேர்க்​கப்​படும் தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக போலீ​ஸார் உதவி​யுடன் மத்​திய அரசு நடத்​தும் இணை​யதளம் உதவி வரு​கிறது. நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​கள் செல்​போன்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இதில் பலர் தங்​களது செல்​போன்​களை தவற​விடு​கின்​றனர். மேலும் சிலர், திருடர்​களிடம் தங்​களது செல்​போன்​களை பறி​கொடுக்​கின்​றனர். அதே​நேரத்​தில் திருடப்​படும் செல்​போன்​கள் குறித்து போலீஸ் நிலை​யங்​களுக்கு வரும் புகார்​கள் குறை​வாகவே உள்​ளன. இருந்​த​போதும் புகார் தரப்​பட்ட செல்​போன் திருட்​டு​கள் குறித்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து அவற்​றைக் கண்​டறிந்து வரு​கின்​றனர். அண்​மை​யில் உத்​தர பிரதேச மாநிலம் காஸி​யா​பாத் போலீஸ் நிலை​யத்​துக்கு 70-க்​கும் மேற்​பட்ட செல்​போன் பார்​சல்​கள் வந்​துள்​ளன. இவை அனைத்​தும் திருடப்​பட்டு வெவ்​வேறு மாநிலங்​களில் உள்ள கள்​ளச்​சந்​தைகளில் விற்​கப்​பட்​ட​வை. இவ்​வாறு கள்​ளச்​சந்​தைகளில் விற்​கப்​படும் செல்​போன்​களை தெரி​யாமல் வாங்​கும் நபர்​கள், அதன் உண்​மைத்​தன்​மையை அறிந்து அவற்றை போலீ​ஸார் உதவி​யுடன், சம்​பந்​தப்​பட்ட போலீஸ் நிலை​யங்​களுக்கு திருப்பி…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது பிரெஞ்சு தேச மொபைல் ஹேண்ட்செட் நிறுவனமான Alcatel. ‘வி3’ ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் மூன்று போன்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ள இந்த மூன்று போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்சனின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் இந்த போன்களை தயாரிக்கிறது. மற்ற மொபைல்போன் நிறுவனங்கள் வழங்காத தனித்துவ சலுகையை இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தியாவில் Alcatel களம் கண்டுள்ளது. இந்தியாவில் வி3 கிளாசிக், வி3 புரோ, வி3 அல்ட்ரா போன்களை Alcatel அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜூன் 2-ம் தேதி முதல் இந்த போன்களின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மூலம் இந்திய நகரங்களில் தொடங்குகிறது. ‘வி3’ ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் ஹெச்டி+ Nxtபேப்பர் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில்…

Read More

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன், உயர்கல்வி நுழைவுத் தேர்விலும் சாதனை படைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டு களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 40 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விடுதி வசதியுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளில் பாடத்துக்கு தலா 2 அல்லது 3 ஆசிரியர்கள் வீதம் கற்பிக்கின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் நுழைவுத் தேர் வின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு கல்வி நிலையங் களில் உயர்கல்வியில் சேர்க்கப்படுகின்றனர். மாதிரிப் பள்ளிகள் இப்பள்ளியில் படிப்போருக்கு, உயர்கல்வி யும்,வேலைவாய்ப்பும் உத்தரவாதம் எனும் இலக்குடன் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. அதன்படி, புதுக்கோட்டை கைக் குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நிகழாண்டு…

Read More

குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று கலப்பு தொடர் ஓட்டத்தில் ரூபால் சவுத்ரி, சந்தோஷ் குமார், விஷால், சுபா வெங்கடேஷன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி 3:18.12 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது. டெகத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7,618 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.90 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபால் சவுத்ரி பந்தய தூரத்தை 52.68 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா பந்தய தூரத்தை 4:10.83 விநாடிகளில் எட்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம்…

Read More

புதுடெல்லி: ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரான் சென்றனர். ஆனால் டெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு அவர்களை காணவில்லை. பஞ்சாபின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் இவர்களை துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் டெஹ்ரான் சென்ற பிறகு மூவரும் ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர். ரூ.1 கோடி பணம் தராவிடில் மூவரையும் கொன்றுவிடுவோம் என இக்கும்பல் தொலைபேசியில் மிரட்டியதாக இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஈரானில் மூவரும் கடத்தப்பட்டதை இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கொண்டு…

Read More

மூலவர்: சகஸ்ர லட்சுமீஸ்வரர் அம்பாள்: பிரகன்நாயகி தல வரலாறு : திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவ தரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ர லட்சுமீஸ்வரர் ஆனார் கோயில் சிறப்பு: தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கீரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ர லட்சுமீஸ்வரரை தரிசிக்க, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து ஹோமம் செய்து சிவனை வழிபடுவதாக ஐதீகம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது…

Read More

கமல் அளித்துள்ள பேட்டியில் தனது பெயரைக் குறிப்பிட்டதற்கு நானி நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நானி நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஹிட் 3’. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அளித்த பேட்டியில், ‘விருமாண்டி’ படத்தின் நீதிமன்றக் காட்சியில் தூங்கி எழுந்தது போல் கமல் நடித்திருந்தது குறித்து சிலாகித்து பேசியிருந்தார் நானி. அதனை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் தன்னால் அது போல் நடிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ‘தக் லைஃப்’ படத்தினை விளம்பரப்படுத்த கமல் பேட்டியளித்துள்ளார். அதில் ”மற்ற நடிகர்கள் உங்களுடைய குறிப்பிட்ட காட்சியைப் பின்பற்றி நடித்ததைக் குறித்து பேசும் போது எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்” என்ற கேள்வி கமலிடம் எழுப்பப்பட்டது. அதற்கு கமல் “நானி சமீபத்தில் சொல்லியிருந்தார். நானி பெயரை ஏன் குறிப்பிட்டேன் என்றால் சினிமா என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி என்று குறிப்பிட்டதே பெரியது. அது மாதிரி…

Read More

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாள் முன்னதாக கடந்த 24-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி நள்ளிரவு முதல் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 6 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி ஆகிய…

Read More

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித் துறை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதை அப்லோடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. “வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள், சிஸ்டம் மேம்பாடு மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் எல்லோருக்கும் துல்லியமான வருமான வரி கணக்கு தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும்” என்று எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான மென்பொருள் சார்ந்த அம்சங்களை அரசு வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டை பட்டைய கணக்கர்கள் சமூக வலைதளங்களில்…

Read More