இந்த தடை செப்டம்பர் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (பட கடன்: AP) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இது டிக்டோக் மாநிலத்தில் மேலும் 90 நாட்களுக்கு செயல்பட அனுமதித்தது. அவர் வியாழக்கிழமை காலை சமூக ஊடக தளமான உண்மை சமூகத்தில் நிர்வாக உத்தரவை வெளிப்படுத்தினார். அவர் தனது இடுகையில், “டிக்டோக் மூடுவதற்கான காலக்கெடுவை 90 நாட்கள் (செப்டம்பர் 17, 2025) நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டேன். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!”இந்த நடவடிக்கை அவரது நிர்வாகத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த அதிக நேரம் வழங்கும், இது சமூக ஊடக தளத்தை அமெரிக்க உரிமையின் கீழ் வர அனுமதிக்கும்.செவ்வாயன்று ஒரு அறிக்கையில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், “அவர் பல முறை கூறியது போல, ஜனாதிபதி டிரம்ப் டிக்டோக் இருட்டாக இருப்பதை விரும்பவில்லை. இந்த நீட்டிப்பு 90 நாட்கள்…
Author: admin
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 போட்டிகள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் மொத்தம் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணி – பஞ்சாப் கிங்ஸ் அணி மோதிய இந்த இறுதிப் போட்டிதான் அதிக பார்வைகளை பெற்ற போட்டி என்று ஜியோஸ்டார் தளம் தெரிவித்துள்ளது. இந்த போட்டியை தொலைகாட்சி வாயிலாக 16.9 கோடி மக்கள் பார்த்துள்ளனர், டிஜிட்டல் வழியாக 89.2 கோடி பார்வைகள் இந்த போட்டிக்கு கிடைத்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு 16.74 பில்லியன் நிமிட பார்வைகளை இப்போட்டி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ஜியோஹாட்ஸ்டார் தளம் 29% அதிக பார்வைகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டு மிக அதிகமான…
சென்னை: பாமகவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து தனக்கு ஆதரவான கருத்துக்களை கூறிய திருமாவளவனுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: “திருமாவளவன் மீது எப்போதும் நான் பாசமாக இருப்பேன். இன்றைக்கும் என்றைக்கும் அவர் மீது எனக்கு பாசம் உண்டு. அவரும் என் மீது பாசமாக இருந்தார், இருப்பார். எனது ஒரே வருத்தம் என்னவென்றால், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திருமாவளவன் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி பாசம் உண்டு. அதிகமான அம்பேத்கர் சிலைகளை திறந்தது நான்தான் என்று திருமாவளவன் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. தெரு வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று ஆதரவின்றி கிடந்த ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவருடைய உடலை நான் தோளில் சுமந்து சென்றேன். அதற்காக திருமாவளவன் எனக்கு மேலூரில் நடந்த கூட்டத்தில் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்ற பட்டத்தை கொடுத்தார். திருமாவளவனுக்கு…
மதுரை: “மதுரையை மையமாக வைத்து முக்குலத்தோர் வாக்குகளைப் பெறவும், அந்தச் சமுதாயத்தினரை வளைத்துப்போடும் நோக்கத்திலும் பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது,” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம், உலகத் தமிழ்ச் சங்கம் முன்பு இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர் அமீர், மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மனித சங்கிலி பிரகடனங்களை வெளியிட்டு வாசித்தார். பின்னர் அவர் பேசியது: “பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களில் கடவுள் ராமர் பெயரில் கலவரங்களை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம்…
மதுரை: ‘புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றம் போய் உத்தரவு வாங்கி வருமாறு கூறினால் காவல் நிலையங்கள் எதற்கு?’ என்று உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு மதுரை மாவட்டம் அய்யன்கோட்டை, நகரியில் குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களிலிருந்து பொருட்களை வாகனங்களில் ஏற்றி, இறக்க 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், எங்கள் குடோனுக்கு வந்த தனிநபர்கள் சிலர் குடோனில் உள்ள பொருட்களை நாங்கள் தான் வாகனங்களில் ஏற்றி, இறக்குவோம் எனக் கூறி தகராறு செய்து வருகின்றனர். இதனால் முறையாக தொழில் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. கடந்த பத்து நாட்களாக லாரிகளில் உள்ள பொருட்களை இறக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.…
தேவகோட்டை: “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்பதற்காக அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். மாநாட்டுக்காக பலர் விரதம் இருக்கின்றனர். ஏதோவொரு வகையில் சேகர்பாபு விரதம் இருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்,” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார். மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்களை கொடுக்க இன்று (ஜூன் 19) சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்துக்கள், இந்து இயக்கங்கள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறோம். இதை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆறு படை வீடுகளை ஒரே இடத்தில் பக்தர்கள் பூஜிக்க ஏற்பாடு செய்தோம். அதற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுத்தனர். நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். மாநாட்டுக்கு…
உங்கள் நகங்கள் தொடர்ந்து பிரிந்தால், உரிக்கப்படுவது அல்லது உடைந்தால், நீங்கள் தனியாக இல்லை. உடையக்கூடிய நகங்கள் ஒரு பொதுவான பிரச்சினை மற்றும் பெரும்பாலும் தினசரி நடைமுறைகள், தண்ணீரை அடிக்கடி வெளிப்படுத்துவது, கடுமையான இரசாயனங்கள், மோசமான ஊட்டச்சத்து மற்றும் பருவகால மாற்றங்கள் ஆகியவற்றால் விளைகின்றன. இது வெறுப்பாக இருக்கலாம், ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், விலையுயர்ந்த சிகிச்சைகள் அல்லது வரவேற்புரை நியமனங்கள் இல்லாமல் வலுவான, ஆரோக்கியமான நகங்கள் அடையக்கூடியவை.பெரும்பாலானவர்களுக்கு, நகங்களை மீண்டும் உற்சாகப்படுத்துவது எளிது; உங்கள் ஊட்டச்சத்து பழக்கம், ஆணி பராமரிப்பு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை தொடர்ந்து மாற்றுவதன் மூலம், உங்கள் விரலின் அடிப்பகுதியில் இருந்து உங்கள் ஆணி படுக்கையின் நுனி வரை உங்கள் நகங்களை வளர்ப்பது, ஆதரிக்கலாம், வளர்ப்பீர்கள். உங்கள் நகங்களின் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்க உதவும் எட்டு உதவிக்குறிப்புகள் இங்கே. இதற்கு நேரம் ஆகலாம், ஆனால் உங்கள் நகங்களை மீட்டெடுப்பதற்கான வழியில் நீங்கள்…
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள், மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று பல்வேறு விதிகளை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையில், நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் நிகழ்ச்சி நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், அதன்மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடுகள் தரத் தவறினால், புதிய சட்டங்களின்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போன்ற கெடுபிடிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. கடந்த (ஜூன் 4) அன்று ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட பெங்களூருவில் உள்ள சின்னசாமி…
சென்னை: அரசுப் பள்ளிகளில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையின் விவரம்: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக சிறப்பு பி.எட்., பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கென பிரத்யேக விதிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிஇஆர்டி) சில விதிகளை வகுத்துள்ளது. அதேபோல் இந்திய புனர்வாழ்வு குழுமமும் (ஆர்சிஐ) சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்பு…
மாஸ்கோ: ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால், அதன் பின்னர் ஓர் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி இந்த அறிக்கையை தவறானது என்று மறுத்தார். ஆனாலும், புஷேர் தளம் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று இஸ்ரேல் தரப்பு கூறியது. இந்தப் பின்னணியில்தான், ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. புஷேர் ஈரானில் இயங்கும் ஒரே அணுமின் நிலையம் ஆகும், இது ரஷ்யாவால் கட்டப்பட்டது. இன்று அதிகாலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திறன்களை வலுக்கட்டாயமாக குறைக்க முயற்சித்தாலும், புஷேர் தளத்தில் அதிக அணுசக்தி வசதிகளை உருவாக்கும்…