புதுடெல்லி: உ.பி.யில் முதல்வர் பயிற்சித் திட்டத்தின் 13 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று குடிமைப்பணி பெற்றுள்ளனர். மேலும் 280 மாணவர்கள், மாநில குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். உ.பி.யில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்வர் அபியுதயா திட்டம் கடந்த 2021 முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சமூக நலத்துறை நடத்தும் இத்திட்டம் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் பயின்ற மாணவர்களில் 13 பேர் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் வென்றுள்ளனர். சமீபத்தில் வெளியான 2024 யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மாநில சமூக நலத்துறை இணை அமைச்சர் அசீம் அருண் கூறுகையில், “உ.பி.யின் 75 மாவட்டங்களில் மொத்தம் 166 அபியுதயா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த பயிற்சித் திட்டமமானது ஒரு கற்றல் தளம் மட்டுமின்றி, மாநில இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகுகள்…
Author: admin
2025-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார். நடப்பாண்டில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்தி செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. 2025-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் நன்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களை தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புத்தாண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு. கடந்த சில மாதங்களாக பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு வரவேற்பு மிகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும்,…
செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொலைதூரம் சென்று உயர்கல்வியை தொடர முடியாத நிலை இருந்த நிலையில், உள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக் க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலி யாகவும் எம்எல்ஏவின் முயற்சியாலும் செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து நடப்பாண்டிலேயே மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ள தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்யூர் வட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பல கி.மீ. பயணித்து செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு போதுமான அளவில் பேருந்து வசதிகளும் இல்லை. இதிலும், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக சுமார் 100 கி.மீ. பயணித் து…
Last Updated : 21 Apr, 2025 12:50 PM Published : 21 Apr 2025 12:50 PM Last Updated : 21 Apr 2025 12:50 PM மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் கடந்த முறை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2023 – 2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘கிரேடு ஏ+’ பிரிவில்…
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3.31 லட்சம் பேர் இந்திய மாணவ, மாணவியர் ஆவர். சுமார் 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்களும் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர். அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் (ஓபிடி) இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அதாவது இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் ஓபிடி திட்டத்தில்…
திருநள்ளாறு: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும் தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மரபுபடி வாக்கிய பஞ்சாங்க முறையின்படியே சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகமும் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது என்பதாலும், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுவோராக இருப்பதாலும், இன்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது. கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளே இன்றும் நடைபெற்றன. சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் வெளிப்புற பகுதியிலும், உள் பிரகாரங்களிலும்…
சென்னை: பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’. இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கினார். முன்னதாக, துபாயில் நடந்த ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்று 2-ஆம் இடம் பிடித்தது. இந்த நிலையில், தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில்…
கூடலூர்: கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க வனத்துறை கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கண்ணகி கோயில் மலையடிவாரமான பளியன்குடியில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இதற்காக மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் இன்று (ஏப்.29) கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். அப்போது இன்னொரு பிரிவினரும் கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். இதனால் கொடியேற்றுவதில் இருதரப்பினர் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் முரளீதரன் காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட…
ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்புகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது, திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை (24 கேரட்) ரூ.93,353 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.97,730 ஆக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.10 லட்சமாக அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. தங்கம் விலை உயர்வு காரணமாக ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணிசமாக அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.12,000 கோடி அதிகரித்திருக்கிறது. இதன்படி ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின்…
விஷயங்களைச் செய்ய விரும்புகிறீர்களா? எப்படி என்பதை அறிக!அனைவருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம் ஒரு தொகுப்பு உள்ளது. இந்த 24 மணி நேரத்தில், சிலர் அவர்களை தூங்கச் செலவிடுகிறார்கள், சிலர் அவர்களை வேடிக்கையாக செலவிடுகிறார்கள், மேலும் சிலர் அவற்றை துண்டுகளாக உடைத்து, வேலை மற்றும் விளையாட்டிற்கான நேரத்தைப் பிரிக்கிறார்கள். நீங்கள் 3 வது பிரிவில் இருக்க விரும்பினால், உதவக்கூடிய புத்தகங்கள் இங்கே.