மும்பை: 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2006-ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டு, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) விடுவித்தது. நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் இருந்த கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. “அடையாள அணிவகுப்பு குறித்து கடுமையான கேள்விகளை எதிர்தரப்பினர் எழுப்பினர். பல சாட்சிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம், சிலர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்தனர். பின்னர் திடீரென குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண்பித்தனர்,…
Author: admin
சென்னை: லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு சேலான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்தனர்.
மகப்பேறு விடுப்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் சட்டபூர்வமான உரிமையாகும், மேலும் நாடு தழுவிய சட்டங்கள் வேறுபடுகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது பிறந்த குழந்தைக்கு முனைவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை, மேலும் பிரசவத்திலிருந்து உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் குணமடைய அவள் மீண்டும் அரைக்கப்படுவதற்கு முன்பு. அது மட்டுமல்லாமல், நிறைய நாடுகளும் பெற்றோரின் விடுப்பையும் அங்கீகரிக்கின்றன (சில வாரங்களுக்கு அப்பால் செல்லாத தந்தைவழி விடுப்பிலிருந்து வேறுபட்டவை), அங்கு பெற்றோர்கள் ஒருவர்/அவள் பெற்றோராக இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலைகளை எடுக்க முடியும். மகப்பேறு விடுப்பு கொள்கைகளுக்கு வரும்போது, இந்த 7 நாடுகள் ஒரு முன்மாதிரி வைக்கின்றன …1. பல்கேரியாபல்கேரியா புதிய தாய்மார்களுக்கு உலகின் மிக விரிவான ஊதிய மகப்பேறு விடுப்பு நன்மைகளை வழங்குகிறது. பல்கேரிய தாய்மார்களுக்கு 58.6 வாரங்கள் (தோராயமாக 410 நாட்கள்) ஊதிய விடுப்புடன் அரசாங்கம் வழங்குகிறது, இது அவர்கள் வழங்குவதற்கு 45 நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. பெரும்பான்மையான தாய்மார்கள்…
புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராம்மோகன் நாயுடு, “அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு இடையே அரசாங்கம் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இழப்பீடு ஒரே மாதிரியாகவே உள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள், பணியாளர்கள், மருத்துவக் கல்லூரியில் கொல்லப்பட்ட மாணவர்கள் என அனைவருக்கும் இழப்பீடு ஒன்றுதான். விமான விபத்துக்கான உறுதியான காரணம், மீண்டும் இதுபோல நிகழாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் இறுதி அறிக்கையில் இருக்கும். இந்த அவைக்கும் நாட்டு மக்களுக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்ல முடியும். விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஏஏஐபி வெளிப்படையாகவும், பாரபட்சமற்ற முறையிலும், உண்மையைக் கண்டறியும் நோக்கிலும் விசாரணையை நடத்தி வருகிறது.…
சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக தர்ம சங்கடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் இந்நாள் தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது. பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு…
இரத்த சர்க்கரையை இயற்கையாகவே நிர்வகிப்பது சரியான மூலிகைகள் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இந்திய சமையலறைகளில் தலைமுறைகளாக பயன்படுத்தப்படும் இந்த எட்டு பவர்ஹவுஸ் ஆலைகள் இன்சுலின் உணர்திறனை ஆதரிப்பதற்கும், சர்க்கரை உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துவதற்கும், பசி குறைப்பதற்கும் இயற்கை வழிகளை வழங்குகின்றன.இந்த மூலிகைகள் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை ஆதரிக்க வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. சிலர், வெந்தயம் மற்றும் கற்றாழை போன்றவை, மெதுவான கார்போஹைட்ரேட் உறிஞ்சுதல், மற்றவர்கள், கசப்பான சுண்டைக்காய், இலவங்கப்பட்டை மற்றும் பெர்பெரின் போன்றவை இன்சுலின் பிரதிபலிக்கின்றன அல்லது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன. ஜிம்னிமா போன்ற மூலிகைகள் சர்க்கரை பசியைக் குறைக்கின்றன, மேலும் புனித துளசி மற்றும் வேப்பம் போன்ற அடாப்டோஜன்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. பாரம்பரிய அறிவு மற்றும் வளர்ந்து வரும் விஞ்ஞான சான்றுகளின் ஆதரவுடன், அவை தேநீர், உணவு அல்லது காப்ஸ்யூல்கள் மூலம் சேர்க்க எளிதானது. வெந்தயம், துளசி மற்றும் பிற இயற்கை மூலிகைகள்…
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் விலகியதால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய வீரர்களின் பாசாங்குத் தனம் என்று சாடியுள்ளார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் இந்த வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றனர். இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டார், அணியில் ஷிகர் தவன், ஹர்பஜன், ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பாத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த…
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 23-ம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பொ.ரத்தினசாமி ஆகியோர் இன்று (ஜூலை 21) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது: ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி காலை மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன்,…
மஞ்சள் காமாலை உடன் ஹெபடைடிஸ் A, அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும்.1. தடுப்பூசி போடுங்கள்2. குடித்துவிட்டு பாதுகாப்பாக சாப்பிடுங்கள்உங்கள் உள்ளூர் நீர் மூலத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாதபோது, வேகவைத்த அல்லது பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.3. நல்ல சுகாதாரத்தை பயிற்சி செய்யுங்கள்சோப்புடன் கை கழுவுதல் கழிப்பறையைப் பயன்படுத்திய பின், சமைப்பதற்கு முன் மற்றும் உணவுக்கு முன் செய்யப்பட வேண்டும்.குழந்தைகளுக்கு கைகளை கழுவ கற்றுக்கொடுங்கள், குறிப்பாக வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால்.4. ஆபத்தான தொடர்பைத் தவிர்க்கவும்நோய் இல்லாத நபர்களுடன் மட்டுமே உணவு, பானங்கள் அல்லது பாத்திரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆதாரங்கள்வெப்எம்டிஹெல்த் டைரக்ட் ஆஸ்திரேலியாஇன்று மருத்துவ செய்திமெட்லைன் பிளஸ்மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை.
மதுரை: தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் ஓடிபி பெற தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் வீடு வீடாக செல்கின்றனர். அப்போது திமுகவினர் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு துன்புறுத்துகின்றனர். எங்கள் வீட்டிற்கு திமுகவினர் 10 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர். பின்னர் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.…
