‘கூலி’ படத்தின் தனது கதாபாத்திர பின்னணி குறித்து விவரித்து இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். முதன்முறையாக அப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், உடன் நடித்த நடிகர்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “ரஜினி சார் எப்போதுமே ரொம்ப கூலாக இருப்பார். அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டுவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சவுகரியமாக மாற்றும் வழி அவரிடம் இருக்கிறது. ‘கூலி’ படத்தில் சத்யராஜ் சாருடைய மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க ஆண்களை மையப்படுத்திய கதையாக இருந்தாலும், அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுவார்கள். அப்படியான ஒரு கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. இதில் நாகார்ஜுனா சார் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பே அருமையாக இருக்கும். எப்போதுமே அவருக்கு ரசிகையாக இருந்துள்ளேன். இப்போது அவரது சூப்பர் ரசிகையாக மாறியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி லோகேஷ் கனகராஜ்…
Author: admin
வேலூர்: துணை முதல்வர் பதவியில் இருப்பதா, இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும், எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தேன்பள்ளி கிராமத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”ஒரே தொகுதியில் எப்படி இத்தனை முறை வெல்ல முடிகிறது என பலர் என்னை கேட்கும்போது, நீங்கள் தொகுதியை, தொகுதியாக பார்க்கிறீர்கள் நான் கோயிலாக பார்க்கிறேன். அதே சமயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.” என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: திமுக 523 வாக்குறுதிகளை கொடுத்ததில் எத்தனை நிறைவேற்றியுள்ளது என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள். அவர்களது ஆட்சியில்…
கொழுப்பு கல்லீரல் நோய் -இப்போது மருத்துவ அடிப்படையில் வளர்சிதை மாற்ற செயலிழப்பு என அறியப்படுகிறது – தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) – குறிப்பாக அதிக எடை கொண்ட, நீரிழிவு அல்லது வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆரம்ப கட்டங்கள் பாதிப்பில்லாதவை அல்லது அறிகுறியற்றதாகத் தோன்றினாலும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கொழுப்பு கல்லீரல் வளர்சிதை மாற்ற செயலிழப்புக்கு முன்னேற முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் – தொடர்புடைய ஸ்டீடோஹெபடைடிஸ் (MASH) – வீக்கம் மற்றும் கல்லீரல் பாதிப்பு சம்பந்தப்பட்ட மிகவும் கடுமையான நிலை. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தின் ஏஏ அறிக்கையின்படி, கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமான ஹெபடோசெல்லுலர் கார்சினோமாவின் (எச்.சி.சி) அபாயத்தை இந்த முன்னேற்றம் கணிசமாக அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை தலையீடுகள் உயிருக்கு ஆபத்தானதாக மாறுவதற்கு முன்பு அந்த நிலையை பெரும்பாலும் மாற்றியமைக்கலாம்.MASLLD என்றால் என்ன, அது புற்றுநோய்க்கு…
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணி சதி செய்ததாக, அவரது தாயார் ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிஹார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி கூறும்போது, “தேஜஸ்வியை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பிஹாரில் நிறைய கொலைகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒரு கொலையாக இருக்கும். இதற்கான சதியில் ஈடுபட்டது, ஈடுபட்டுக்கொண்டிருப்பது ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிதான். இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேஜஸ்வியை களத்தில் இருந்து அப்புறப்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். தேஜஸ்வியை கொலை செய்ய குறைந்தது நான்கு முறை முயற்சிகள் நடந்தன. ஒரு முறை ஒரு லாரி, அவரது வாகனத்தின் மீது மோதியது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதை உணர்த்தவே தேஜஸ்வி…
திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா வின் ஏழாம் நாளான இன்று திருத்தேரின் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயில் கோயில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, ஆடிப்பூரம் உற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் வாகனங்களின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், உற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரின் மீது திரிபுர சுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், மாடவீதிகளின் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.…
சென்னை: “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என தமிழகம் முழுவதும் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரச்சாரம் செய்து, பொதுமக்களின் கருத்தை பெற்று கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் அனுப்பி வருகின்றனர். தமிழகத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி களப் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது வரை 80 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தவெக இணைந்துள்ள நிலையில், விரைவில் ஒரு கோடி உறுப்பினர் எண்ணிக்கையை எட்ட இருக்கிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவெக தனித்து போட்டியா ? கூட்டணியா ? என முடிவாகாத நிலையில், செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரசாரத்தை மக்களிடையே பிரபலமடைய செய்ய செல்ல வேண்டும்…
இந்தியா ஒரு குறுக்கு வழியில் நிற்கிறது, அங்கு பாரம்பரிய உணவு ஞானம் நவீனகால சுகாதார சவால்களை சந்திக்கிறது. வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருவதால், ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பாதிக்கிறது, ஐ.சி.எம்.ஆர்-தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கான திருத்தப்பட்ட 17-புள்ளி உணவு வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தியது. இந்த வழிகாட்டுதல்கள் போக்குகள் அல்லது பற்றுகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல; அவை திட அறிவியல், பல வருட ஆராய்ச்சி மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட மக்கள்தொகையின் ஊட்டச்சத்து தேவைகளிலிருந்து பிறக்கின்றன. இந்த வழிகாட்டுதல்கள் உண்மையில் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, மேலும் முக்கியமாக, அவை உண்மையில் தட்டில் எதைக் குறிக்கின்றன.
நெம்மேலி: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் கடல் அரிப்பு தொடரும் நிலையில், சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியாகியும் பணிகள் தொடங்கப்படாததால் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதி அருகே, கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெம்மேலி மீனவர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் குடியிருப்புகளை கடல் நீர் உட்புகும் நிலை உள்ளது. மேலும், கடல் அரிப்பு காரணமாக கரை சேதமடைந்துள்ளதால் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக அங்கு நிறுத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,…
சிலர் ஏன் 100 ஐக் கடந்து வாழ்கிறார்கள், மனதில் கூர்மையாகவும், உடலில் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள், மற்றவர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் நாள்பட்ட நோய்களுடன் போராடுகிறார்கள்? உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்போது, விஞ்ஞானிகள் இப்போது மரபியல் முக்கியமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள், குறிப்பாக தீவிர வயதானவர்களில். ஆராய்ச்சியாளர்கள் நூற்றாண்டு கலைஞர்களைப் படித்து வருகின்றனர், மேலும் அவர்களில் பலர் மெதுவாக வயதாகி, வாழ்க்கையின் பிற்பகுதி வரை பெரிய நோய்களைத் தவிர்க்கிறார்கள். பரம்பரை மரபணுக்கள் முதல் ஸ்மார்ட் பழக்கம் வரை, உயிரியல் மற்றும் நடத்தை ஆகியவற்றின் கலவையானது விதிவிலக்கான நீண்ட ஆயுளைத் திறப்பதற்கு முக்கியமாகத் தெரிகிறது.100 வயது குழந்தைகளைத் தவிர்த்து விடுகிறதுஒரு நூற்றாண்டு என்பது 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர். யுனைடெட் ஸ்டேட்ஸில், ஒவ்வொரு 5,000 பேரில் 1 பேர் மட்டுமே இந்த மைல்கல்லை அடைகிறார்கள். அவர்களில், சுமார்…
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என குடும்ப சென்டிமென்ட் கதைகளின் மூலம் வெற்றியை கொடுத்த பாண்டிராஜ் மீண்டும் அதே களத்தை கையில் எடுத்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. ‘பொட்டல முட்டாயே’ பாடல், ட்ரெய்லர் வைரலான நிலையில், ‘மகாராஜா’வுக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு நல்ல ஓபனிங் உடன் வெளியாகியுள்ளது. மதுரையில் பரோட்டா கடை வைத்திருப்பவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). பக்கத்து ஊரைச் சேர்ந்த அரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. காதலிக்கத் தொடங்கும் இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாயகியை திருமணம் செய்தால் ஹீரோவின் பெற்றோர் எதிர்காலத்தில் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோ குடும்பம். ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி ஹீரோயினை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ.…
