“தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்தப் புரிதலே தவறு. ஏனெனில், இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை. இப்படித்தான் இது இஸ்லாமியத்தில் அறையப்படுகிறது. ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்பது இது. ஒரு நபர் இறக்கப் போகிறார் என்ற ஊகதுக்கு எதிரானது இது.” என்று அந்த வீடியோவில் உமர் பேசியுள்ளார்.காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கான திட்டமிடலை அக். 2 -ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி இறுதிவரை செய்துள்ளார் உமர். இந்த நிலையில் தற்கொலை தாக்குதல் குறித்து அவர் பேசிய வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மூலம் மற்ற இளைஞர்களை…
Author: admin
சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.
கல்வி கருவறையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கல்லறைவரை அது நீள்கிறது. கருவிலிருக்கும்போது தாயின் இதயத்துடிப்பே இசைத்தட்டாகிறது. இருளையே கரு இருப்பிடமாக்கிக்கொள்கிறது. பிறக்கும்போது உறுத்தும் வெளிச்சத்திற்குப் பழகுவதில் வாழ்க்கை தொடங்குகிறது. உண்பதற்கும் தவழ்வதற்கும் கற்றுக்கொள்வதால் தாக்குப்பிடிக்கும் கலை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. வாழ்வு குறித்த பாடத்தை நாம் பிறப்பிலிருந்தே பெறத் தொடங்குகிறோம். தவழ்ந்த பின்பு மெதுவாக எழுந்து இரண்டு கால்களில் நிற்பது நமக்குள் நடக்கும் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து கற்றல்: கற்றதாலும் கற்றதை ஆவணப்படுத்தியதாலும் மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டான். அவனுடைய இடைவிடாத கல்வியே முன்னேற்றங் களை எல்லாம் முடுக்கிவிட்டது. தன்னை விட வலிமையானவற்றை எல்லாம் வெற்றிகொண்டு வீறுநடைபோடக் கல்வியே அவனுக்குக் கைகொடுத்தது.
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. 1997 பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியில் அபாயகரமான குழிப்பிட்சில் இந்திய அணி 120 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எடுக்க முடியாமல் 81 ரன்களுக்குச் சுருண்டதன் பிறகு 124 ரன்கள் எடுக்க முடியாமல் கொல்கத்தாவில் இப்போது 93 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணியும் இத்தனைக் குறைந்த இலக்கை வெற்றிகரமாக தடுத்திருப்பது இது 2-வது முறையாகும். முதல் முறை 1994-ம் ஆண்டு சிட்னியில் 117 ரன்களை ஆஸ்திரேலியாவால் எடுக்க முடியாமல் செய்து 111 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சுருட்டினர்.
நியூயார்க்: ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் அதிக அளவில் நாடு திரும்பும் கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர். சுமார் 23 லட்சம் பேர் இவ்வாறு நாடு திரும்பி உள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய 1,500 குடும்பங்கள் உட்பட 49,000 குடும்பங்களில் நாடு தழுவிய அளவில் ஐநா மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த ஜனவரியில் மகர பூஜையின்போது வனப்பாதை திறக்கப்பட்டது. சுமார் 10 மாதமாக இங்கு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதனால் புதர்மண்டி, பாதைகள் சிதிலமடைந்து கிடக்கிறது. ஆகவே சுத்தப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது” என்றனர்.இந்நிலையில், தரிசனத்துக்கும், பெருவழிப் பாதையில் செல்வதற்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நிர்ணயித்த அளவு முடிந்ததும் பின்பு யாரும் அந்த நாளில் முன்பதிவு செய்ய முடியாது. ஆகவே தங்கள் பயணத் திட்டத்துக்கு ஏற்ப நாட்களை விரைவாக தேர்வு செய்து கொள்ளும்படி திருவிதாங்கூர் தேவசம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதை எதிர்த்து கணவன், மனைவி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனைவி பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், அவர் இந்து முறைப்படிதான் வாழ்ந்து வந்துள்ளதாகவும், இருவரும் இந்து முறைப்படி இந்து கோயிலில் திருமணம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இதை அம்பத்தூர் நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகும் குடும்ப நல நீதிமன்றம் இதை ஏற்க மறுத்தது தவறானது. இந்து முறைப்படி அனைத்து சடங்குகளும் நடந்துதான் இருவருக்கும் திருமணம் நடந்தள்ளது. மனைவியும் இந்துவாக வாழ்க்கை நடத்தியுள்ளார். எனவே, மனைவி முஸ்லிம் என்று காரணம் கூறி விவாகரத்து மனுவை ஏற்க மறுத்தது தவறானது என தீர்ப்பளித்துள்ளார். எனவே கணவன்,மனைவியின் விவாகரத்து மனுவை மீண்டும் அம்பத்தூர் நல குடும்ப நீதிமன்றம் விசாரித்து, 4 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி: சீனாவுக்கு தாமிரம் ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தாமிர பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. அதன்படி, இம்மாநிலம் சீனாவுக்கு 12,000 மெட்ரிக் டன் அளவு கொண்ட தாமிரம் செறிவூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கிய ஏற்றுமதி ராய்ப்பூரில் உள்ள மல்டி-மாடல் லாஜிஸ்டிக் பார்க்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானிகள் ஆறு வாரங்களில் தளர்வு நெறிமுறையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது, உரத்த, அழுத்தமான போர்க்கால நிலைமைகளுக்கு மத்தியிலும் 96% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளனர்/ படம்: Youtube “அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் தூங்கவில்லை” எனில், உங்களுக்கு எவ்வளவு குறைவான தூக்கம் கிடைக்கும் என்பதைப் பற்றிய மனக் கணிதத்தைச் செய்து, உச்சவரம்பில் நீங்கள் எப்போதாவது உற்றுப் பார்த்திருந்தால், நீங்கள் பார்வையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இராணுவ தூக்க முறை க்காக கட்டப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இது இரண்டு நிமிடங்களுக்குள் உங்களை நாக் அவுட் செய்யக்கூடிய ஹேக் என விற்கப்படுகிறது. உண்மையான கதை சற்று குறைவான மாயாஜாலமானது, இன்னும் கொஞ்சம் முறையானது – மற்றும் தூக்க நிபுணர்களின் கூற்றுப்படி, இரகசிய இராணுவ வல்லரசைக் காட்டிலும் கட்டமைக்கப்பட்ட தளர்வு பயிற்சிக்கு நெருக்கமாக உள்ளது.’இராணுவ தூக்க முறை’ உண்மையில் எங்கிருந்து வருகிறது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இப்போது பரவி வரும் நுட்பம் ஒன்றும் புதிதல்ல. அதன் தோற்றம் பொதுவாக…
