இந்த நாட்களில் பெரும்பாலான மக்கள் வாழும் வேகமான மற்றும் மன அழுத்தமான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, ஒருவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த நேரமில்லை, அதிக யூரிக் அமிலம் இருப்பது பலருக்கு பொதுவான சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. அவிழ்க்கப்படாதவர்களுக்கு, யூரிக் அமிலம் என்பது இயற்கையான கழிவு உற்பத்தியாகும், இது உடலில் பியூன்ஸ் எனப்படும் பொருட்களை உடைக்கும்போது உருவாகிறது, அவை பொதுவாக பல உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படுகின்றன. சாதாரண நிலைமைகளில், யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைத்து சிறுநீரகங்கள் வழியாக உங்கள் சிறுநீரில் செல்கிறது. ஆனால் அது அதிகமாக உருவாகும்போது அல்லது உடலில் இருந்து சரியாக அகற்றப்படாதபோது, அது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உயர் யூரிக் அமில அளவு, இது ஹைப்பர்யூரிசீமியா என்றும் அழைக்கப்படுகிறது, இது கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் போன்ற வலி நிலைமைகளுக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்டவசமாக, யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகமாக இருக்கும்போது, அவற்றை அடையாளம் கண்டு சில வாழ்க்கை முறை…
Author: admin
பனாஜி: பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கோவா கடற்கரையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று (மே 30) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் அமைதியான சேவை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் கடற்படை வெளியேறாமல் இருந்ததை அது உறுதி செய்தது. பாகிஸ்தான் தீய எண்ணத்துடன் செயல்பட முயன்றால், இந்திய கடற்படை மூலம் மத்திய அரசு பதில் அளிக்கும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும். சுதந்திரம் அடைந்ததிலிருந்து தான் நடத்தி வரும் பயங்கரவாதம் ஆபத்தான விளையாட்டு என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளை…
பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி மிகப் பெரிய ஒருநாள் வெற்றியைப் பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷேய் ஹோப் தன் அனுபவமின்மையைக் காட்டும் விதமாக டாசில் வென்று அதிரடி இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது, அதுவும் மட்டைப் பிட்சில் இந்த முடிவு எடுத்து வாழ்நாள் தவற்றைச் செய்து விட்டார். இதனையடுத்து இங்கிலாந்து 400 ரன்களைக் குவித்தது, மீண்டும் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 26 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அசிங்கமாகத் தோற்றது. ஹாரி புரூக் ஃபுல் டைம் லிமிடெட் ஓவர் கேப்டனாக முதல் போட்டியிலேயே மிகப் பெரிய வெற்றியைச் சாதித்து விட்டார். வெஸ்ட் இண்டீஸ் சொத்தையாக ஆடினாலும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் திறந்துள்ளது என்றே கூற வேண்டும். இங்கிலாந்தின் 21 வயது புதுமுகம், பார்படாஸில் பிறந்து இங்கிலாந்து வந்துள்ள…
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘மாமன்’. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திரைப்படங்களைத் திருட்டு பதிவிறக்கம் செய்து பார்ப்பது உள்ளத்தைச் சிதைக்கிறது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. ஒவ்வொரு படத்துக்கு பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன. ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது. ஒரு படம் வென்றாலும், தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு,…
தூத்துக்குடி: தமிழகத்தில் 6,500 அங்கன்வாடி மையங்கள் ‘ஸ்மார்ட் அங்கன்வாடி’ மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவாக 100 மில்லி பால், 2 முட்டை, ஒரு கப் சுண்டல், 3 பிஸ்கட் ஆகியவை வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவு வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று (மே 30) நடைபெற்றது. மருத்துவமனை டீன் கு.சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நோயாளிகளுக்குச் சிறப்புப் புரத உணவுகளை வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “டயலாசிஸ் செய்யும் நோயாளிகளுக்குத் தினமும் புரதச் சத்துள்ள உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.…
ஆம், அது சரி. உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை. ஆரோக்கியமான கொழுப்புகள் இதயத்திற்கு நல்லதல்ல; நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பு வழியாக பயணத்தைத் தக்கவைத்து, உங்கள் குடல் புறணிக்குள் குடியேறவும் அவை உதவக்கூடும். கொழுப்பு பாக்டீரியா வயிற்று அமிலத்தைத் தக்கவைக்கவும், குடலுக்குச் செல்லவும் உதவுகிறது, அங்கு அவை அவற்றின் வேலையைச் செய்கின்றன. “கூடுதல் கன்னி ஆலிவ் எண்ணெய் மற்றும் வெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் அந்த பாக்டீரியாக்கள் உங்கள் குடல் வழியாக பயணத்திலிருந்து தப்பிக்க உதவுகின்றன” என்று குடல் மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார். உணவில் கூடுதல் கன்னி ஆலிவ் எண்ணெயைத் தூறல், வெண்ணெய் சாப்பிடுங்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற கொட்டைகளில் சிற்றுண்டி சாப்பிடலாம். ஆளிவிதை, சியா, சணல் மற்றும் சூரியகாந்தி போன்ற விதைகளும் சிறந்த தேர்வுகள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (இடது) மற்றும் வியட்நாமிய பிரதமர் பாம் மின் சின் (ஆபி) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்ப வணிகத்திற்கு சொந்தமான வடக்கு வியட்நாமில் 1.5 பில்லியன் டாலர் சொகுசு கோல்ஃப் ரிசார்ட்டுக்கு மே 21 அன்று மைதானம் உடைக்கப்பட்டது.இந்த விழாவிற்கு வியட்நாமிய பிரதமர் பாம் மின் சின் மற்றும் டிரம்ப் அமைப்பின் நிர்வாக துணைத் தலைவர் எரிக் டிரம்ப் தலைமை தாங்கினர்.சில நாட்களுக்குப் பிறகு, டிரம்ப் வியட்நாமின் பொருளாதார அதிகார மையமான ஹோ சி மின் நகரத்திற்குச் சென்றார், வேகமாக விரிவடைந்து வரும் நகரத்தின் மேல்தட்டு மாவட்டத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டல் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தார்.டிரம்ப் அமைப்புக்கு சாதகமாக வியட்நாமிய அரசாங்கம் ஒப்புதல்களை விரைவுபடுத்துவதாகவும், உள்நாட்டு விதிமுறைகளை மீறக்கூடும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.ஏப்ரல் 2 ம் தேதி டிரம்ப் நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்ட 46% கட்டணத்தை வியட்நாம் எதிர்கொள்வதால் இந்த ஒப்பந்தங்கள் வந்துள்ளன.இந்த தண்டனையான “பரஸ்பர…
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கும் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. கண்ணூர், காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, சனிக்கிழமைக்குப் பிறகு கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அறிகுறிகள்…
சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நாளை (மே 31) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில் இம்முறை தலைவர் பதவிக்கு சுரேஷ் மனோகர் (மதுரை ) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு சிவானந்தம் (தஞ்சாவூர்), துணைத் தலைவர் பதவிக்கு ரவிக்குமார் (திருவள்ளூர்), ராபர்ட் குமார் (காஞ்சிபுரம்), ஆனந்த் (சிவகங்கை), ராதா (கடலூர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிரணியில் தலைவர் பதவிக்கு சண்முகம் (திண்டுக்கல்) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு மணிகண்டன் (விருதுநகர்), துணைத் தலைவர் பதவிக்கு கண்ணன் (நாகப்பட்டினம்), மணி (ஊட்டி), குமார் (புதுக்கோட்டை) ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 82 வாக்குகள் உள்ளன. இதில் வெற்றி பெறுவதற்கு…
சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் புராண மற்றும் பக்திக் கதைகளே அதிகம் படமாக்கப்பட்டன. அந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதுபோன்ற படங்கள் அதிகமாக உருவாகின. அதில் மகாபாரதத்தின் கிளைக் கதைகளில் ஒன்றை எடுத்து உருவான படம், ‘கிராதா அர்ஜுனா’. இந்தப் படத்துக்கு ‘ஊர்வசி சாகசம்’ என்று இன்னொரு தலைப்பையும் வைத்தனர். இரண்டு தலைப்புகளுடன் வெளியான படம் இது. அந்த காலகட்டத்தில் சில படங்கள் இரண்டு தலைப்புகளுடன் வெளியாகி இருக்கின்றன. அர்ச்சுனன் தன்மீது வைத்திருக்கும் பக்தியை, பார்வதி தேவிக்கு உணர்த்த விரும்பிய சிவன், அர்ச்சுனன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, கிராதா என்ற வேடனாக அங்கு செல்கிறார். அப்போது காட்டுப் பன்றி ஒன்று அர்ச்சுனனை நோக்கிப் பாய்ந்து வருவதைக் கண்ட வில் வீரரான அவர், அதை நோக்கி ஓர் அம்பு எய்கிறார். கிராதாவும் அம்பு எய்ய, காட்டுப் பன்றி இறக்கிறது. காட்டுப்பன்றி உருவத்தில் வந்தது, மூகாசுரன் என்ற அசுரன். காட்டுப்பன்றி இறந்ததும் அசுரன்…