நைனிடால் (உத்தராகண்ட்): குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்துக்காக, மனிதகுலத்துக்காக, தேசத்துக்காக ஓர் இலக்கைக் நிர்ணயித்து கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவனர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜெகதீப் தன்கர், “நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு லேண்ட்லைன் தொலைபேசி வசதி இருந்தால் அதுவே பெரிய கவுரவம் என்ற நிலையில் இருந்து, தற்போது உலகில் அதிக ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ள நாடு என்ற நிலைக்கு நாம் நகர்ந்திருக்கிறோம். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான குறிக்கோளை அடையாளம் கண்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும். குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள், மாறாக மற்றவருக்கு போட்டியாக இருக்காதீர்கள். மற்றவர் செய்ததைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள். நீங்கள் உங்களுக்காக உயர்ந்த நிலையை அடைந்து கொண்டே இருக்க வேண்டும். குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்துக்காக, மனிதகுலத்துக்காக, தேசத்துக்காக ஓர் இலக்கைக்…
Author: admin
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு ‘கஜா’ என்ற இயந்திர யானையை நடிகை த்ரிஷா வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை த்ரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் அன்பளிப்பாக வழங்கினர். இந்த இயந்திர யானைக்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும், ஆசிர்வாதம் செய்வதும் கூடுதல் சிறப்பாகும். கோயிலுக்கு இயந்திர யானையை வழங்கும் விழா அருப்புக்கோட்டையில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. டிஎஸ்பி மதிவாணன் இயந்திர யானையை வழங்கி, அதன்…
Last Updated : 27 Jun, 2025 07:22 PM Published : 27 Jun 2025 07:22 PM Last Updated : 27 Jun 2025 07:22 PM இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’ என்றே அழைக்கப்பட்டது. இந்தியில் மட்டும் ‘மஜதூர்’ என்று தலைப்பை இறுதி செய்தது படக்குழு. இந்த தலைப்புக்கு இணையத்தில் பலரும் மிகவும் சாதாரணமாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். இதனை பலரும் இணையத்தில் தெரிவிக்கவே, உடனடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி தலைப்பை மாற்றிவிட்டது. இந்திப் பதிப்புக்கு ‘கூலி – தி பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இது இணையவாசிகளை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பெயர் மாற்றத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்…
சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது. இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் துளியளவும் பயனளிக்காது. மொத்தமாகவே 10 ஆயிரம் மக்கள் கூட…
இந்த ஒளியியல் மாயை மக்களின் கண்பார்வை சவால் செய்கிறது. இந்த படத்தில் எங்காவது ஒரு விமானம் மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் கூர்மையான பார்வை கொண்டவர்கள் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். இந்த படம் முதல் பார்வையில் நேரடியானதாகத் தோன்றலாம், ஆனால் பிடித்துக் கொள்ளுங்கள்! கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் இது மிகவும் சிக்கலானதாகி வருகிறது.ஆப்டிகல் மாயைகள் தந்திரமான மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுகள். ஆனால் நீங்கள் நினைத்ததை விட இது கடினம். எனவே, நீங்கள் முரண்பாடுகளை விஞ்சி விமானத்தை நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இந்த உருளும் நிலப்பரப்பில் அமைதியாக பொய் சொல்லும் வீடுகள் மற்றும் வளைந்த சாலைகள் மற்றும் வணிக கட்டமைப்புகளின் ஒரு பகுதியின் படம் இது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?சவால் மிகவும் எளிதானது, ஆனால் நீங்கள் நினைத்தபடி நேரடியானதல்ல! படத்தை உன்னிப்பாக ஆராய்ந்து, சாலைகளை பிரித்து, வடிவங்களை புரிந்துகொண்டு, நிழல்களைக் கவனிக்கவும். பின்னணியுடன் பொருந்தும் பொருட்டு விமானம் நன்கு மறைக்கப்பட்டுள்ளது; எனவே,…
புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், 19 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது. இதுவரை 19 சிறப்பு விமானங்களில், 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியா மீட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து வெளியேறி, ஆர்மீனிய தலைநகர் யெரெவனுக்கு வந்து சேர்ந்த 173 இந்தியர்கள் கொண்ட புதிய குழு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று (ஜூன் 26) இரவு டெல்லி வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்…
சென்னை: மோடி ஆட்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே தவிர, 146 கோடி மக்களுக்கான ஆட்சி அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூலம் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், நிர்ப்பந்தத்தின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாஜகவுடன் எந்த கட்சியும் கூட்டணி சேர முன்வரவில்லை. தமிழ் மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிற அமித் ஷாவின் அரசியல், தமிழ்நாட்டில் எப்பொழுதும் எடுபடாது என்பதை கள நிலவரங்கள் உணர்த்தி வருகின்றன. பாஜக அரசில் வளர்ச்சிக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கடந்த 11 ஆண்டுகாலமாக ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவின் காரணமாக…
பட வரவு: கெட்டி படங்கள் கோடை காலம் வெப்பத்தைப் பற்றி இல்லை, இப்போது இது புதிய இடங்களை பயணிப்பது மற்றும் ஆராய்வது, கடலோர சுவையான சுவையை அனுபவிப்பது மற்றும் பல நாட்கள் நீடிக்கும் ஒரு பழுப்பு நிறத்தைப் பெறுவது பற்றியது! ஜூலை கோடையில் பயணிக்க சிறந்த மாதங்களில் ஒன்றாகும், வெப்பநிலை மிதமானது மற்றும் சில இடங்கள் மழையை கூட அனுபவிக்கின்றன. குறைந்த செலவில் இன்னும் அற்புதமான காட்சிகளுக்கு நீங்கள் பயணிக்கக்கூடிய 10 இடங்கள் கீழே உள்ளன.சான் ஜுவான், புவேர்ட்டோ ரிக்கோபட வரவு: கெட்டி படங்கள்கரீபியன் தீவை விட கோடையில் பார்வையிட சிறந்த இடம் எது? நடைபயணம் முதல் ஸ்நோர்கெல்லிங் வரை நீங்கள் இங்கு பலவிதமான செயல்களில் ஈடுபடலாம், மேலும் ஜூலை மாதத்தில் நடைபெறும் சான் ஜுவான் இசை விழா மற்றும் சர்வதேச சல்சா விழாவில் கலந்து கொள்ளலாம். இங்கே ஒரு ரவுண்ட்டிரிப் உங்களுக்கு $ 180- 0 260 செலவாகும், மேலும்…
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மாநிலத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க தலைவருமான சுகந்த மஜும்தார் குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகந்த மஜும்தார், “கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது, கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பாக இல்லை என்பதையே காட்டுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ள போதிலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது.…
‘ட்ரான்’, ‘டாப் கன் மாவெரிக்’ படங்களின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜோசப் கோசின்கி இயக்கத்தில் ப்ராட் பிட் நடிக்கும் ஸ்போர்ட் டிராமா என்றதுமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகி பெரிய திரையில் இதன் பிரம்மாண்டத்தை காணும் ஆவலை ரசிகர்களுக்கு தூண்டியது. ‘F1’-ன் அந்த எதிர்பார்ப்புகள் காட்சி ரீதியாக ரசிகர்களை திருப்திபடுத்தியதா? 90-களில் மிகச் சிறந்த எஃப்-1 ரேஸர்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருந்த சன்னி ஹேயஸின் (ப்ராட் பிட்) கரியர் ஒரு விபத்துக்குப் பிறகு முடங்கிப் போகிறது. தற்போது ஐம்பதைக் கடந்த வயதில் இருக்கும் அவர், சிறிய அளவிலான பந்தயங்களில் கலந்து கொண்டும் டாக்ஸி டிரைவராகவும் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். தனது முன்னாள் சக ரேஸரும் நண்பருமான ரூபனை சந்திக்கும் சன்னியின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. அபெக்ஸ் எனப்படும் ஒரு எஃப்-1 ரேஸிங் டீமை…