இந்திய அணியில் காயமடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், இப்போது நிதிஷ் குமார் ரெட்டி தொடரிலிருந்தே விலகும் முழங்கால் காயத்திற்கு ஆட்பட்டுள்ளார். ஏற்கெனவே பும்ரா காய அச்சுறுத்தலில் இருக்கிறார். மனித சாத்தியங்களை மீறி பணியாற்றும் சிராஜ் எப்படி உடல் தகுதியைத் தக்க வைக்கிறார்? போன்ற கேள்விகள் எழ கம்பீரின் பயிற்சிக் காலம் குறித்த கடும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது. கருண் நாயர் வெறும் ஹைப் என்று தெரிந்து விட்டது, என்பதோடு சர்பராஸ் கானை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் நோக்கம் தவிர கருண் நாயருக்குக் கொடுத்த வாய்ப்பில் பெரிதாக எந்த ஒரு நம்பிக்கையும் தெரியவில்லை. ஞாயிறன்று நிதிஷ் குமார் ரெட்டி உடற்பயிற்சி நிலையத்தில் முழங்கால் காயமடைந்தார். லிகமண்ட் சேதம் ஏற்பட்டுள்ளது, எதற்காக இத்தனை கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள கம்பீர் அனுமதிக்க வேண்டும்? ஏற்கெனவே அர்ஸ்தீப் சிங் காயமடைந்தது எப்படி எனில் பயிற்சியில் சாய் சுதர்ஷன் அடித்த…
Author: admin
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தியின் மீது அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடிப்பூரம் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆடிப்பூரம் உற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களின் மீது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், உற்சவத்தின் மூன்றாம் நாளான அதிகார நந்தி உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் நந்தி வாகனத்தின் மீது திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை…
ஆரம்பகால தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில், வங்க மொழி நாவல்கள் அதிகமாகத் திரைப்படங்களாகி இருக்கின்றன. அதிலும் சரத் சந்திர சட்டர்ஜியின் பல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டிருக்கின்றன. அவர் நாவல்களில் இருந்து தமிழில் உருவான, ‘தேவதாஸ்’, ‘மணமாலை’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவருடைய ‘பரோதிதி’ என்ற நாவல், ‘கானல் நீர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. சட்டர்ஜி அதிகம் பிரபலமாகாத காலத்தில் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதிய கதை இது. இந்தக் கதை அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. நடிகை, திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பானுமதி, பல மறக்க முடியாத படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இந்தக் ‘கானல் நீர்’. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா, தனது பரணி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இந்தப் படத்தை இயக்கினார். தெலுங்கு, தமிழில் உருவான இதில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஏ.நாகேஸ்வர ராவ்…
நாமக்கல்: கிட்னி விற்பனை செய்ததாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து, ஆடியோவின் உண்மைத் தன்மை தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தறிப்பட்டறைகள், சாய ஆலைகள் ஏராளமான இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் கிட்னியை விலைக்கு வாங்கி இடைத்தரகர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்ற இடைத்தரகர் மூலம் பெண் ஒருவர் தனது கிட்னியை விற்பனை செய்ததும், அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தராமல் அலைக்கழிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்…
மெஹெண்டி பேசட்டும் ..டீஜின் திருவிழா அழகான மெஹெண்டி இல்லாமல் முழுமையடையாது, இது திருமணமான அல்லது விரைவில் திருமணமான பெண்களுக்கு காதல், அதிர்ஷ்டம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக அலங்கரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு முழு கை மெஹெண்டி வடிவத்தைத் தேர்வுசெய்ய தயங்கினால், இந்த ஆண்டு இந்த குறைந்தபட்ச மெஹெண்டி வடிவமைப்பு யோசனைகளைத் தேர்வுசெய்க. (பட வரவு: Pinterest)
புதுடெல்லி: வட மாநிலங்களில் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அறியப்படுகிறது. அதன்படி உ.பி.யில் கன்வர் புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு நேற்று பிரயாக்ராஜில் உள்ள முஸ்லிம்கள் மலர் கொடுத்தும், மலர்களை தூவியும் வழியனுப்பி வைத்தனர். மத நல்லிணக்கத்துக்கு உதராணமாக உள்ள இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஸ்ரவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கங்கை நீரை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி யாத்திரை செல்கிறார்கள். இந்த யாத்திரையை பக்தர்கள் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு மேற்கொள்வார்கள். வரும் 24-ம் தேதி உடன் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம்…
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கில் கைது செய்து போருக்கு அனுப்ப அந்த நாட்டு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மாணவனை மீட்க வேண்டும் என்று பெற்றோர் மத்திய, மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளை யங்கோட்டை கீழ்ப்பாதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றார். அப்போது எடப்பாடியைச் சேர்ந்த நித்திஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அறை எடுத்து தங்கினர். கிஷோர் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், படிப்பு செலவுக்காக கிஷோர், நித்திஷ் இருவரும் ஒரு கொரியர் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்போது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய் யும்போது அதில் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்நாட்டு காவல்துறையினர் கடந்த 2023-ம்…
பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் வயதானதை மெதுவாக்குவதற்கும் மனித ஆயுட்காலம் நீட்டிப்பதற்கும் வழிகளை ஆராய்ந்தனர். கடுமையான கலோரி கட்டுப்பாட்டு உணவுகள் முதல் மரபணு எடிட்டிங் சோதனைகள் வரை, பல உத்திகள் ஆய்வக விலங்குகளில் வாக்குறுதியைக் காட்டியுள்ளன, ஆனால் மனிதர்களுக்கு சவாலானவை. இப்போது, புதிய ஆராய்ச்சி, தற்போதுள்ள மருந்துகளின் கலவையானது மிகவும் நடைமுறை மாற்றீட்டை வழங்கக்கூடும் என்று கூறுகிறது.கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளியின் ஒரு ஆய்வில், இரண்டு எஃப்.டி.ஏ-அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள்-ராபமைசின் மற்றும் மெட்ஃபோர்மின், ஏற்கனவே பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன-இது உணவுக் கட்டுப்பாட்டின் விளைவுகளைப் பிரதிபலிக்கும் மற்றும் ஆயுட்காலம் அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. முடிவுகள் பெரும்பாலும் விலங்கு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், கண்டுபிடிப்புகள் உயிரியலாளர்கள் மற்றும் நீண்ட ஆயுள் ஆராய்ச்சியாளர்களிடையே உற்சாகத்தை உருவாக்குகின்றன, அதே நன்மைகள் மக்களுக்கும் பொருந்துமா என்பதைத் தீர்மானிக்க மனித சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.ஆயுட்காலம் நீட்டிக்க மருந்து கலோரி கட்டுப்பாட்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது வயதான ஆராய்ச்சியில் மிகவும்…
சண்டிகர்: பஞ்சாப் அமைச்சரவையிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2022-ல் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கரார் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்மோல் ககன் மான். பாடகியான இவர், பகவந்த் மான் தலைமையிலான அரசில் சுற்றுலா, முதலீட்டு மேம்பாடு துறை அமைச்சராக பதவி வகித்தார். எனினும் கடந்த ஆண்டு அமைச்சரவையிலிருந்து அன்மோல் நீக்கப்பட்டார். இந்நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அன்மோல் வெளியிட்ட பதிவில், “என் இதயம் கனமாக இருக்கிறது, ஆனால் நான் அரசியலை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். எம்எல்ஏ பதவியிலிருந்து விலகும் என்னுடைய முடிவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சிக்கு வாழ்த்துகள். பஞ்சாப் அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். ஆனால், அவரது விலகலை ஆம்…
சென்னை: தமிழகத்தில் எம்.பி.,-க்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:2019-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுமே எம்.பி.க்களுக்கு அண்டை மாநிலங்களைப்போல அலுவலகம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு நான் கோரிக்கை வைத்தேன். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு திமுக அரசிடமும் கோரினேன். தமிழக முதல்வரிடமும் விசிக தலைவர் திருமாவளவனால் எழுத்துப் பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என எல்லோருக்குமே அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை. வெளியூர் எம்.பிக்கள் சென்னைக்கு வந்தால் அவர்களுக்குத் தங்குவதற்கு இடம்…
