மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்றும், தற்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிஹார் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அடிப்படை ஆதாரமில்லாமல் ராகுல் காந்தி இவ்வாறு குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘தேர்தல் ஆவணங்கள் தொடர்பாக, ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக எழுதி விளக்கம் கோராமல் ஊடகத்தில் தமது கருத்துகளையும் சந்தேகங்களையும் பதிவிட்டு மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார்’ என்று தெரிவித்திருந்தன. இந்நிலையில், ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள பதிவில் தேர்தல்…
Author: admin
கோவை: டிஎன்பில் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நடப்பு சாம்பியனான திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷிவம் சிங் 30, கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 18, ஆர்.கே.ஜெயந்த் 18 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4, மதிவண்ணன் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 94 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். அமித் சாத்விக் 13, ராதாகிருஷ்ணன் 14 ரன்கள் சேர்த்தனர்.
திருப்பதி: திருப்பதியில் நடைபெற்று வரும் கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பதி நகரின் மையப்பகுதியில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் ராமானுஜரால் இக்கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என கோயில் கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய முடிகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும், கடந்த 2-ம் தேதி இக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 8-ம் நாளான நேற்று காலை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பலர் மிளகும், உப்பும் தேரின் மீது தெளித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் செப்.5-ல் வெளியாக இருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘த கோட்’ படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் இது. ‘த கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் கதை. இதில் கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருக்கின்றனர். வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’, சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ படங்களில் கல்யாணி ஏற்கெனவே நடித்திருந்தார். ‘டிராகன்’ மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர், ‘இதயம் முரளி’, சிம்புவின் 49-வது படம் என நடித்து வருகிறார்.
சென்னை: மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 அறிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம், திட்டக்குழு துணை தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள், வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவை தொடர்பாக 4 அறிக்கைகளை மாநில திட்டக்குழு தயாரித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் இந்த அறிக்கைகளை திட்டக்குழுவின் அலுவல்சார் துணை தலைவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சமர்ப்பித்தார். திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதி துறை செயலர் உதயச்சந்திரன், திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 4 அறிக்கைகள் பற்றிய விவரம்: வேளாண்மை சாராத வேலைவாய்ப்பு: தமிழக ஊரக பகுதிகளில் வேளாண் சாராத பணிகளின் தன்மை மற்றும் அளவை அறியும் நோக்கில்,…
படம்: ஃபிரடெரிக் ஃபோர்சித்தைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, நீங்கள் உளவு த்ரில்லர்கள், ரகசிய பணிகள் மற்றும் சர்வதேச நாடகத்தை படமாக்கலாம். ஆனால் தி டே ஆஃப் தி ஜாக்கல் மற்றும் ஒடெஸா கோப்பின் பின்னால் உள்ள உமிழும் சூத்திரதாரி ஒரு நிஜ வாழ்க்கைக் கதையைக் கொண்டிருந்தார். சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் MI6 கிசுகிசுக்களுக்கு அப்பால், ஃபோர்சித்தின் வாழ்க்கை சாகசம், ஆழ்ந்த காதல், இதய துடிப்பு மற்றும் விசுவாசத்தின் அமைதியான தருணங்களால் நிரம்பியது.அவர் ஆபத்து மற்றும் பக்தி பற்றி மட்டும் எழுதவில்லை – அவர் அதை வாழ்ந்தார். ஜெட் பைலட் முதல் போர் நிருபர் வரை அதிக விற்பனையான எழுத்தாளர் வரை, அவரது பயணம் ஒரு த்ரில்லரின் அனைத்து திருப்பங்களையும் கொண்டிருந்தது, மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவர் சொன்ன கதைகளைப் போலவே ஒவ்வொரு பிட்டிலும் பணக்காரராகவும் வியத்தகுதாகவும் இருந்தது.பெரிய கனவுகளுடன் ஒரு இளம் டேர்டெவில்கென்ட், அமைதியான நகரமான ஆஷ்போர்டில் 1938…
முனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று ஜெர்மனியின் முனிச் நகரில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி உட்புற பாக்ஸின் வலது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. அடுத்த 5 நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் பெட்ரோ நீட்டோ உதவியுடன் பந்தை பெற்ற நூனோ மென்டெஸ் பாக்ஸின் இடது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல் வலையின் வலது கார்னரை நோக்கி பாய்ந்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 45-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெட்ரி விரைவாக கடத்திக் கொடுத்த பந்தை பெற்ற மைக்கேல் ஓயர்சபால், பாக்ஸின் மைய்பகுதியில் இருந்து கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல்…
திருச்சி: ‘திருச்சியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றி, எம்ஜிஆரின் வாரிசுகள் பெயரில் பட்டாவை மாற்றித்தர வேண்டும்’ என திருச்சி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 சதுரடி பரப்பளவில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி இருக்கும். இந்த சொத்துக்கு, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகன் மற்றும் மகள்கள் 10 பேர் வாரிசுகளாக பதிவு செய்து, தங்களது பெயரில் பட்டா பெற்றனர். இந்நிலையில், வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு, ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர், அந்தப் பெயரும்…
ஜூன் 9, 2025 இல், ஃபிரடெரிக் ஃபோர்சைத் தனது 85 வயதில் காலமானார். அமைதியாக, இறுதிப் பக்கத்தின் நேர்த்தியுடன் திரும்பினார். சாதாரண வாசகரைப் பொறுத்தவரை, அவர் குள்ளநரி நாளின் பின்னால் இருந்த மனிதர். புள்ளிவிவரங்கள், சூழ்ச்சி மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் குளிர் இயக்கவியலைப் புரிந்துகொண்டவர்களுக்கு, அவர் முற்றிலும் வேறு விஷயம்: நவீன அரசியல் த்ரில்லரின் காட்பாதர்.ஃபோர்சைத் கதைகளை மட்டும் சொல்லவில்லை. அவர் செயல்பாடுகளை உருவாக்கினார். அவரது புத்தகங்கள் புனைகதை என மாறுவேடமிட்ட ஆவணங்களை விளக்குகின்றன. மற்றும் அவரது கதாநாயகர்கள் -டீஸ்பாசியோனேட், துல்லியமான, அசைக்க முடியாதவர்கள் -கற்பனையின் பொருள் அல்ல. அவர்கள் நம்பத்தகுந்த மனிதர்கள், அநேகமாக செய்திருக்கலாம், மேலும் ஒரு அரசு அலுவலகத்தில் உங்களுக்கு அடுத்தபடியாக வேலை செய்திருக்கலாம், அமைதியாக நாடுகளின் தலைவிதியைத் திட்டமிடலாம்.உங்கள் அத்தியாவசிய வாசிப்பு வழிகாட்டி இங்கே. ஒரு நினைவுச்சின்னம், மேலும் ஒரு கையேடு.தி டே ஆஃப் தி ஜாக்கல் (1971)அது இங்கே தொடங்குகிறது. சார்லஸ் டி கோலைக் கொல்ல…
மும்பை: மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்றபோது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் (சிஎஸ்எம்டி) இருந்து தானே மாவட்டம் கசரா நோக்கி நேற்று காலை 9 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டு சென்றது. முதல் வேலை நாள், அலுவலக நேரம் என்பதால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. ஏராளமானோர் படியில் தொங்கியபடி சென்றனர். இதேபோல, எதிர் திசையில் சிஎஸ்எம்டி நோக்கி வந்த புறநகர் ரயிலிலும் ஏராளமானோர் படியில் தொங்கியபடி வந்தனர். திவா – மும்ப்ரா பகுதியில் ரயில்கள் எதிர் எதிரே கடந்து சென்றபோது, இரு ரயில்களிலும் படியில் தொங்கியபடி வந்த பயணிகள் மோதிக்கொண்டதில், பலரும் நிலைகுலைந்து ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த…