Author: admin

மதுரை: தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் 11,820 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிக்கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் காவல்துறையினர், சைபர் குற்றக் காவலர்கள், 2 கல்வியாளர்கள், 2 உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர், நிர்வாகப் பிரதிநிதி, ஆசிரியர் அல்லாத அலுவலரைக் கொண்ட குழுவும் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி அமைத்தபோதிலும் அவை முறையாக இயங்குவதில்லை. எனவே, மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமத்தை மாற்றி அமைத்து, மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்…

Read More

புதுச்சேரி: பாஜக ஐடி விங் தலைவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பதவி அளித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து சர்ச்சை எழுந்தது. பின்னர், அதை நீக்குவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி உள்ளார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது என்..ஆர்.காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கட்சியில் தொண்டர்களுக்குப் பொறுப்புகள் தரப்பட்டு வருகின்றன. கட்சியைப் பலப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸின் மாநில வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், பிரவீண்குமார் என்பவரைச் செயற்குழு உறுப்பினராக நியமித்துள்ளனர். அவர் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிரவீண்குமார் பாஜகவில் முக்கியப்பொறுப்பில் உள்ளதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம். இதுதொடர்பாக பிரவீண்குமார் வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் அணியின் செயற்குழு உறுப்பினராக எனது…

Read More

இந்த பிரபலமான காபி சங்கிலி ரூ .3 கோடி வேலையை வழங்குகிறது, ஆனால் அது கவுண்டருக்குப் பின்னால் இல்லை உலகெங்கிலும் உள்ள தலைப்புச் செய்திகளைப் பிடிக்கும் ஒரு ஆச்சரியமான தொழில் நடவடிக்கையில், உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட காபிஹவுஸ் சங்கிலி – ஸ்டார்பக்ஸ் அதன் கஃபேக்களுக்கு அப்பால் உயரும் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, நிறுவனம் தனது கார்ப்பரேட் விமானத்திற்காக ஒரு பைலட்-இன்-கமாண்டை பணியமர்த்துகிறது, ஆண்டுக்கு 360,000 டாலர் (தோராயமாக ரூ .360 கோடி) கண்களைத் தூண்டும் சம்பளத்தை வழங்குகிறது. ஆனால் இந்த பாத்திரம் எஸ்பிரெசோ ஷாட்களை மாஸ்டரிங் செய்வது அல்லது வாடிக்கையாளர்களை புன்னகையுடன் வாழ்த்துவது அல்ல; இது ஸ்டார்பக்ஸின் சிறந்த பித்தளை வானம் முழுவதும் செல்லவும், பிராண்டின் மதிப்புகளை 30,000 அடி உயரத்திலிருந்து காற்றில் நிலைநிறுத்துவதைப் பற்றியது. விமானத் திறன்களை விட, இந்த நிலை உயரடுக்கு தொழில்முறை, க ti ரவம் மற்றும் தூதர் இருப்பைக்…

Read More

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் மூத்த நக்சல் போராளிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை (டிஆர்ஜி) மற்றும் சிறப்புப் பணிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று வனப்பகுதியில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பின்னர் கூட்டுப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் இடையே அதிகாலை முதல் கடுமையான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. இந்த மோதலின் போது, ​​மிகவும் தேடப்படும் நக்சல் தலைவர்களில் ஒருவரான மத்திய குழு உறுப்பினர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சத்தீஸ்கரில் மே மாதம் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவராஜு என்று அழைக்கப்படும் நம்பலா…

Read More

தாம்பரம்: “டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எரிக்கரை பகுதியில் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியது: “சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது. அந்தக் காலங்களில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருந்தது. எல்லா மனிதர்களும் தனிமனித ஆயுள் என்பது நூறாண்டு…

Read More

ஐ.க்யூ, தர்க்கரீதியான சிந்தனை மற்றும் அவதானிப்பு திறன் சோதனை எடுக்க நீங்கள் தயாரா? உங்கள் விமர்சன சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்களை மதிக்க இந்த பணி மற்றும் பிற புளைக்கு வீரர்கள் சிறந்தவர்கள். கற்பனையாக சிந்திக்கவும், நேர அழுத்தத்தின் கீழ் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யவும் உங்கள் திறன் இந்த சிக்கல்களால் சோதிக்கப்படுகிறது. இத்தகைய தடைகளைத் தாண்டி மன சுறுசுறுப்பு மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.இந்த புதிர்களைத் தீர்ப்பது விமர்சன சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மற்றும் மனக் கூர்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. விரைவான நிலைமை மதிப்பீடு, தர்க்கரீதியான விலக்கு மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துவதற்கான உங்கள் திறனை இந்த புளைக்கு பயன்படுத்துபவர் மதிப்பிடுகிறார்.இன்றைய ப்ரைண்டீசரில், ஒரு சவாலான காட்சியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் யார் முதலில் விழுவார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இதை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க என்ன தேவை என்பதை நீங்கள் பெற்றுள்ளீர்களா?…

Read More

குவஹாத்தி: அசாமில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதாகவும், 21 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ள பாதிப்பு தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைலகண்டி, திப்ருகார், மோரிகான், ஹோஜாய், கம்ரூப், நாகோன், கோலாகாட், பிவநாத், கச்சார், ஸ்ரீபூமி, சோனித்பூர், லக்கிம்பூர், தர்ராங், பார்பேட்டா, கோல்பாரா, தெற்கு சல்மாரா, கர்பி அங்லாங் மேற்கு, திமா ஹசாவ், சிவசாகர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் தேமாஜி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,59,601 மக்கள் தொகை கொண்ட ஸ்ரீபூமி மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைத் தொடர்ந்து 1,72,439 பேர் வாழும் ஹைலகண்டி மாவட்டமும், 1,02,716 மக்கள் வாழும் நாகோன் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 14977.99 ஹெக்டேர் பரப்பளவிலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார்…

Read More

தாம்பரம்: “ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?” என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தாம்பரம் மாநகர திமுக சார்பில் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத்தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் டி.ஆர்.பாலு பேசியது: “இந்தியா – பாகிஸ்தான் இடையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் முப்படைகளும் தங்களது செயல்திறனால் பாகிஸ்தானின் கொக்கரிப்பை அடக்கியது. இந்தச் சூழ்நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ, அதையே நமது முதல்வரும் செய்துள்ளார். எதை பாராட்ட வேண்டுமோ அதை பாராட்டியுள்ளார். எதை எடுத்து கூற வேண்டுமோ அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதமாக எழுதியுள்ளனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ சில நாட்களே…

Read More

மெக்னீசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், மேலும் இது உங்கள் உடலில் 300 க்கும் மேற்பட்ட செயல்முறைகளை ஆதரிப்பதாக அறியப்படுகிறது, இது போன்றது- தசை செயல்பாடு, நரம்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தி. ஆனால், பலர் தங்கள் உணவில் போதுமான மெக்னீசியம் பெறவில்லை. நம் உடல் பெரும்பாலும் மெக்னீசியம் குறைபாட்டின் நுட்பமான அறிகுறிகளை அளிக்கிறது, அவை நம் முகத்திலும் நம் கண்களிலும் சரியாகக் காட்டப்படலாம்- இருப்பினும், உடலில் ஒரு கனிம ஏற்றத்தாழ்வை அடையாளம் காண இந்த அறிகுறிகளை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், நல்ல பகுதி என்னவென்றால், அடையாளம் காணப்பட்டவுடன், சரியான உணவு, கூடுதல் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை பெரும்பாலும் சரிசெய்ய முடியும். இந்த அத்தியாவசிய கனிமத்தில் உங்கள் உடல் குறைவாக இயங்குவதைக் குறிக்கும் சில முக மற்றும் கண் தொடர்பான சில அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:1. கண் இழுத்தல் அல்லது கண் இமை பிடிப்புஇந்த…

Read More

பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இயற்கைக்கு மாறான வகையில் 11 பேர் மரணமடைந்ததாக தனித்தனியாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் போலீஸ் இதுவரை எஃப்ஐஆர் ஏதும் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், 11 பேரின் மரணத்தையும் இயற்கைக்கு மாறான மரணம்…

Read More