திருமலை: திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் எஸ்.வி.அன்னதானம், எஸ்.வி.பிராணதானம், எஸ்.வி.வித்யாதானம் உள்ளிட்ட அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பிராணதான அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் நேற்று ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். இதற்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பெற்றுக்கொண்டார். நன்கொடையாளருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Author: admin
நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், 600 கிலோ மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களைப் பறித்து சென்றனர். நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரை அருகே நேற்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது செந்தில் என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்த இலங்கை கடல் கொள்ளையர்கள், படகிலிருந்த 5 மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். பின்னர், படகில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள், அங்கிருந்த மீனவர்களை இரும்பு ராடால் தாக்கியதுடன், படகில் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படகு உரிமையாளர் செந்திலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல,…
கிளாரி மெக்கார்டெல் கடினமான ஆடைகள், வலிமிகுந்த இடுப்புப் பட்டைகள் அல்லது விதிகள் பற்றி அல்ல. அவரது காலத்தில் பேஷன் வேர்ல்ட் பாரிசிய கவர்ச்சியைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தபோதிலும், கிளாரி விஷயங்களை உண்மையானதாக வைத்திருந்தார். அவர் உண்மையான பெண்களுக்காக ஆடைகளை வடிவமைத்தார் – நகர்ந்த, வேலை, சமைத்த, குழந்தைகளைத் துரத்தியது, சுவாசிக்க வேண்டிய பெண்கள். ஹாலிவுட் நட்சத்திரங்களைப் போல பெண்களை அலங்கரிக்க அவள் முயற்சிக்கவில்லை. அவள் தங்களைப் போலவே அவர்களை அலங்கரித்தாள். அதுவே அவளை சின்னமாக்கியது.ஆறுதல் அவளுடைய சூப்பர் பவர்1905 ஆம் ஆண்டில் மேரிலாந்தில் பிறந்த கிளாரி, நியூயார்க்கில் ஃபேஷன் படித்தார், பாரிஸில் கூட இருந்தார். ஆனால் பிரஞ்சு போக்குகளை நகலெடுப்பதற்கு பதிலாக, அவர் உண்மையான கேள்வியைக் கேட்டார்: பெண்கள் உண்மையில் என்ன அணிய விரும்புகிறார்கள்? அவளுடைய பதில்? நன்றாக இருக்கும் உடைகள் மற்றும் உங்கள் வாழ்க்கையை வாழ அனுமதிக்கின்றன.அவர் பருத்தி, ஜெர்சி மற்றும் டெனிம் போன்ற துணிகளைப் பயன்படுத்தினார் – இது…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 1977-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.5.69 லட்சத்தை கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக 1978-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 2009-ம் ஆண்டு நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், தண்டனை பெற்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு டெல்லியில் உள்ள ரோஹிணி பகுதியில் வைத்து ஆனந்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடிக் கம்பங்களை ஏப். 28-க்குள் அகற்றுமாறு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட்டும், சாலைகளில் வைக்க வேண்டாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். பல இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு…
சென்னை: விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையதளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம், உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் அறிந்து கொள்ள இயலும். இத்தகவல் மூலம் உரிய விலைக்கு கால்நடைகளை விற்று விவசாயிகளுக்கு பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இப்பணிகளை தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும். இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிசாசு இறுதியாக தனது பிராடாவைத் தொங்கவிடுகிறாள்!ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக ஒரு வியக்கத்தக்க ஓட்டத்திற்குப் பிறகு, அண்ணா வின்டோர் தனது நாளிலிருந்து – அமெரிக்க வோக்கின் தலைமை ஆசிரியராக – நாள் கடமைகளிலிருந்து பின்வாங்குகிறார். ஜூன் 26 அன்று நடந்த ஒரு உள் கூட்டத்தில், 75 – ஆண்டு – பாணி மொகுல் புதிதாக உருவாக்கப்பட்ட தலையங்க உள்ளடக்கப் பாத்திரத்தின் தலைவரிடம் செயல்பாட்டு ஆட்சியை ஒப்படைப்பதாக அறிவித்தார். அவர் தனது முந்தைய பாத்திரத்திலிருந்து விலகிக் கொண்டாலும், அவர் நிறுவனத்துடனான தனது உறவுகளைத் துண்டிக்கவில்லை. வோக் யுஎஸ்ஸின் ஆசிரியராக தனது ஆவணங்களை (மற்றும் பிராடா) வைத்த பிறகு, அவர் கான்டே நாஸ்டின் உலகளாவிய தலைமை உள்ளடக்க அதிகாரியாகவும், வோக்கின் உலகளாவிய தலையங்க இயக்குநராகவும் தனது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வார்.இந்த நடவடிக்கை ஒரு வியத்தகு முடிவு, நில அதிர்வு மாற்றம் மற்றும் ஒரு புதிய, உற்சாகமான தொடக்கத்தை குறிக்கிறது. ஃபேஷன் மற்றும் மீடியா வட்டங்களில்…
தருமபுரி / மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 16,000 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆற்றிலும், அருவிகளிலும் குளிக்க 3 நாட்களுக்கு…
சென்னை: தமிழகத்தில் 1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் 1,416 நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூகநலத் துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பொறுப்பேற்க நேரிடும்: இந்நிலையில் சமூகநல ஆணையரகத்திடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக காலை உணவுத் திட்டம் தொடர்பாக நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய…
புளோரிடா: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர். நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அனுப்பி, 2 வார காலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் இஸ்ரோ சார்பில் பயணிப்பதற்கு, ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை விமானியான ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்),…