Author: admin

சென்னை / நெல்லை: அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதில் ஒன்றில், எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது. அமித் ஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 குறித்து சில கருத்துகளை முன்வைத்திருந்தார். அதில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வங்கிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் கீழ்தான் பாஜக இருப்பதால், அதிமுகவைச் சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அதிமுகவில் தாங்கள் (பாஜக) யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும் அமித் ஷா தெளிவுபடுத்தி இருந்தார். இந்தக் கருத்துகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதற்கு…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2000-ல் அப்போதைய சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த உழவர் சந்தை 25-வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் குளிர் பதன சேமிப்புக் கிடங்கு வசதி இருந்தும் விவசாயிகள் வெளிச்சந்தையில் இடைத்தரகர்களிடம் குறைவான விலைக்கு விளை பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காகவும், வெளிச்சந்தையில் இடைத்தரகர்களுக்கு குறைந்த விலைக்கு பொருட்களை விற்று கமிஷன் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகள் நேரடி வர்த்தகம் செய்வதால் விளை பொருட்களை நியாயமான விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது. இத்திட்டத்தின்படி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையை கடந்த…

Read More

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.50 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் சேர, 3 லட்சத்து 2,374 பேர் இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்தனர். இதில், 2 லட்சத்து 50,298 பேர் பதிவு கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர். அதில், தகுதியின்மை காரணமாக 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 2 லட்சத்து 41,641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 47,372 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள…

Read More

அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிசாமி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுக்கு எதிரான இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி, அதிமுகவின் உள்கட்சி…

Read More

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560-க்கு உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று பவுனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.71,880-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.78,408-க்கு விற்பனையானது. கடந்த 22-ம் தேதி பவுன் ரூ.73,880-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.71,880-ஆகக் குறைந்துள்ளது. அந்த வகையில் 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் விலை குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

“சன்ஷைன் வைட்டமின்” என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி, சூரிய ஒளியை வெளிப்படுத்தும்போது தோலில் தயாரிக்கப்படுகிறது மற்றும் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், அதே நேரத்தில் ஆரோக்கியமான நரம்பு மண்டலம், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், வைட்டமின் டி குறைபாடு என்பது உலகளவில் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஒன்றாகும், இது தேவைப்படும்போது விழிப்புணர்வு மற்றும் கூடுதல் தேவையை எடுத்துக்காட்டுகிறது. இது பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்ட மக்களையும் இருண்ட தோல் கொண்டவர்களையும் பாதிக்கிறது. வைட்டமின் டி குறைபாடு என்றால்வைட்டமின் டி குறைபாடு என்றால் உங்கள் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லை. இது முக்கியமாக உங்கள் எலும்புகளையும் தசைகளையும் பாதிக்கிறது. கிளீவ்லேவ்லேண்ட் கிளினிக் கருத்துப்படி, வைட்டமின் டி குறைபாடு என்பது ஒரு பரவலான உலகளாவிய…

Read More

பிளஸ்-1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

பொதுமக்களுக்கு பாதுகாப்பான, ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் 9 அரசு வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநில அரசு துறைகளில் மென்பொருள் பயன்பாட்டை முறைப்படுத்தி, ஒருங்கிணைந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் (சிங்கிள் சைன்-ஆன்) கடந்த 2023-24 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளமானது பல பயனாளிகள் தங்களது உள்நுழைவு தரவுகள், இணையதளங்களை பயன்படுத்தும்போது இருக்கும் தடைகளை நீக்கி ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் எளிமையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இரு கட்டமாக அரசு துறைகளுக்கு இடையேயான சேவைகளை வழங்குதல், அரசு துறைகள் – பொதுமக்கள் இடையேயான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் தொடர் கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் இதுவரை 9 முக்கிய…

Read More

இரத்தத்தை நன்கொடையாக வழங்குவது தேவைப்படுபவர்களுக்கு உதவ ஒரு பாதுகாப்பான வழியாகும், ஆனால் இது சோர்வு மற்றும் இரத்த சோகை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அபாயங்களைக் குறைக்க, நன்கொடைக்கு முன்னும் பின்னும் சரியான உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உங்கள் உடலை எரிபொருளாக மாற்றுவது முக்கியம். நீரேற்றமாக இருப்பதும், இரும்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் பக்க விளைவுகளின் வாய்ப்பைக் குறைக்க உதவும். இந்த எளிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், நன்கொடையாளர்கள் ஒரு மென்மையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதிப்படுத்த முடியும், மேலும் இரத்த தானம் மூலம் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவ அனுமதிக்கிறது. நன்கு தயாரிக்கப்பட்ட உடல் வெற்றிகரமான நன்கொடை செயல்பாட்டில் அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்தும். சரியான கவனிப்பு சாத்தியமான சிக்கல்களைக் குறைக்க முடியும்.இரத்த தானம் செய்வதற்கு முன்பே சாப்பிடுவதுஹெல்த்லைன் அறிக்கைகளின்படி, இரத்தத்தை நன்கொடையாக வழங்குவதற்கு முன்பு உங்களிடம் இருக்க வேண்டிய பின்வரும் உணவுப் பொருட்கள் இவை: 1) இரும்புஉடல் முழுவதும் ஆக்ஸிஜனைக்…

Read More

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூலை 4 ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ட்ரெய்லரின் கலர் டோன், இது எப்படியான படம் என்பதை கூறிவிடுகிறது. படு சீரியஸாக செல்லும் ட்ரெய்லர் முழுக்கவே அதிரடி, ஆக்‌ஷன், ரத்தம், வன்முறை தெறிக்கிறது. சூர்யா சேதுபதி படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக உண்மையிலேயே நிறைய மெனக்கெட்டிருப்பார் என்பதை…

Read More