Author: admin

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், உட்கட்சி பிரச்சினையை தீர்க்க சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் சென்று ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசினார். அன்றைய தினமே, ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பு குறித்து அன்புமணி எதுவும் சொல்லாத நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தியோ, நீண்ட கால நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்தித்ததாக் தெரிவித்தார். வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக,…

Read More

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஜூலை 15-ம் தேதி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6,329 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கான அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன: அதன்படி, கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கணினி பயிற்றுநர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும், பணியிட மாறுதல் கேட்கும் பயிற்றுநர்களுக்கு தலைமையாசிரியர்கள் அனுமதி வழங்க வேண்டும். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை…

Read More

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் கட்சிகளை கலந்து பேசாமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாநிலத்துக்கு மாநிலம் பாஜக மதவாத அரசியல் வடிவத்தை மாற்றி கையிலெடுக்கும். வட இந்தியாவில் விநாயகர், ராமர் அரசியலையும், மேற்கு வங்கத்தில் துர்கா, காளி அரசியலையும் முன்னெடுக்கிறார்கள். தமிழகத்தில் முருகனை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுத்திகளில் ஒன்று. ஆனால், பிற மாநிலங்களில் மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவதைப்போல, தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் மயங்கமாட்டார்கள். தமிழ்க் கடவுள் முருகனும் மயங்காட்டார். அவர் மதவாத சக்திகளை விரட்டியடிக்கக் கூடியவர். அவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முருகன் உறுதிப்படுத்துவார். அவர்கள் எந்த மாநாட்டை நடத்தினாலும் தமிழகத்தில் எடுபடாது. 2031-ல்தான் மக்கள்…

Read More

நாடு முழுவதும் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தவர்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் ராகவ் லங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு பல்வேறு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மாணவர் சேர்க்கையை நடத்தின. பொதுவாக, கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேர்ந்தவர்களின் விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் பதிவேற்ற வேண்டும். அந்த வகையில், 2024-25-ம் கல்வி ஆண்டில் இடங்கள் பெற்ற மாணவர்களில் 1,15,250 பேரின் விவரங்கள் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெயர்கள் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில்…

Read More

கனிமவளங்கள் மீது தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் புரவிபாளையத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் நடத்தி வரும் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகக்கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கடந்த 2021 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பொதுநல வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வுசெய்த கோவை சார்ஆட்சியர் அந்த குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதித்து கடந்த…

Read More

பொதுமக்கள், வாக்காளர்கள் குறைகளை கேட்டு பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை திமுக, பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த சூழலில் கடந்த ஜூன் 1ம் தேதி மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது’’ என அறிவித்தார். இதையடுத்து, வீடுவீடாகச் சென்று, வாக்காளர்களை…

Read More

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது. இதனால், ஒரு பவுன் ஆபரண தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா – சீனா இடையே நிலவிய வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கம் விலை கடந்த மே 12-ம் தேதி ரூ.2,360 வரை குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், மே 28-ம் தேதி முதல் மீண்டும் உயர தொடங்கியது. குறிப்பாக, ஜூன் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின்னர்,…

Read More

கடலூர்: கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் வட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சின்ன இருசாம் பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் ஆலயம் செடல் திருவிழா நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு (ஜூன்.6) சாமி ஊர்வலம் நடைபெற்றது. ஐந்து பேர் சேர்ந்து சாமியை ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அப்பொழுது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் உரசியது. இதில் சாமியை தூக்கிச் சென்ற ஐந்து பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் புதுச்சேரி, அரியாங்குப்பம் மனவெளி பெரியார் நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கர்ணாசந்திரன்(40) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சின்ன இருசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவமணி (22), ஹரி கிருஷ்ணன் மகன் கண்ணன் (55), பெருமாள் மகன் முருகையன் (35) மற்றும் மணிகண்டன் மகன் ஸ்ரீவேஷ் (6) ஆகிய நான்கு பேரும்…

Read More

உக்ரைன் மேற்கொண்ட ஆபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால், இது பலனளிக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் கடந்த 1-ம் தேதி ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தொலை தூர பகுதிக்குள் லாரிகள் மூலம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டு ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 41 விமானங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. உக்ரைனின்…

Read More

சென்னை: தமிழகத்தில் ஜூன் 10 முதல் 13 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 7 ஆம் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 8 ஆம் தேதியில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 9 ஆம் தேதியில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 10 ஆம்…

Read More