Author: admin

சென்னை: ஒரு மாத கோடை விடு முறைக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன் றம் தனது அன்றாடப் பணிகளை நாளை முதல் தொடங்குகிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஹேமந்த சந்தன் கவுடர் நாளை பொறுப்பேற்கவுள்ளார். சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்ற மதுரை கிளைக்கு கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதியான இன்று வரை கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 2) முதல் உயர்நீதிமன்றம் தனது அன்றாடப் பணிகளை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க பிரத்யேக அமர்வுகள் அமைக் கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கர்நாடக நீதிபதி: இந்நிலையில் ஜூன் 2-ம் தேதியான நாளை முதல் உயர் நீதிமன்றம் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வரும் நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் நாளை காலை…

Read More

தி ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி . பிக் பேங்கிற்கு 280 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள இந்த விண்மீன் அண்ட அவதானிப்பின் எல்லைகளைத் தள்ளுகிறது. இந்த கண்டுபிடிப்பு ஆரம்பகால பிரபஞ்சத்திற்குள் செல்வதற்கான JWST இன் விதிவிலக்கான திறனை எடுத்துக்காட்டுகிறது, முதல் விண்மீன் திரள்களின் உருவாக்கம் குறித்த முன்னோடியில்லாத நுண்ணறிவுகளை வழங்குகிறது. Z = 14.44 இன் சாதனை படைத்த ரெட் ஷிப்ட் மூலம், அம்மா Z14 விண்மீன் பரிணாமத்தைப் பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்வதோடு மட்டுமல்லாமல், முந்தைய விண்மீன் திரள்கள் கூட விரைவில் அடையக்கூடும் என்றும், வானியலில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் என்றும் கூறுகிறது.பிக் பேங்கிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஆரம்ப விண்மீன் திரள்களில் ஒன்றை JWST கண்டுபிடிக்கும்நாசாவின் 10 பில்லியன் டாலர் விண்வெளி தொலைநோக்கி ஒரு விண்மீனைக் கண்டறிந்துள்ளது, இது பிக் பேங்கிற்கு 280 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே இருந்தது, இது வானியலாளர்கள் “காஸ்மிக் டான்”…

Read More

முனிச்: நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணி. அந்த அணியின் வெற்றி கொண்டாத்தின் போது மறைத்த தனது மகளின் நினைவை பகிர்ந்து தலைமை பயிரிச்சியாளர் லூயிஸ் என்ரிக்கே உருக்கமாக பேசி இருந்தார். ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் இன்டர் மிலன் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது பிஎஸ்ஜி. அதுவும் எம்பாப்பே, மெஸ்ஸி, நெய்மர் மாதிரியான நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமல் இம்முறை பட்டம் பிஎஸ்ஜி வென்றுள்ளது. இந்நிலையில், மறைந்த தன் இளைய மகள் Xana-வின் நினைவாக, தானும் தன் செல்ல மகளும் இணைந்து பிஎஸ்ஜி கொடியை பிடித்திருப்பது போன்ற படம் கொண்ட டி-ஷர்ட்டை லூயிஸ் என்ரிக்கே அணிந்திருந்தார். “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆட்டத்தின் கடைசியில் எனது குடும்பத்துக்காக பதாகையை ரசிகர்கள் ஏந்திய அந்த தருணம் உணர்வுப்பூர்வமானது. நான்…

Read More

முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நான் நடிகன் என்று கமல்ஹாசன் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். ’தக் லைஃப்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கமல். தற்போது வெளிநாடுகளில் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “’தக் லைஃப்’ படத்தை பாருங்கள். இதில் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். முதலில் சினிமா ரசிகன், பின்பு தான் நடிகன். நான் ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டேன். உங்களுக்கு வைக்கப்போகும் விருந்தில் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு பார்த்துவிட்டேன். மணிரத்னம், கமல்ஹாசன் இருவருமே எனக்கு தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இப்படம் என்னிடம் பேசியது. அந்த உரையாடலின் நீட்சியாகவே இங்கு தைரியமாக பேசிக் கொண்டிருக்கிறேன். சிறு தடங்கல்கள் வந்தாலும் நீங்கள் என்னை தூக்கிக் கொண்டு போய் இறக்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். தமிழகத்தில் இன்று காலை முதல் ‘தக்…

Read More

சென்னை: மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற்றது. மதுரையில் 48 ஆண்டுக்கு முன்பு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும், நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும், ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், இந்தித் திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம் உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களின் விவரம்: 1. கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்! 2. மக்களின் பேராதரவுடன் தொடர்…

Read More

வ.க​வுதமன் இயக்கி நடித்​துள்ள படம், ‘படை​யாண்ட மாவீ​ரா’. காடு​வெட்டி குரு-​வின் வாழ்க்​கைக் கதை​யான இதில் சமுத்​திரக்​க​னி, பூஜி​தா, பாகுபலி பிர​பாகர், சரண்யா பொன்​வண்​ணன், சாய் தீனா, ஆடு​களம் நரேன், மன்​சூர் அலி​கான், தமிழ் கவுதமன் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். நிர்​மல் சரவண​ராஜ், எஸ்​.கிருஷ்ண மூர்த்தி தயாரிப்​பில் வி.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்​கும் இந்​தப் படத்​தின் பாடல்களுக்கு ஜி.​வி. பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். சாம்​.சி.எஸ். பின்​னணி இசை அமைத்​துள்​ளார். இதன் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசும்​போது, ‘‘தமிழில் இருந்​து​தான் கன்னட மொழி வந்​தது என்று கமல்​ஹாசன் சொன்​னது வரலாறு. அதை அவர் பேசி​யிருக்​கிறார். அதை ஏற்​பதும் ஏற்​காததும் உங்​கள் விருப்​பம். அவர் படத்தை ஓட விட​மாட்​டோம் என்​கிறார்​கள். நாங்​கள், உங்​களின் கேஜிஎப் போன்ற படங்​களைச் சுதந்​திர​மாக ஓடவிட்​டதற்​கான பரிசு இது. நீங்​கள் தடுத்​தால் எங்​களுக்​குத் தடுக்க முடி​யா​தா? முடி​யும். ஆனால் நாங்​கள் செய்​வ​தில்​லை.…

Read More

சென்னை: “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்” என்று தேசிய முற்போக்கு திராவிட கழக்கத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 மாநிலங்களவைத் தேர்தலில்தான் தேமுதிகவுக்கு சீட் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர். அரசியலில் தேர்தலை நோக்கிதான் அனைத்து பயணமும் இருக்கும் என்பதால் எங்களின் நிலைப்பாடும் அதை நோக்கிதான் இருக்கும். தேர்தலை மனதில் வைத்தே தேமுதிக பயணிக்கிறது. 2026 தேர்தலில் தேமுதிக தனது கடமையை நிறைவேற்றும். இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கும்படி கோரி எல்.கே. சுதீஷ் சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை…

Read More

ஆஸ்திரேலியாவில் வானியலாளர்கள் ஒரு கண்டறிந்தது a மர்மமான அண்ட பொருள்பெயரிடப்பட்டது ASKAP J1832-0911அது வெடிப்புகளை அனுப்புகிறது ரேடியோ மற்றும் எக்ஸ்ரே சமிக்ஞைகள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும், முன்னர் கவனிக்கப்பட்ட எதையும் போலல்லாமல் ஒரு நிகழ்வு. கண்டுபிடிப்பு பயன்படுத்தி செய்யப்பட்டது ஆஸ்திரேலிய சதுர கிலோமீட்டர் வரிசை பாத்ஃபைண்டர் (அஸ்காப்) மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம். சமிக்ஞைகள் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடிக்கும் மற்றும் நிலையான இடைவெளியில் மீண்டும் தோன்றும், இதனால் விஞ்ஞானிகள் குழப்பமடைகிறார்கள். இந்த அரிய நடத்தை பொருளை ஒரு நீண்ட கால நிலையற்ற (எல்.பி.டி) என வகைப்படுத்துகிறது, இது ஒரு நிகழ்வு நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த கண்டுபிடிப்பு இறந்த நட்சத்திரங்களின் பரிணாமம் மற்றும் அறியப்படாத விண்வெளி இயற்பியலின் சாத்தியக்கூறுகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.மர்மமான பொருள் அஸ்காப் எவ்வாறு நடந்துகொள்கிறதுASKAP J1832-0911 அறியப்பட்ட எந்த நட்சத்திரம் அல்லது பல்சாரைப் போல நடந்து கொள்ளாது. வழக்கமான பல்சர்கள் மில்லி…

Read More

இந்தி நடிகையான திஷா பதானி, தமிழில் சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்திருந்தார். இவர் இப்போது ‘ஹோலிகார்ட்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற நடிகரும் இயக்குநருமான கெவின் ஸ்பேஸி, இந்த சூப்பர் நேச்சுரல் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இவர், ‘தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்’ (1995) படத்துக்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் ‘அமெரிக்கன் பியூட்டி’ (1999) படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றவர். இதன் படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்து வருகிறது. இதில், டால்ஃப் லண்ட்கிரென், டைரிஸ் கிப்சன், பிரையனா ஹில்டெபிராண்ட் என பலர் நடிக்கின்றனர். நடிகை திஷா பதானிக்கு இது முதல் சர்வதேச படம் அல்ல. அவர் ஏற்கெனவே ஜாக்கி சானின் ‘குங் ஃபூ யோகா’ படத்தில் நடித்துள்ளார்.

Read More

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இதனை, இன்று (ஜூன்.1) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவித்தனர். தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, பி.வில்சன், எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும். 2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய…

Read More