Author: admin

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 8 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்களும், டெல்வால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 42 ரன்களும் விளாசினர். ஷிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்களும், தோனி 17 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 7.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனால் டெவால்ட் பிரேவிஸ் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருப்பினும் அவர் ஆட்டமிழந்த பின்னர் ஷிவம் துபே, தோனி ஜோடி பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கவில்லை. இதனால் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட வேண்டிய நிலையில் 187…

Read More

டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘ஜின் -தி பெட்’. இதில் பவ்யா தரிகா, ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர். காமெடி ஹாரர் படமான இது, வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நீதியரசர் எஸ்.கே. கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பன்னீர் செல்வம் ஐபிஎஸ், தயாரிப்பாளர் கேயார், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு என பலர் கலந்துகொண்டனர். ஆர்.கே. செல்வமணிபேசும்போது, “வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளைவைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாகக் கதையைக் கேளுங்கள். மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்கத்தொடங்கியதால்தான் சினிமா சீரழிகிறது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு…

Read More

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால், பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலுக்கு தயாராவது, கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் 2-வது நாளாக நேற்றும் பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார். காலையில் திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்களும் மாலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்கள் நியமனம் எப்படி நடைபெற்று வருகிறது என கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே நிர்வாகிகளை நியமித்து, மேற்கண்ட மாவட்ட செயலாளர்கள் அளித்த படிவங்களை எடுத்து, தகவல் தொழில்நுட்ப அணி உதவியுடன், அதே கூட்டத்தில் தொடர்புகொண்டார்.…

Read More

புது டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தகுதியானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS) என்று நிராகரிப்பது மனுவாதத்தின் ஒரு புதிய வடிவம் என்று அவர் சாடியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம் என்பதுதான் உண்மை. தகுதியான பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்றே ‘தகுதி நீக்கம்’ செய்யப்படுகிறார்கள். கல்விதான் சமத்துவத்துக்கான மிகப்பெரிய ஆயுதம் என்று பாபாசாகேப் கூறியிருந்தார். ஆனால் மோடி அரசாங்கம் அந்த ஆயுதத்தை மழுங்கடிப்பதில் மும்முரமாக உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்களின் 60 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும், இணைப் பேராசிரியர்களின் 30 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும் பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS – Not For…

Read More

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் அந்த அணி லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் தலா 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன. குஜராத் அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது.…

Read More

கேஜெஆர் ஸ்டூடியோஸ் சார்பில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட சில படங்களைத் தயாரித்தவர் கேஜெஆர் ராஜேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘அங்கீகாரம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜேபி. தென்பாதியான் இயக்குகிறார். ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் – அஜித் பாஸ்கர் – அருண்முருகன் இணைந்து தயாரிக்கின்றனர். இதில், சிந்தூரி விஸ்வ நாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன் ராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குநர் ஜேபி தென்பாதியான் கூறும் போது, “தென்சென்னையில் உள்ள மாட்டான்குப்பன் பகுதியில் நடக்கும் கதை. ஒரு காலத்தில் அங்கு ஏராளமான விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். இன்று விளையாட்டில் இருந்து அந்தக்குப்பம் விலகி இருக்கிறது. அங்கிருந்து தேசிய அளவில் சாதிக்க நினைக்கிற ஒரு அத்லெட் சந்திக்கும் சவால்களும் பிரச்சினைகளும்தான் திரைக்கதை. பல உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாக்கி…

Read More

சென்னை: “தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நமது இலக்கு. எனவே நமக்குள் வேற்றுமைகள் எதுவும் இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். பாமகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் சம்மந்தமாக 5 மாவட்டத்தின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இங்கே கூடியுள்ளோம். இது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு. நீங்கள் எல்லோரும் வேகமாக வேலை செய்து இப்பணியை முடிக்க வேண்டும். பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் தலைவராக அங்கீகாரம் பெற்றது நான்தான். எப்போதும் நான் என்று சொல்லாமல் நாம் என்றே சொல்வேன். பாமக என்பது நானோ அல்லது வேறு யாருமோ கிடையாது, நீங்கள்தான் பாமக. நீங்கள்…

Read More

பலாமு: மாவோயிஸ்ட் உயர்மட்ட கமாண்டர் துளசி புயின்யா ஜார்க்கண்ட், பலாமு காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஜார்க்கண்டில் நடைபெறும் தொடர்ச்சியான நடவடிக்கையில், அம்மாநில போலீஸார் இன்று பலாமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் கமாண்டர் துளசி புயின்யாவை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து பேசிய ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மற்றும் ஐஜி அமோல் வி.ஹோம்கர், “பலாமுவில் இன்று அதிகாலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் பலாமு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் தளபதி துளசி புயின்யா கொல்லப்பட்டார், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இம்மோதலின் போது பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் வீரர்கள் பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புயின்யாவின் குழுவில் இருந்த மாவோயிஸ்ட் நிதேஷ் யாதவின் தலைக்கு ரூ.15 லட்சம், சஞ்சய் கோத்ராம் தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப் பெற்றவர்களாவர். இவர்களும் இந்த மோதலில்…

Read More

கோலாலம்பூர்: மலேசியா பாட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது. மற்ற இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனையும், ஆயுஷ் ஷெட்டி 20-22, 21-10, 21-8 என்ற கணக்கில் கனடாவின் பிரையன் யங்கையும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லூ குவாங் ஸுவையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பரிவு…

Read More

நடிகர் தனுஷ், தற்போது ‘இட்லி கடை’ படத்தை முடித்துள்ளார். அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இளையராஜாவின் பயோபிக்கில அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை கதையிலும் தனுஷ் நடிக்கிறார். இதை அபிஷேக் அகர்வால், பூஷன்குமார், கிருஷ்ணன் குமார், அனில் சுங்கரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கேன்ஸ் பட விழாவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். இதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். ‘கலாம்: த மிஷல் மேன் ஆஃப் இந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ‘லோக்மான்யா: ஏக் யுக்புருஷ்’, ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’, ‘ஆதிபுருஷ்’ படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்குகிறார். “கலாமின் கதையை திரைக்குக் கொண்டு வருவது கலைச்சவால் மற்றும் தார்மீக, கலாச்சாரப் பொறுப்பு. இது உலகளாவிய இளைஞர்களுக்கும், குறிப்பாக தென்னகத்து இளைஞர்களுக்கும்…

Read More