தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார். தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த பின்னர், செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுகிறார். பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு,…
Author: admin
கும்பகோணம்: தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு, விஜய் படம் மட்டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வீடுதோறும் ‘மக்கள் விரும்பும் உங்கள் வேட்பாளர் விஜய்’ என அச்சிட்ட ஸ்டிக்கர்களை 300-க் கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று முன்தினம் ஒட்டினர். இந்த ஸ்டிக்கரில் விஜய் படத்துடன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் படமும் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில், ஸ்டிக்கரில் ஆனந்த் படத்தை நீக்கி விட்டு, விஜய் படம் மட்டும் உள்ள புதிய ஸ்டிக்கரை அக்கட்சியினர் அச்சிட்டு, வீடுகளில் ஏற்கெனவே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கருக்கு மேல் ஒட்டி வருகின்றனர். இது தொடர்பாக தவெக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் பிரபாகர் கூறியதாவது: கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் ஆனந்த் படத்தை அகற்றிவிட்டு, விஜய் படத்தை மட்டும் ஸ்டிக்கரில் அச்சிட்டு, புதிய ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்…
சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு தில்லுமுல்லு நடவடிக்கை என்றும் மக்களாட்சி மக்களுக்கே உரியது; அதையாரும் களவாட அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஆதாரை ஆவணமாக கருதவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையில் பிஹாரில் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை. பிஹார் மாநிலத்தில் நடந்ததே…
சென்னை: வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்பு, பெருமைக்கு அடிப்படை என்று ராணுவ அதிகாரிகளுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளின்போது மேற்கொள்ளும் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய ராணுவ தென் பிராந்திய பகுதியின் அசாதாரண பங்களிப்பை பாராட்டி, நன்றி தெரிவிக்கும் விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், ராணுவத்தின் 16 மெட்ராஸ் (திருவாங்கூர்), 35 ஃபீல்ட் படைப்பிரிவு, ஆவடி ஆயுத தொழிற்சாலை, 65 கம்பெனி ராணுவ சேவை படை (விநியோகம்) ஆகிய 4 பிரிவுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டது. ராணுவம் பலவீனமாக இருந்தால் நட்பு நாடுகள்கூட எதிரியாக பார்க்கும். வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்பு,…
சென்னை: போலி வணிகர்களைத் தடுக்க கள ஆய்வு செய்வது அவசியம் என்று வணிகவரித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார். சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்ட அரங்கில், நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலான அனைத்து வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: புதிதாக ஜிஎஸ்டி வரியில் இணைய விண்ணப்பிக்கும் வணிகர்களின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதுடன், அவர்கள் உண்மையாக தொழில் புரிகிறார்களா என்பதையும் கள ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் போலி வணிகர்களைத் தடுக்க முடியும். கள ஆய்வுக்குச் செல்லும்போது ரூ.40 லட்சத்துக்கும் மேல் தொழில் செய்யும், ஜிஎஸ்டி தொடர்பான விழிப்புணர்வு இல்லாத வணிகர்களுக்கு, அவர்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் இணையுமாறு அறிவுறுத்த வேண்டும். அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் வகையில், அனைவரும் கவனமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். தமிழ்நாடு வணிகர்…
நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதற்கும், மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வு மற்றும் மனச்சோர்வைக் குறைப்பதற்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றை ரோடியோலா கொண்டுள்ளது. இது “ரோஸ் ரூட்”, “ஆர்க்டிக் ரூட்” மற்றும் “கோல்டன் ரூட்” என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், நோர்வே ET போன்ற பல நாடுகளில், நமது மன கவனம் மற்றும் பதட்டமான சைடெம் கோளாறுகளை மேம்படுத்துவதன் மூலம் உடல் சகிப்புத்தன்மை, வேலை-உற்பத்தித்திறன் மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்க பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது.
புதுடெல்லி: ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் யுஎல்பிஜிஎம் – வி3 என்ற ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்த ஏவுகணை தயாரிப்பு அதானி மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வகை ஏவுகணையில் வி1, வி2, வி3 என்ற மூன்று வகை ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் வழிகாட்டுதல், செயல்பாடு, தாக்கும் தூரம் ஆகிய விஷயங்களில் மாறுபாடுகள் உள்ளன. இவற்றில் யுஎல்பிஜிஎம் – வி3 ஏவுகணை பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏவுகணையை ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள திறந்தவெளி சோதனை மையத்தில் டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. 12.5 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை ட்ரோன் மூலம் வானில் எடுத்துச் செல்லப்பட்டு ஏவப்பட்டது. இந்த ஏவுகணையை பயன்படுத்தி பகலில் 4 கி.மீ தூரம் உள்ள இலக்கையும், இரவில் 2.5 கி.மீ தூரமுள்ள…
ஆரோக்கிய பயிற்சியாளர் டேனியல் லீயு தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் 21 நாட்களில் வரையறுக்கப்பட்ட ஏபிஎஸ் அடையவும் உதவும் நான்கு எளிய வீட்டு உடற்பயிற்சிகளையும் அறிவுறுத்துகிறார். இந்த பயிற்சிகளில் அதிக முழங்கால் கைதட்டல்கள், நிற்கும் பக்க நெருக்கடிகள், குறுக்கு நெருக்கடிகள் மற்றும் சாதாரண உயர் முழங்கால்கள் ஆகியவை அடங்கும். வடிவம் மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகையில், இந்த உடற்பயிற்சிகளும் கோர், சாய்வுகள் மற்றும் இடுப்பைக் குறிவைத்து, தீவிர ஜிம் அமர்வுகள் இல்லாமல் ஒட்டுமொத்த எடை இழப்புக்கு உதவுகின்றன. அணுகுமுறை சரியாக இருந்தால் எடை இழப்பு எளிதானது. ஆனால் தொப்பை கொழுப்பை இழப்பது முற்றிலும் வேறுபட்ட பந்து விளையாட்டு. எடை இழப்பு பயணம் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் பொதுவாக தொப்பை கொழுப்பை இழப்பதில் போராடுகிறார்கள். தொப்பை கொழுப்பை எரிப்பது பெரும்பாலும் க்ரஞ்ச்ஸ் அல்லது ரஷ்ய திருப்பங்கள் போன்ற தீவிர உடற்பயிற்சிகளாகும். ஆனால், அந்த தீவிர உடற்பயிற்சிகளும் இல்லாமல் தொப்பை கொழுப்பை இழக்க முடிந்தால் என்ன…
சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக்கூறி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவர் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டது. இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரி்த்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, மனுதாரரான ரவிச்சந்திரனுக்கு ரூ.…
புதுடெல்லி: பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் (பிஎம்-விபிஆர்ஓய்) என்ற பெயரில் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டம், நாட்டில் 2 ஆண்டு காலத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உற்பத்தி துறைகள் உட்பட பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் வேலை அளிப்பவர்களுக்கு ஊக்குவிப்பை அளிக்கும். இத்திட்டம் முதல்முறை வேலையில் சேருபவர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பவர்களுக்கும் பயன்தரும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதல்முறையாக பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத இபிஎப்…
