பாட்னா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பாஸ்வான் – பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ‘அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன. பிஹாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பிஹார் தேர்தலில் தனித்து களமிறங்கி நிதிஷ் குமார் கட்சிக்கு பெரும் சேதாரத்தை உருவாக்கினார். அதேபோல சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது அவரின் கட்சி. எனவே லோக் ஜனசக்தி கட்சிக்கு இப்போது மவுசு அதிகரித்திருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும், பிஹாரில் ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கும் இடையில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பிஹார் சட்டப்பேரவையில்…
Author: admin
நாமக்கல்: கரூர் விவகாரம் காரணமாக தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியினர், தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்ற போர்வையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும். கரூர் நகரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். ஆனால், இதற்கு முன்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மை இல்லை. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த,…
இந்த ஆண்டு அமெரிக்காவில் கார்வா ச uth த் கவனிக்கிறீர்களா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில டோஸ் மற்றும் செய்யக்கூடாதவை.
சண்டிகர்: ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக சண்டிகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், “இன்று மதியம் 1.30 மணியளவில், செக்டார் 11 காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. செக்டார் 11-இன் காவல் நிலைய அதிகாரி மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தற்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு அல்லது தடயங்கள் எதுவும் கிடைக்குமா என மத்திய தடய…
மதுரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 59-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைகளில் பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் பேசும்போது,தலைமை நீதிபதி மீதான இந்த தாக்குதல் இந்திய நீதித்துறையை அசைத்துப் பார்க்க எண்ணும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் சனாதானத்தின் குரல். மத அடிப்படைவாதம் எந்த விதத்தில் தாக்குதல் வந்தாலும் அதை ஏற்க இயலாது. அது இந்த தேசத்தை பிளவுபடுத்தும். சனாதனம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது மக்களை பிளவுபடுத்தும் என கூறினர். சட்டத்தின் மீதான தாக்குதலை அனுமதியோம். தலைமை நீதிபதி…
உடல் நன்மைகளுக்கு அப்பால், சூடான, மண்ணான மற்றும் நறுமணத்துடன் நாளைத் தொடங்குவது ஒரு அடிப்படை விளைவைக் கொண்டுள்ளது. இது ஒரு கவனமுள்ள தருணம், மலாக்கா அரோரா தானே தனது ஆரோக்கிய வழக்கத்தில் பெரும்பாலும் வலியுறுத்தியுள்ளார். இந்த உட்செலுத்தலை மெதுவாகப் பருகும் செயல், நாளின் அவசரத்திற்கு முன்பு, உடலும் மனமும் தேவைப்படும் அமைதியைக் கொண்டுவருகிறது.டாக்டர் பால் சொல்வது போல், பாரம்பரிய தீர்வுகள் “அவர்கள் என்ன செய்கிறார்கள்” என்பது மட்டுமல்ல, “அவர்கள் எப்படி உணர்கிறார்கள்” என்பதையும் பற்றியது. சுகாதார சடங்குகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் சமநிலையாக இருக்கும்போது, முழுமையல்ல, முடிவுகள் பெரும்பாலும் நீண்ட காலம் நீடிக்கும்.
சென்னை: கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ 2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது. கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் (09.10.2025) மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச்…
உலர்ந்த உதடுகள், துண்டிக்கப்பட்ட உதடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன, உதடுகளில் மென்மையான தோல் ஈரப்பதத்தை இழந்து நீரிழப்பு அல்லது எரிச்சலூட்டும்போது உருவாகிறது. மீதமுள்ள சருமத்தைப் போலல்லாமல், உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை, அவை வறட்சி, விரிசல் மற்றும் சேதத்திற்கு மிகவும் பாதிக்கப்படுகின்றன. குளிர், காற்று, சூரியன் மற்றும் வறண்ட காற்று போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் இயற்கை ஈரப்பதத்தை அகற்றும், அதே நேரத்தில் அன்றாட பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறை தேர்வுகளும் நிலையை மோசமாக்கும். அறிகுறிகளில் இறுக்கம், துள்ளல், உரிக்கப்படுவது, சிவத்தல் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், வலி விரிசல் அல்லது இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும். சரியான கவனிப்பு மற்றும் நீரேற்றம் இல்லாமல், உலர்ந்த உதடுகள் சங்கடமாகி, குணமடைய மெதுவாக, மேலும் எரிச்சலை ஏற்படுத்தும்.உலர்ந்த உதடுகளின் அறிகுறிகள்: துண்டிக்கப்பட்ட, விரிசல் மற்றும் உரிக்கப்படும் உதடுகளின் அறிகுறிகள்உலர்ந்த உதடுகளை பல குறிப்பிடத்தக்க அறிகுறிகளால் அங்கீகரிக்க முடியும். ஒரு பொதுவான அறிகுறி இறுக்கம் அல்லது கடினத்தன்மையின் உணர்வு, அங்கு உதடுகள்…
சென்னை: நடிகர் அஜித் குமார் ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ள நிலையில், அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்தில் தொடந்து ஆர்வம் காட்டி வருகிறார் அஜித் குமார். சமீபத்தில் கூட, ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில்…
சென்னை: வகுப்பு வாத, மத வெறி சிந்தனையோடு நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு, விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நேற்று வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்த போது, டெல்லி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பவர், தலைமை நீதிபதியை நேரடியாக தாக்கும் நோக்கத்துடன், காலணியை வீசிய இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காலணியை வீசிய வழக்கறிஞர் “சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது” என தொடர்ந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்த பாதுகாவலர்கள் வழக்கறிஞரை உடனடியாக வெளியேற்றியுள்ள போதும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல், சுதந்திரமாக வெளியில் சுற்ற…
