டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. ஈரானின் அராக் நகரில், அணு உலையில் பயன்படுத்தப்படும் கடின நீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அங்கு தாக்குதல் நடத்தப்போவதால், அருகில் வசிக்கும் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அராக் நகரின் கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று காலை குண்டுகளை வீசின. இந்த ஆலையை ஈரான் ஏற்கெனவே காலி செய்திருந்தது. இதனால் இங்கு அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு அபாயமும் ஏற்படவில்லை. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “அணு ஆயுத தயாரிப்புக்கு, அணு உலைகளை பயன்படுத்துவதை தடுப்பதற்காக இங்கு தாக்குதல் நடத்தினோம்.…
Author: admin
மதுரை: புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகள் கோயில்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்க் கடவுளான முருகனை தமிழர்கள் அதிகம் வழிபடுகின்றனர். எனது குலதெய்வம் முருகன்தான். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்கூட முருகனை வழிபட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்றதும் நான் சென்ற முதல் இடம் முருகன் கோயில்தான். அந்தக் கோயிலை கட்டியவர் இஸ்லாமியர். வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும், நாம் அனைவரும் பண்பாட்டுரீதியில் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறோம். புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள், சித்தர்களின் சமாதிகள் உள்ளன. புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்துக்கள், இஸ்லாமியர்கள் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சில மதவாத அமைப்புகள் இதில் தலையிட்டு, இரு சமூகத்தினருக்கிடையே பகையை வளர்க்க முயற்சிக்கின்றனர். அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இங்கு வந்தேன். மதவாத சக்திகள் இப்பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது. தமிழகத்தில் இதை வைத்து, மதத்தின்…
சமூக ஊடகங்கள் இப்போதெல்லாம் குறிப்பிடத்தக்க சக்திவாய்ந்த நிலையை வகிக்கின்றன. தனிநபர்கள் சருமத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் மற்றும் உணர்கிறார்கள், அதை அவர்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்கள் பாதிக்கின்றன. ஸ்கின்கேர் இப்போது அன்றாட சுய கவனிப்பைப் பற்றி அதிகம் பேசப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட கூறுகளில் ஒன்றாகும், இது மில்லியன் கணக்கானவர்களுடன் தங்கள் தோலை கவலையுடனும் செயல்திறனுடனும் நடத்துவதற்கான சிறந்த வழக்கத்தைத் தேடுகிறது. நன்கு திட்டமிடப்பட்ட தோல் பராமரிப்பு வழக்கம் ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பின் மூலம் ஆரோக்கியமான, கதிரியக்க சருமத்தை வளர்க்கும்.டிக்டோக் வைரலிட்டி மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களின் வயதில், தோல் பராமரிப்பு ஹேக்குகள் ஒரு சுருள் தொலைவில் உள்ளன. செல்வாக்கு செலுத்துபவர்கள் குறைபாடற்ற தோல் முடிவுகளுடன் நடைமுறைகளை இடுகிறார்கள், மேலும் தயாரிப்பு ஹேக்குகள் வழக்கமாக #GlassSkin அல்லது #MiracleCream போன்ற ஹேஷ்டேக்குகளுடன் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலான பார்வையாளர்கள் உணராதது என்னவென்றால், இந்த உதவிக்குறிப்புகள் பெரும்பாலும் மக்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை, அறிவியல் அல்லது…
மதுரை: மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். அந்த மனமகிழ் மன்றம் அமையவுள்ள இடம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பகுதியாகும். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகும். பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால்தான் மதுக் கடைகள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு தூரக்கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றப்படவில்லை. எனவே, விஸ்வநத்தம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், அந்த இடத்தில் எதிர்காலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு…
உங்கள் மருத்துவர் அப்படிச் சொன்னதால், அல்லது உங்கள் வழக்கம் இதுதான் போல் இருப்பதால், காலையில் உங்கள் இரத்த அழுத்த மாத்திரையை நீங்கள் பாப் செய்தால், நீங்கள் தனியாக இல்லை. ஆனால் உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் எடுப்பதைப் போலவே முக்கியமானதாக இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?ஆமாம், நேரம் உங்கள் இரத்த அழுத்த மாத்திரையை சிறப்பாகச் செயல்படுத்தும் ரகசிய மூலப்பொருளாக இருக்கலாம், மேலும் உங்கள் உயிரைக் காப்பாற்றலாம். சமீபத்திய ஆய்வுகள் பழைய பள்ளி ஆலோசனையை அசைத்து, மாலை அளவுகள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் ஆரம்பகால மரணத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கக்கூடும் என்பதைக் காண்பிக்கும். எனவே, உயர் இரத்த அழுத்தத்திற்கான காலை மற்றும் மாலை மருந்துகளுக்குப் பின்னால் உண்மையான ஒப்பந்தம் என்ன?பாரம்பரிய டேக்: காலை சிறந்தது… அல்லது இல்லையா?உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரும்பாலான மக்கள் காலையில் தங்கள் மருந்தை முதலில் எடுத்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறார்கள்.…
வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும்…
கும்பகோணம்: தமிழக முதல்வர் காணொலியில் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். இந்தநிலையில், சூரியனார்கோவிலில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலிருந்த பொருட்கள் மற்றும் கோப்புகளை புதிய கட்டிடத்துக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, புதிய கட்டிடத்தின் ஒரு அறையில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த மேற்கூரை விரைவில் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஊராட்சித்…
சென்னை: ‘கீழடி அகழாய்வு விவகாரத்தில், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணித்து திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் . கருணாநிதி எச்சரிக்கை: கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2016-ம் ஆண்டு, ‘ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்துக்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்’ என்று சமூக வலைதளம் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் எச்சரித்தது போலேவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய…
திட்டமிட்ட ஏவுதலை நாசா ஒத்திவைத்துள்ளது ஆக்சியம் மிஷன் 4 to சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்). இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட இந்த பணி ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. இது இப்போது அறிவிக்கப்படாத பிற்காலத்தில் நடைபெறும். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாசா ஐ.எஸ்.எஸ்ஸின் ஸ்வெஸ்டா சேவை தொகுதியின் AFT (பின்புறம்) பிரிவில் செய்யப்பட்ட சமீபத்திய பழுதுபார்க்கும் பணிகளை மதிப்பிடுவதற்கு அதிக நேரம் தேவை என்று கூறினார். விண்வெளி நிலையத்தில் உள்ள பல அமைப்புகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால், பொறியாளர்கள் ஒரு புதிய விண்வெளி வீரர்களை ஆதரிக்க இது முழுமையாக தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. “தரவை மறுஆய்வு செய்ய தேவையான நேரத்தை நாசா எடுத்து வருகிறது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. “கூடுதல் குழுவினரைப் பெற நிலையம் தயாராக இருப்பதை உறுதி செய்வதே குறிக்கோள்.” சர்வதேச குழுவினர் தற்போது…