சென்னை: எவலெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷுடன் சேர்ந்து மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார். அவர் 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார். அண்மையில் அவர் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி, அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்தார். சாதனைகள் படைக்க வாழ்த்து: இந்நிலையில், மாணவி லலித் ரேணு நேற்று தலைமைச் செயலகத்தில் தனது பெற்றோருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள அச்சிறுமியை துணை முதல்வர் பாராட்டியதோடு அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேடயத்தை வழங்கினார். மலையேற்றத்தில் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கவும்…
Author: admin
யோகாவில் மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, அவர்களின் மூச்சைப் பிடித்துக் கொள்வது. மக்கள் ஒரு போஸ் சரியானதைப் பெறுவதில் அல்லது சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தும்போது, அவர்கள் பெரும்பாலும் சுவாசிப்பதை நிறுத்துகிறார்கள். உங்கள் சுவாசத்தை வைத்திருப்பது உடலில் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது, இது யோகா அடைய விரும்புவதற்கு நேர்மாறானது. ஆற்றல் சுதந்திரமாக ஓட்டவும், உங்கள் மனதை நிதானமாக வைத்திருக்கவும் யோகாவுக்கு நிலையான, அமைதியான சுவாசம் தேவைப்படுகிறது.அதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்: உங்கள் மூக்கு வழியாக ஆழமாகவும் சமமாகவும் சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு போஸில் செல்லும்போது உள்ளிழுக்கவும், நீங்கள் வெளியிடும்போது அல்லது ஆழப்படுத்தும்போது சுவாசிக்கவும். நீங்கள் கவனித்தால், உங்கள் மூச்சைப் பிடிப்பதை, இடைநிறுத்துங்கள், சில ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் தொடரவும்.உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக இருங்கள்
பெங்களூரு: கன்னட மக்களிடம் நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். ‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது’ என கமல் கூறியிருந்த நிலையில், அதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திர எடியூரப்பாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல…
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டு சர்பராஸ் கான் ஒழிக்கப்பட்டுள்ளார். இதற்கு அஜித் அகர்கர் கூறும் காரணமற்ற காரணம், ஒழிப்புக்கான சப்பைக்கட்டு போல்தான் தெரிகிறதே தவிர கடின உழைப்பாளியான ஒரு வீரருக்குச் செய்யும் நியாயமாகப் படவில்லை. முன்பு கருண் நாயர் 300 அடித்த பிறகு 2 போட்டிகளில் சரியாக ஆடாததால் அணியை விட்டு விரட்டப்பட்டவர் தான், அதன் பிறகு அவர் மீண்டும் வர இத்தனை கால கடின உழைப்பும், அணித்தேர்வுக்குழு பலிகடா ஆக்க வேறொரு வீரரும் தேவைப்பட்டுள்ளது. ஆகவே முந்தைய பலிகடாவை வைத்து இன்று இன்னொரு பலிகடாவாக்கம் நடைபெற்றுள்ளது. அல்லது முந்தைய பலிகடாவை இன்றைய பலிகடாவுக்குப் பதில் பலியாக்கியுள்ளனர். எதிர்பார்த்தது போலவே ஷுப்மன் கில் கேப்டனாகியுள்ளார். இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் தொடக்கத்தில் களமிறங்க 3-ம் நிலையில் சாய் சுதர்சனும், 4ம் நிலையில் கோலியின் இடத்தில் கேப்டன் கில்லும் இறங்குவார்கள்…
வாஷிங்டன்: அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ” கோல்டன் டோம்” திட்டம் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் கூறியதாவது: வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில் ” கோல்டன் டோம்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 175 பில்லியன் டாலர் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்கு 25 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்யும் மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. எனது பதவிக் காலம் முடிவதற்குள் இந்த கோல்டன் டோம் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது இலக்கு. கோல்டன் டோம் திட்டத்தில் சேர கனடாவும் ஆர்வம் காட்டியுள்ளது. இந்த முயற்சியில் அமெரிக்கா அதன் வடக்கு அண்டை நாடுகளை ஆதரித்து செயல்படும். தேர்தல்…
மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக் ஆன ‘தடக் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தடக் 2’. இதில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரீமேக் ஆகும். இதன் முதல் பாகம் மராத்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கிய ‘சாய்ராட்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. ஷாஜியா இக்பால் இயக்கியுள்ள ‘தடக் 2’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சாதி தொடர்பான வசனங்களால் இப்படம் சென்சாரில் சிக்கலை எதிர்கொண்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாகவிருந்த இப்படம் பிறகு 2025 மார்ச் மாதம் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தாமதமானது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற…
மாமல்லபுரம்: “நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடக்கிறது. இந்த விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக தலைவர் விஜய், ‘இளம் தலைவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வணக்கம். உங்க எல்லாரையும் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி. உங்கள் எல்லாருக்கும் முதலில் வாழ்த்துகள். படிப்பில் சாதிக்கணும் என்பது முக்கியம்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப…
வாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் வெளியேறினார். அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது. ஆண்டு தோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன், ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்களை மாற்றியமைத்து, மின்னல் வேகத்தில் பணிகளை தானியக்கமாக்குவதால், ஒரு புதிய உலகளாவிய ஆய்வு ஒரு சிக்கலான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது: ஆண்களை விட பெண்கள் AI க்கு வேலைகளை இழக்க மூன்று மடங்கு அதிகம்.ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) நடத்திய ஆய்வில், இந்த வேகமாக நகரும் ஆட்டோமேஷன் அலை அனைவரையும் சமமாக தாக்கவில்லை என்பதைக் காட்டுகிறது-மேலும் பெண்கள் அதன் தாக்கத்தைத் தாங்குகிறார்கள்.எண்கள் ஒரு முழுமையான கதையைச் சொல்கின்றனபணக்கார நாடுகளில், பெண்கள் வைத்திருக்கும் வேலைகளில் சுமார் 10% AI ஆல் மாற்றப்படும் அபாயத்தில் உள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆண் வைத்திருக்கும் வேலைகளில் 3.5% மட்டுமே அந்த வகையில் அடங்கும். இது ஆட்டோமேஷன் பற்றி மட்டுமல்ல – இது பணியிடத்தில் பாலின இடைவெளியை விரிவுபடுத்துவது பற்றியது.எனவே, இந்த ஏற்றத்தாழ்வின் பின்னால் என்ன இருக்கிறது?வேலைகள் மிகவும் ஆபத்தில் உள்ளனஐ.எல்.ஓவின் கூற்றுப்படி, ஏஐ குறிப்பாக எழுத்தர் மற்றும் நிர்வாக பாத்திரங்களை…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்தது. இது தற்போது, 23,500 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் மூலம் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் வெற்றியை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல அதன் வளமைக்கும் அவசியம். இது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு தங்களது திறனையும், வலிமையும் வெளிப்படுத்தி உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியது. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகளை மட்டும் இந்தியா உருவாக்கவில்லை. அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பங்களுக்கும் நாம் தயாராகி…