Author: admin

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது:டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, இந்​தியா என்​பது வளரும் சந்தை மட்​டுமல்ல, உலக நாடு​களுக்​காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறி​னார். கரோனா பெருந்​தொற்​று, ரஷ்​யா-உக்​ரைன் போர் உள்​ளிட்ட சர்​வ​தேச அளவி​லான நிச்​சயமற்ற தன்​மைக்கு நடு​விலும் இந்​திய பொருளா​தா​ரம் வளர்ந்து வரு​வதைத்​தான் அவர் அவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

Read More

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தளம் பயனர்களுக்கு செயலிழந்ததாகக் காட்டியது. இதையடுத்து, எக்ஸ் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வியை பிற சமூக வலைதள பக்கங்களில் பயனர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Read More

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச.10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Read More

சென்னை: போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கவும், விருந்து கொடுக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் மேற்கொள்ள உள்ளன. 2018-க்கு பிறகு முகமது பின் சல்மான் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை.

Read More

டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக் கூடியது.

Read More

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, நேற்று அதி​காலை முதலே மண்​டல​கால வழி​பாடு​கள் தொடங்​கின. புதிய மேல்​சாந்​தி​களாக பொறுப்​பேற்ற பிர​சாத் நம்​பூ​திரி ஐயப்​பன் கோயில் நடையை​யும், மனு நம்​பூ​திரி மாளிகை புரத்​தம்​மன் கோயில் நடையை​யும் திறந்து வைத்​தனர்.

Read More

தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது அல்லவா? அதற்கு இவர்தான் மியூசிக்’ என்று என்னை காட்டுகிறார். உடனே அந்த சிறுவன் எனக்கு கைகொடுத்தான். இது போன்ற சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது என்பதற்காகத்தான் நான் காப்புரிமை கேட்பதில்லை” என்று தேவா கூறினார்.

Read More

இந்​நிலை​யில், 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆட்​சிக்கு வந்​தால், மூன்​றரை லட்​சம் அரசுப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்று திமுக வாக்​குறுதி அளித்​திருந்​தது. இதனால் அதிக காலிப்​பணி​யிடங்​களுக்கு போட்​டித் தேர்வு நடை​பெறும் என்று தமிழக இளைஞர்​கள் எதிர்​பார்த்த நிலை​யில், 2 ஆண்டு கரோனா இடை வெளிக்​குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடை​பெற்ற குரூப்-4 தேர்​வில் வெறும் 10,300 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​படும் என்று திமுக அரசு அறி​வித்து ஏமாற்​றியது. மேலும், 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்​தாமல் போட்​டித் தேர்​வர்​கள் வயிற்​றில் அடித்​தது. இதைத் தொடர்ந்​து, 2024-ம் ஆண்டு நடை​பெற்ற குரூப்-4 தேர்​வில் வெறும் 9,532 காலிப்​ பணி​யிடங்​களை மட்​டுமே நிரப்பி வஞ்​சித்​தது. இந்​நிலை​யில் ஆட்சி முடி​யும் கடைசி ஆண்​டில், இது​வரை இல்​லாத அளவுக்கு மிகமிகக் குறைந்த அளவாக 3,945 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​படும் என்று அறி​வித்து திமுக அரசு அதிர்ச்​சி​யளித்​தது.

Read More

புதுடெல்லி: இந்​தி​யா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை முடிவடை​யும் தரு​வா​யில் இருப்​ப​தாக மத்​திய அரசின் உயர​தி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​ய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல் கட்ட பேச்​சு​வார்த்தை இறு​திக் கட்​டத்தை நெருங்​கி​யுள்​ளது. இதன் மூலம், அமெரிக்​கா​வின் சந்தை அணுகல் சிக்​கல்​களுக்கு தீர்வு காண்​ப​தோடு, இந்​திய பொருட்​களுக்கு ட்ரம்ப் நிர்​வாகம் விதித்த 50 சதவீத வரி தொடர்​பான பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​படும்.

Read More

சீக்கிரம் உறங்கச் சென்றாலும் சோர்வாக எழுந்திருப்பது பலர் உணர்ந்ததை விட மிகவும் பொதுவானது. காலைக் களைப்பு என்பது உறங்கும் நேரத்துடன் அல்ல, மாறாக உங்கள் இரவு நேர வழக்கத்தை வடிவமைக்கும் பழக்கவழக்கங்களோடு தொடர்புடையது. ஒழுங்கற்ற தூக்க அட்டவணைகள், அதிகப்படியான திரை நேரம் அல்லது பிரகாசமான ஒளியின் வெளிப்பாடு போன்ற சிறிய நடத்தைகள் உடலின் இயற்கையான தாளத்தை சீர்குலைத்து தூக்கத்தின் ஆழத்தை குறைக்கும் என்று டாக்டர் பால் விளக்குகிறார். இந்த நுட்பமான குறுக்கீடுகள் மூளை ஓய்வெடுக்கும் நிலைகளுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன. அவரது ஆலோசனையானது வலுவான தூக்கக் குறிப்புகளை மீண்டும் உருவாக்குதல், மன உந்துதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆழ்ந்த, புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் மையமாக உள்ளது. இந்தப் பழக்கங்களைச் செம்மைப்படுத்துவதன் மூலம், உங்கள் உடல் ஆரோக்கியமான தாளத்திற்குத் திரும்பலாம், இது காலையில் எளிதாக விழிப்பு மற்றும் அதிக ஆற்றலை ஆதரிக்கிறது.ஒரு சீரான உறக்கம் எவ்வாறு மறுசீரமைப்பு தூக்கத்தை அதிகரிக்கிறதுடாக்டர் பால்…

Read More