பெங்களூரு: நாட்டின் ஐடி தலைநகராக பெங்களூரு விளங்கி வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சிலர், ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில், ஊழியர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசுமுடிவெடுத்துள்ளது. இதற்காக கர்நாடக தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை பார்த்தாலும் ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும். மூன்று மாதங்களில் அதிகபட்சமாக 50 மணி நேரம் மட்டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தொழிலாளர் சங்கங்களும் ஐடி ஊழியர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை கர்நாடக ஐடி…
Author: admin
அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் போர்டோ கிளப் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது இன்டர் மியாமி அணி. இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, ஃப்ரீ கிக் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி அபார கோல் பதிவு செய்தார். அமெரிக்காவில் உள்ள அட்லான்டா நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிளப் அணியான ‘போர்ட்டோ’ மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கிளப் அணியான ‘இன்டர் மியாமி’ அணிகள் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இரு அணிகளும் ‘குரூப் -ஏ’வில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் தொடரின் முதல் போட்டியை டிரா செய்தன. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருந்தது. ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து முன்னிலை பெற்றது போர்ட்டோ. முதல் பத்தி முழுவதும் 1-0 என்ற…
மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் புதின், ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகாவ் நேற்று மாஸ்கோவில் கூறுகையில், “ஈரான் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள தங்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க அதிபர் புதினும் அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர். இந்த விஷயத்தில் இரு தலைவர்களும் ஒரே விதமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கின்றனர்” என்றார். இஸ்ரேல்-ஈரான் போரை உடனடியாக நிறுத்தவும், ஈரானின் அணுசக்தி பிரச்சினையை தீர்க்க அரசியல் மற்றும் ராஜதந்திர…
சென்னை: சாலையில் நடந்து சென்ற சிறுமியை, வளர்ப்பு நாய் கடித்து குதறியது. சென்னை, திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் தர்மன் (45). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மலேரியா தடுப்பு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் பாரதி தனது வீட்டருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில், லட்சுமி என்பவர் அவரது வளர்ப்பு நாயை அந்த வழியாக அழைத்து சென்றார். அப்போது, திடீரென அந்த நாய் சிறுமியின் மீது பாய்ந்து, தொடை மற்றும் இடுப்பில் கடித்து குதறியது. இதில், பலத்த காயமடைந்த சிறுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, பாரதியின் தந்தை தர்மன், நாயின் உரிமையாளர் லட்சுமியிடம் முறையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், லட்சுமி அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆந்திரமடைந்த தர்மன், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.…
இஸ்ரேலுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈரானின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனமான நோபிடெக்ஸில் இருந்து 90 மில்லியன் டாலர்களை திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.780 கோடியாகும். இதுகுறித்து பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்: நோபிடெக்ஸ் கிரிப்டோகரன்சி திருட்டுக்கு பொறுப்பேற்றுள்ள ஹேக்கர்கள் குழு, “நோபிடெக்ஸில் எஞ்சியிருக்கும் சொத்துகள் இப்போது முழுமையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன” என்று அதன் டெலிகிராம் கணக்கில் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் வேகமாக நடைபெற்று வரும் அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய தடைகளை தகர்க்கவும், போராளிகளுக்கு பணத்தை மாற்றவும் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் வாயிலாக நோபிடெக்ஸ் உதவியதாக அந்த குழு குற்றம்சாட்டியுள்ளது என்று பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நோபிடெக்ஸ் நிறுவனம் ஹேக்கர்களின் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அதன் செயலி மற்றும் வலைதளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நோபிடெக்ஸ் நிறுவனத்தில், பிட்காயின், எத்திரியம், டாஜிகாயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் ஈரான் கிரிப்டோகரன்சி சந்தையில் இந்த திருட்டு…
மற்றவர்களைப் பாதிப்பது என்பது கையாளுதல் அல்லது தந்திரங்களை விளையாடுவது பற்றியது அல்ல-அதற்கு பதிலாக, இது மனித நடத்தையைப் புரிந்துகொள்வது மற்றும் உளவியல் அடிப்படையிலான ஹேக்குகளைப் பயன்படுத்துவது பற்றியது, நீங்கள் விரும்புவதைப் பெற மக்களை இணைக்கவும் ஊக்குவிக்கவும். நீங்கள் ஒரு குழுவை வழிநடத்துகிறீர்களோ, உறவுகளை உருவாக்குகிறீர்களோ, அல்லது உங்கள் கருத்துக்களைப் பெற முயற்சிக்கிறீர்களோ, மற்றவர்களை மிகவும் புஷ் இல்லாமல் எவ்வாறு பாதிக்க வேண்டும் என்பதை அறிவது உங்களை மகத்தான வெற்றிக்கு இட்டுச் செல்லும். இது பலருக்குத் தெரியாத ஒரு கலை, நீங்கள் அதைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்வதற்கான சில புத்திசாலித்தனமான உளவியல் அடிப்படையிலான வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி. பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் குன்வர் பாஸித் அலி கூறுகையில் “வரவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இதை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறுவது முக்கியமாகிறது. ஏனெனில், இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பன்முகத்தன்மை மறைக்கப்பட்டுள்ளது. விரிவான இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, பல்வேறு முஸ்லிம் சாதிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்தும். இது, அவர்களுக்கு பயனுள்ள…
சென்னை: சமூகநீதிக்கான போர்க் களத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். பாமக உட்கட்சி பிரச்சினை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸை கலங்க விடக்கூடாது, அவர் பேச்சைக் கேட்டு பாமக தலைவர் அன்புமணி நடந்து கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஊடக நேர்காணலில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “விசிக தலைவர் திருமாவளவன் மீது எனக்கு தனிப்பட்ட பாசம் உண்டு” என்பன உள்ளிட்ட கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். இந்த நேர்காணலை சுட்டிக்காட்டி விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மனம் நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளுக்கு நன்றி. தமிழகத்தில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென சனாதன சக்திகள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக்கொண்டுள்ளன. சமூக நீதியைக் காப்பதற்கான தேவை 1989-ஐ…
பல இந்துக்களைப் பொறுத்தவரை, ஜெகந்நாத் பிரபு முழுமையாய் இருப்பதற்கான சுருக்கமாகும். தனது பெரிய கண்களால் அவர் முழு பிரபஞ்சத்தையும் பார்க்கிறார், எல்லாவற்றையும் அனைவரையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார். ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால், இந்திய கோயில்களில் காணப்படும் கடவுள்களின் மற்ற சிலைகளுடன் ஒப்பிடும்போது சிலை முழுமையடையாது. ஜகந்நாத் பூரியில், தெய்வங்களுக்கு பெரிய கண்கள் கொண்ட பெரிய, வட்ட முகங்கள் மட்டுமே உள்ளன, ஆனால் வரையறுக்கப்பட்ட உடல்கள் இல்லை. ஏன்?ஜகந்நாத், பாலாபத்ரா மற்றும் தேவி சுபத்ராவின் சிலையை செதுக்குமாறு தெய்வீக சிற்பி விஸ்வகர்மாவிடம் இந்திராத்யும்னா மன்னர் கேட்டார் என்று ஒரு கதை கூறுகிறது. விஸ்வகர்மா ஒப்புக்கொண்டார், ஆனால் சிலைகள் முடியும் வரை, அவர்களைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார்.துரதிர்ஷ்டவசமாக, ராணி அமைதியற்றவராக வளர்ந்து விஸ்வகர்மா சிலைகளை செதுக்கிய கதவைத் திறந்தார். அவர்களுக்கு ஆச்சரியமாக, அவர் மறைந்துவிட்டதைக் கண்டார்கள், ஒரு முழுமையற்ற சிலையை விட்டுவிட்டு, ஜெகந்நாத் பிரபுவின் முகத்துடன் முழுமையாக முடிந்தது.
புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி சேதம் அடைந்துள்ளதால், அதில் இருந்து விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்புவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கவுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் – இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். விமான விபத்துக்கான காரணத்தை அறிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதில் ‘காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் (சிவிஆர்) மற்றும் பிளைட் டேட்டா ரிக்கார்டர் (எப்டிஆர்) என்ற இரு சாதனங்கள்…