‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி தெலுங்கு படம். தேசிய அளவில் பல விருதுகளை குவித்த சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக தனுஷ் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘குபேரா’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் ட்ரெய்லரும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்டிருந்தது. இத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததா ‘குபேரா’? இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு முன்பே அவருக்கு கசிந்து விடுகிறது. அதை பொதுமக்களுக்கு தெரியவிடாமல், தன்னிடம் ஒப்படைத்தால் கிடைக்கப் போகும் பலன்களை கூறி மத்திய அமைச்சரிடம் டீல் பேசுகிறார். இதற்காக பெரும் தொகையை கைமாற்ற திட்டமிடப்படுகிறது. இந்த வேலையை செய்து முடிக்க செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை (நாகர்ஜுனா) நாடுகிறார்…
Author: admin
சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களை ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தது. அப்போது, 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு…
பாதாம் என்பது மிகவும் ஊட்டச்சத்து அடர்த்தியான கொட்டைகளில் ஒன்றாகும், இது சுகாதார நன்மைகளின் சக்தியை வழங்குகிறது. ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்தவை, அவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன மற்றும் கொழுப்பின் அளவை நிர்வகிக்க உதவுகின்றன. சுமார் 28 கிராம் கொண்ட ஒரு சில பாதாம், சுமார் 6 கிராம் புரதம், 3.5 கிராம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ தாராளமான அளவு ஆகியவற்றை வழங்குகிறது, இது தோல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது. அவை மெக்னீசியத்திலும் நிறைந்துள்ளன, அவை தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மேலும் அவற்றில் கால்சியம், இரும்பு மற்றும் பி வைட்டமின்கள் சிறிய அளவில் உள்ளன. ஒரு ஆய்வின்படி, தினசரி பாதாம் உட்கொள்ளல் எண்டோடெலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் பெரியவர்களில் எல்.டி.எல் ஐ குறைக்கிறது மற்றும் இருதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. மீலுக்குப் பிந்தைய இரத்த குளுக்கோஸ், உடல் எடை, மற்றும் சில பெரியவர்களில் ப்ரீடியாபயாட்டிகளை மாற்றியமைக்க…
புதுடெல்லி: ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இணைய பாதுகாப்பு சார்ந்த அத்துமீறலில் மிகப்பெரிய தரவு கசிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கசிவு மில்லியன் கணக்கான இணைய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் இணையதள பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்வது, அவர்களது அடையாளங்களை களவாடுவது, பிஷ்ஷிங் மோசடி போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக தகவல். இது பல ஆண்டுகாலமாக டார்க் வெப்பில் கிடைக்கும் பழைய தரவுகள் இல்லை என்றும், ‘இன்போஸ்டீலர்கள்’ எனப்படும் மால்வேர் மூலம் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு போன்றவை பயனர்களின் சாதனங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஹேக்கர்கள் வசம் சென்றுள்ளது. அதை கொண்டு சம்பந்தப்பட்ட பயனர் கணக்கில் லாக்-இன் செய்வது அல்லது அதை டார்க் வெப்பில் விற்பனை செய்வது…
துபாய்: தனது 17 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார். 40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இதை பகிர்ந்துள்ளார். சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்ற நிலையில் பிரான்ஸில் இருந்து வெளியேறலாம் என கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. “எனது குழந்தைகளுக்கு இடையே நான் எந்தவிதமான வித்யாசத்தையும் பார்ப்பதில்லை. இயற்கையான முறையில் கருத்தரித்தவர்கள், எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்கள் என எல்லோரும் எனக்கு ஒன்றுதான். எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு என நினைக்கிறேன். அவர்கள் யாரையும் சாராமல் சுயமாக, சுதந்திரமாக வளர வேண்டும் என நினைக்கிறேன். ஒரு…
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை தரப்பில் ஆவணங்கள்…
2024 ஆம் ஆண்டில் நடிகர் ராம் கபூரின் குறிப்பிடத்தக்க எடை இழப்பு பயணம் 18 மாதங்களில் இயற்கையாகவே 55 கிலோவுக்கு மேல் கொட்டியது. அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, 51 வயதான ஒரு எளிய மற்றும் பயனுள்ள மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டார்: ஒரு நாளைக்கு இரண்டு உணவு, சிற்றுண்டி இல்லை, மாலை 6:30 மணிக்குப் பிறகு உணவு இல்லை. நடிகர் ராம் கபூர் 2024 இல் 55 கிலோவுக்கு மேல் சிந்தினார். அவரது எடை இழப்பு பயணம் அதிசயத்திற்கு ஒன்றும் இல்லை. எடை இழப்பை அடைய அவர் அறுவை சிகிச்சை செய்ததாக மக்கள் சந்தேகித்தாலும், நடிகர் தனது பயணம் படிப்படியாகவும் முற்றிலும் இயற்கையாகவும் இருப்பதை வெளிப்படுத்தினார். 51 வயதான அவர் 18 மாதங்களில் 55 கிலோவை இழந்தார், அதுவும் 3 எளிய உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலம். ஒரு நாளைக்கு இரண்டு உணவு(படம் மரியாதை: பேஸ்புக்)ராம் கபூரின் எடை இழப்பு உத்தி புத்துணர்ச்சியுடன் எளிமையானது.…
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று (ஜூன் 20) ஹெடிங்லீயில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார். மேலும் 4 முழுநேர பவுலர்கள் அணியில் இருப்பார்கள். ஆகவே 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுதல்தான் வெற்றிக்கு வழி வகை செய்யும். எவ்வளவுதான் ரன்கள் அடித்தாலும் போட்டியை வெற்றி பெற எதிரணியின் 20 விக்கெட்டுகள் அவசியம் என்கிறார் ஷுப்மன் கில். “இதுதான் எங்கள் முக்கிய விவாதப்புள்ளியாக இருந்தது. எப்படி 20 விக்கெட்டுகளைச் சாய்ப்பது என்பதுதான் விவாதமே. பியூர் பேட்டர்கள், ஒரு ஆல்ரவுண்டர், 4 முறையான பவுலர்கள் என்றே அணியின் சேர்க்கை இருக்கும். கேப்டன்சி சுமை எல்லாம் இல்லை. ஏனெனில், உள்ளபடியே கூற வேண்டுமெனில் பேட்டிங்கில் களமிறங்கும் போது நான் கேப்டன் என்ற சுமை அழுத்தம் இல்லாமல் வெறும் பேட்டராகவே சிந்திப்பேன். எதிரணி பவுலர்களை எப்படி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இரண்டு விமானப்படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கிய இந்தியா, மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளின் இரவில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி கடும் சேதத்தை விளைவித்தது. இதன் காரணமாக, வேறு வழியின்றி…
தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 19-ம் தேதி இரவு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அன்றிரவு 10 மணியளவில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக பதிவானது. அதேபோல, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு கடந்த 18-ம் தேதி விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீர் இன்று (20-ம் தேதி) காலை ஒகேனக்கல்லை அடைந்தது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் பிரதான அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதேபோல, ஐவர்பாணி என்று அழைக்கப்படும் ஐந்தருவி பகுதியிலும் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. மேலும், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை…