Author: admin

காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் தற்காலிகமாக சைவ உணவு மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம். கேஎஃப்சி என்றதுமே பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படும் ‘மொறு மொறு’ சிக்கன் உணவு வகைகள்தான். இந்நிலையில், காசியாபாத் பகுதியில் இயங்கி வரும் கேஎஃப்சி-யில் சைவ உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படுகிறது. இது தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. கன்வர் யாத்திரை மற்றும் சாவன் மாதத்தை முன்னிட்டு சைவ உணவு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், இறைச்சி உணவு வகைகளை விற்பனை செய்யக்கூடாது என ஹிந்து ரக்‌ஷா தள அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை முற்றுகையிட்டது அந்த அமைப்பு. இந்நிலையில்தான் சைவ உணவு வகைகளை மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கி வருகிறது காசியாபாத் பகுதியில் உள்ள கேஎஃப்சி. இது குறித்து அந்த உணவகத்தை நடத்தும் நிர்வாகம்…

Read More

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் குன்னூரில் வீடு மீது மரம் விழுந்தது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இது மட்டுமில்லாமல் அவ்வப்போது கடும் மேகமூட்டத்துடன் காற்றும் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி வனத்துறை கட்டுபாட்டில் உள்ள பைன் ஃபாரஸ்ட் மற்றும் 8-வது மைல் ட்ரீ பார்க் ஆகிய இரண்டு சூழல் சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக இன்று மூடப்பட்டன. அதே போல அவலாஞ்சி சுற்றுலா தலமும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் மழையின் காரணமாக ராட்சத கற்பூர மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதனால்,…

Read More

ஹனோய்: வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. உலக அளவில் வியட்நாம் சுற்றுலா சார்ந்து பிரபலமான பயண இடங்களில் (டெஸ்டினேஷன்) ஒன்றாக அறியப்படுகிறது. வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஹலாங் பே (Halong Bay) விரிகுடா பகுதி உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று 53 பேருடன் சுற்றுலா படகு ஒன்று கடல் பகுதியில் அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2 மணிக்கு சென்றது. அப்போது திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக அந்த படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்தவர்கள் கடலில் விழுந்துள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என தகவல். 14 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக…

Read More

சென்னை: பணிநிரந்தர கோரிக்கைக்காக 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர். இதில், 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு பங்கேற்றனர். அரசுப் பள்​ளி​களில் 12,000-க்கும் மேற்​பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்​கள் கடந்த 2012-ம் ஆண்​டு ​முதல் பணி​யாற்றி வரு​கின்​றனர். வாரத்​தில் 3 நாட்​கள் பணிபுரி​யும் அவர்​களுக்கு தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.12,500 வழங்​கப்​படு​கிறது. அவர்​கள் தங்​களை பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். திமுக ஆட்​சிக்கு வந்​தால் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வர் எனத் தேர்​தல் வாக்​குறுதி (வாக்குறுதி எண் 181) அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகை​யில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்​பேற்​றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் தங்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி வரு​கின்​றனர். தங்​கள் கோரிக்​கையை வலி​யுறுத்தி பல்​வேறு வடிவங்​களில் அடிக்​கடி போராட்​டத்​தி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள்…

Read More

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 19) முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 23 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு…

Read More

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் அவர்கள் இருவருக்கும் இடையிலான டெக்ஸ்ட் சாட் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 13-ம் தேதி அன்று கரண் தேவ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கரண் தேவ் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், கொலையை கரண் தேவின் மனைவி சுஷ்மிதா மற்றும் கரணுக்கு சகோதரர் உறவு முறையான ராகுல் தேவும் இணைந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த கரணின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது குடும்பத்தினரிடம் மின்சாரம் பாய்ந்ததில் கணவர் கரண் உயிரிழந்தார் என சுஷ்மிதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரணின் இளைய சகோதரரான குணால் தேவ், சுஷ்மிதா மற்றும் ராகுல் தேவ் இடையிலான இன்ஸ்டா சாட்டை எடுத்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த…

Read More

சென்னை: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தில் உள்ள சபரி நகர் மனை பிரிவுகளுக்காக சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், பொதுமக்களின் வசதிக்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று வட்டார வளர்ச்சி அதிகாரி கூறியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Read More

பனாஜி: கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பெண்ணின் முன்னாள் கணவர் ட்ரார் கோல்ட்ஸ்டீன், தங்களின் இரு மகள்களின் ஆரோக்கியம், மனநலம் பற்றி தான் அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த டிசம்பரில் அவர் போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில் இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ட்ரார் கோல்ட்ஸ்டீன் அளித்த காவல் துறை புகாரில், “நானும் நினாவும் 2017-ல் சந்தித்தோம். எல்லாம் நன்றாகவே சென்றது. ஆனால் சில காலத்தில் அவர் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தார். குழந்தைகளையும் என்னிடமிருந்து தள்ளியே வைத்தார். நினா எப்போதுமே குழந்தைகள் பள்ளி சென்று முறைப்படி கல்வி கற்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியதில்லை. அவர் பள்ளிக்கூட கல்விக்கும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு எதிரான கருத்துகளையே கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும் நான் குழந்தைகளை…

Read More

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அஜித்தின் திரையுலக வாழ்வில் பெரிய வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டார். விழாவில் இருந்து கிளம்பும் போது பத்திரிகையாளர்கள் அவரிடம் அஜித் படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “அடுத்த அஜித் சார் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே சந்தோஷம். ‘குட் பேட் அக்லி’ மாதிரியே அடுத்த படத்தையும்…

Read More

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஹோட்டல், காட்டேஜ்கள், ரிசார்ட்கள் ஏராளமாக உள்ளன. விடுமுறை தினத்தில் அறைகள் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து குடியிருப்புகளையும் தங்கும் விடுதிகளாக மாற்றி வாடகைக்கு விடுகின்றனர். இதில், பெரும்பாலான தங்கும் விடுதிகள் சட்ட விரோதமாகவும் , அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது போன்ற தங்கும் விடுதிகள் சம்பந்தமாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250150 மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி மூலமாகவும், 7598578000 என்ற ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ மூலமாகவும் பொதுமக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் புகார் அளிக்கலாம்…

Read More