சென்னை: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருச்சி பச்சமலை தோனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பச்சமலைப் பகுதியில் கிளாட் (CLAT) தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.யில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்கு திமுக சட்டத்துறையும் – அதன் செயலாளர் இளங்கோவனும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
Author: admin
சென்னை: தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும். தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு…
கோவில்பட்டி: கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராமம் உபமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ 7 இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்டிகள் மூலமும், மண் கொண்டும் பல மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் அய்யனார்ஊத்தில் தமிழக மின்சார வாரியத்துக்கு சொந்தமான உபமின் நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 400/230 110 கி.வோ. செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த உபமின் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென கசிவு ஏற்பட்டது. ஒரு மின்மாற்றி 70 ஆயிரம் லிட்டர் ஆயில் கொள்ளளவு கொண்டது. இதனால், மின்மாற்றியில் ஏறபட்ட தீ மளமளவெனப் பரவியது. இதனால் அங்கு செயல்படும் மற்ற மற்ற மின்மாற்றிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கரும்புகை அதிகளவு…
ராஜமவுலி இயக்கத்தில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘பாகுபலி’ இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ரீரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ‘பாகுபலி: தி பிகினிங்’ (முதல் பாகம்) வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. அதிக வசூல் செய்த டப்பிங் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை…
சென்னை: “தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல் உள்ளது என ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கபட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த கோவை சப்-கலெக்டர், குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி செந்தாமரைக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து…
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. வெளியான முதல் நாளில் இருந்தே இப்படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சிறப்பாக இருந்தநிலையிலும், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்திய அளவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்தது. இது படக்குழுவுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. எனினும் விடுமுறை தினம் என்பதால் அடுத்தடுத்த நாளில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் வெறும் இந்தியாவில் ரூ.22 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில்…
ராமநாதபுரம்: மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் அச்சுந்தன்வயலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆளும் திமுக அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது. வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக நடைபெறும். இதை திமுக அரசு தடுக்க நினைத்தால் நீதிமன்றத்துக்குச் செல்வோம். அதிமுக, பாஜக கூட்டணி அமைந்ததும், திமுகவுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர்…
ஒரு கவிஞரின் பேனா மற்றும் ஒரு எழுத்தாளரின் வார்த்தைகள் மட்டுமே ஒரு நபரை அழியாது என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. என்பதில் சந்தேகமில்லை, கவிஞர்கள் தங்கள் அன்பான மக்களை அழியாதவர்களாக மாற்றுவதன் மூலம் அழியாதவர்களாக மாற்றுகிறார்கள், அவர்கள் மறக்க இயலாது. இதுபோன்ற 10 வரிகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
ஆர்கன்சாஸ் மரண தண்டனை கைதி அறியப்படாத காரணங்களால் சிறையில் இறக்கிறார் (AP) ஆர்கன்சாஸ் மரண தண்டனை கைதி லத்தாவியஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை பிற்பகல் வார்னர் சூப்பர்மேக்ஸ் சிறையில் தெரியாத காரணங்களால் இறந்தார் என்று மாநில திருத்தங்கள் துறை தெரிவித்துள்ளது. அவர் தனது 40 களில் இருந்தார். ஆர்கன்சாஸ் திருத்தங்கள் துறை ஜான்சனின் மரணத்திற்கான காரணத்தை வழங்கவில்லை, மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஜான்சன் தனது தந்தை ஜானி ஜான்சனின் கொலைக்கு 2000 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை பெற்றார். சிறைக் காவலரான பார்பரா எஸ்டரின் 2012 கொலைக்கு ஜான்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜான்சன் எஸ்டரை மூன்று முறை ஒரு ஷாங்க் மூலம் குத்தி, இதயத்தை பஞ்ச் செய்தார், நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன. அவர் சிறையில் ஒரு ஜோடி அங்கீகரிக்கப்படாத ஜிம் காலணிகளைப் பெற்றாரா என்று அவர் விசாரித்து வந்தார். அவரது வழக்கறிஞர்கள் போலீசாருக்கு வழங்கிய அறிக்கையில் ஜான்சன் தனது நடவடிக்கைகளுக்கு…
சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசனின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, அவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி என்றும், அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனவும், கடன் மதிப்பு ரூ.49.67 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்.பி அன்புமணி, அதிமுக எம்.பி சந்திரசேகரன், மதிமுக எம்.பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2-ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில்…