பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று தனது 78-வது பிறந்த நாளை பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார். அப்போது முற்றிலும் லட்டுகளால் தயாரான 78 கிலோ கேக்கை அவர் வாளால் வெட்டினார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ‘லாலு யாதவ் ஜிந்தாபாத்’ என்ற வாழ்த்து முழக்கத்துக்கு மத்தியில் அவர் மிகப் பெரிய கேக்கை வாளால் வெட்டுவதை காண முடிகிறது. லாலுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “எங்களுக்கு இடையிலான பிணைப்பு எப்போதும் அரசியலுடன் மட்டுமே தொடர்புடையது அல்ல. அது ஒரு ஆழமான மனிதநேய தொடர்பில் இருந்து வருகிறது. பகிர்ந்து கொள்ளப்பட்ட விழுமியங்கள் மற்றும் சமூக நீதிக்கான போராட்டத்தில் அது வேரூன்றியுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், லாலு தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும்,…
Author: admin
சிதம்பரம்: “திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை நிர்வாகியின் மகளின் திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 14-ம் தேதி திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுகிற ‘மதசார்பின்மையை காப்போம்’ மாபெரும் பேரணி நடைபெறுகிறது. மதச்சார்பின்மைக்கு ஆதரவாக காங்கிரஸ் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட இண்டியா கூட்டணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அணியைத் தகர்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சதித்திட்டம் போடுகிறது” என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “நீதிமன்ற உத்தரவு என கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பம் என்றால் சாதிய உள்நோக்கத்துடன்…
உடற்பயிற்சி என்பது வலுவான ஆயுதங்களை உருவாக்குவது, க்ளூட்ஸில் வேலை செய்வது, ஏபிஎஸ் தயாரிப்பது, ஜிம்மிற்குச் செல்வது மற்றும் மெலிதான இடுப்பைக் கொண்டிருப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இல்லை! சில நேரங்களில், நாம் நினைப்பது இல்லை. பெருகிவரும் ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் ஆதரவு மற்றும் நம் உடலின் மிக முக்கியமான மற்றும் மிகவும் கவனிக்கப்படாத பகுதிகளில் ஒன்று, நாம் வேலை செய்ய வேண்டும், இது நம் கால்கள் என்பதைக் காட்டுகிறது. பல மாடி கட்டிடத்தின் கட்டுமானத் தொகுதிகளைப் போலவே, எங்கள் கால்களும் நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். கீழ் உடல் தசைகளை வலுப்படுத்துவது நமக்கு நகர்த்தவோ ஓடவோ உதவாது, ஆனால் அது மறைமுகமாக நம் வாழ்வில் பல ஆண்டுகளைச் சேர்க்கக்கூடும்.அடித்தளம் நீண்ட ஆயுள்வலுவான கால்கள் உங்களுக்கு நடக்க, ஏற அல்லது ஓட உதவுவதை விட அதிகம். குறைந்த உடல் வலிமை சமநிலை, இயக்கம் மற்றும்…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரவீந்திரநகர் காவல் நிலையம் அருகே நேற்று ஒரு கூட்டம் கூடத் தொடங்கியபோது, அது திடீரென வன்முறையாக மாறியது. அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் மீது அந்த கும்பல் கற்களால் தாக்கியது. இதனையடுத்து கும்பலைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும், சந்தோஷ்பூர் அருகே கூட்டம் மீண்டும் ஒன்றுகூடி கொல்கத்தா காவல்துறையினருடன் மோதியது. ரவீந்திரநகர்-அக்ரா பகுதியில் மோதல்களை அடக்க அதிகாரிகள் முயன்றபோது, காவல்துறை மாவட்டத் தலைவர் (துறைமுகம்) ஹரிகிருஷ்ணா பாய் உட்பட ஐந்து காவல்துறையினர் காயமடைந்தனர். இரண்டு அரசு வாகனங்கள் சேதமடைந்தன. ஒரு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த, காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப்…
சென்னை: தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு கடந்த 2021-22-ல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 90.5 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 39.4 ஆக குறைந்துள்ளது. அதேபோல, பேறு கால சிசு உயிரிழப்பு 2021-22-ம் ஆண்டு 1,000 பிரசவங்களுக்கு 10.2 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 7.7 ஆக குறைந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை பூஜ்ஜிய அளவுக்கு கொண்டு செல்ல பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 12) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா – சீனா இடையே நிலவிய வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கம் விலை கடந்த மே 12-ம் தேதி ரூ.2,360 வரை குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், மே 28-ம் தேதி முதல் மீண்டும் உயர தொடங்கியது. குறிப்பாக, ஜூன் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின்னர், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி (ஜூன்…
இடுப்புக்கு அடியில் தோள்கள் மற்றும் முழங்கால்களின் கீழ் மணிக்கட்டுடன் உங்கள் கைகளிலும் முழங்கால்களிலும் தொடங்கவும். உங்கள் தலை மற்றும் வால் எலும்பு (மாடு போஸ்) தூக்கி, உங்கள் முதுகில் உள்ளிழுத்து வளிக்கவும். உங்கள் முதுகெலும்பை சுவாசிக்கவும், சுற்றவும், உங்கள் கன்னம் மற்றும் வால் எலும்பு (பூனை போஸ்). இந்த மெதுவான, பாயும் இயக்கத்தை 5-10 முறை மீண்டும் செய்யவும், உங்கள் சுவாசத்துடன் ஒத்திசைக்கவும்.இது எவ்வாறு உதவுகிறதுபூனை-மியூட் போஸ், அல்லது மார்ஜாரியாசனா-பிடிலாசனா, முதுகெலும்பு, கழுத்து மற்றும் தோள்களை மெதுவாக நீட்டி, விறைப்பைக் குறைத்து, முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இது உங்கள் முதுகு மற்றும் மூட்டுகளை ஆதரிக்கும் முக்கிய தசைகளையும் பலப்படுத்துகிறது. இந்த போஸ் மூட்டுகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது கீல்வாதம் வலியையும், அது கொண்டு வரும் விறைப்பையும் குறைக்க உதவுகிறது.
ஷில்லாங்: கணவனை மனைவி கொன்ற வழக்கில், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி என்று போலீஸார் முன்பு கூலிப்படையினர் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சோனம்(25). இவரது கணவர் ராஜா ரகுவன்ஷியை(28). இருவரும் தேனிலவு கொண்டாட அண்மையில் மேகாலயாவுக்கு சென்றிருந்தனர். தேனிலவுக்கு அழைத்து செல்வது போல சென்று கணவர் ராஜா ரகுவன்ஷியை, அவரது மனைவி சோனம் கூலிப்படை ஏவி கொலை செய்தார். அவரது காதலன் ராஜ் குஷ்வாகாவும் இதற்கு உடந்தையாக இருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் அதிபரின் மகளான சோனம், மணமகன் ராஜா ரகுவன்ஷி ஆகியோரின் கடந்த மே 11-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு சோனத்துக்கு, தனது தந்தையின் நிறுவனத்தில் பணியாற்றிய, ராஜ் குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி ராஜா ரகுவன்ஷியை, சோனம் திருமணம் செய்தார். ஆனால், அவருடன் வாழ்வதற்கு…
சென்னை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ள தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு விவரம்: சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ளார். ஆசிரியர் கனகலட்சுமி ‘தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளார். மேலும் தமிழ் பணியை தொண்டாகக் கருதி பணியாற்றி வருகிறார். இந்தப் பணியை பாராட்டி கிராய்டன் தமிழ் சங்கம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவரை கவுரவிக்கவுள்ளது. தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியர் கனகலட்சுமிக்கு தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில்…
சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) வாகனங்களை ஒழுங்காக வரிசைப்படுத்தாததால், மீண்டும் இடநெருக்கடி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில், விம்கோ நகர் – விமானநிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் உள்ள நிலையங்களுக்கு பயணிக்க, ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் மாறிக் கொள்ளும் வசதி இருப்பதால், இந்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ‘ஹவுஸ்புல்’ – ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இடதுபக்க பார்க்கிங் பகுதியில் 1,300 டூவீலர்கள், 190 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. இந்த பார்க்கிங் பகுதி முழுமையாக நிரம்பிவிடுவதால், கூடுதலாக 300 டூவீலர்களை நிறுத்தும் விதமாக, புதிய வாகன நிறுத்தம் பகுதி, வலது பக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திறக்கப்பட்டது. ஆனால், இங்கும் காலை 10 மணிக்குள் நிரம்பி விடுவதால், ‘ஹவுஸ்புல்’ என்று பலகை வைத்து, மறுபக்கத்தில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு செல்லும்படி கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த…