சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை ரூ.12,000 கோடியில் வடிவமைத்துள்ளன. பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது…
Author: admin
சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வண்ணக்கலை, சிற்பக்கலை, விஷுவல்கம் யூனிகேஷன் மற்றும் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் 4 ஆண்டு கால பிஎஃப்ஏ படிப்புகளும், 2 ஆண்டு கால எம்எஃப்ஏ படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த டிசைன், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரு பாடப் பிரிவுகளில் 4 ஆண்டு கால பிஎஃப்ஏ படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சேருவதற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணைய தளத்தை (www.artandculture. tn.gov.in) பயன்படுத்தி ஆக. 9-ம் தேதி மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை வழங்குவது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும். இவற்றை கருத்தில் கொண்டு பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் 50 சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்று ஆலோசித்து வருகிறோம். இதேபோல், மாணவ-மாணவிகள் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு என தனியாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதாவது, பள்ளி, கல்லூரி நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலையில் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நேரடியாக சென்று பேருந்து சேவைகள் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும்…
சென்னை: மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான வழக்கு ஆக.19-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா. ஆர். மகாதேவன் அமர்வு, “மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு மூன்று மாத காலம் என்ற ஒரு வரம்பை நிர்ணயித்து தீர்ப்பளித்தது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதால் ஆளுநர் வசம் இருந்த மசோதாக்களை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக்கியது. 14 கேள்விகள்: இந்நிலையில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் அரசியல் சாசன பிரிவு 143-ஐ…
சென்னை: சென்னையிலிருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட இருந்தபோது, விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி, விமான கேப்டன் கேபினில் ஒலித்தது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் விரைந்து சென்று அவசர கால கதவைத் திறக்க முயன்றது யார் என்பதை பார்த்தனர். அப்போது அவசர கால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்க்கார் (27) என்ற பயணிதான் கதவைத் திறக்க முயன்றார் என்பது தெரியவந்தது. விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, அந்த பயணியிடம் விசாரணை நடத்தியபோது, சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதாகவும், சொந்த வேலையாக…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 30) தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கு ஆன்லைன் வாயிலாகவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மேலும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டது. அரசு…
ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற படகு உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மீனவர்கள் சைமன், சேகர், மோபின், டென்சன் ஆகியோர் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 5 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களது படகைப் பறிமுதல் செய்தனர். கைதான 5 மீனவர்களும் நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை ஆக. 7-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல, ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த டிகோசன், முருகேசன், களஞ்சியராஜ், ஆனந்…
“நம்மை யார் ஆள வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யலாம்” என்பதுதான் ஜனநாயகத்தின் உச்ச அடையாளம் என்றால் அது மிகையாகாது. ‘தேர்தல்’ என்ற அந்த ஜனநாயக நடைமுறைக்கென சில வரைமுறைகள் உள்ளன. தேசத்துக்கு தேசம் அது மாறுபடும். தேர்தல் அரசியலும் அப்படித்தான். ஆனால், இப்போது உலகம் முழுவதும் தேர்தல் அரசியலில் ஓர் ஒற்றுமை நிலவுகிறது. அது தேர்தலில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடும், அதன் தாக்கமும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசியல் களத்தில் ஏஐ என்னவெல்லாம் செய்கிறது என்பதை சாதக, பாதகங்கள் தொனியில் பார்க்கலாம். பரிணாம வளர்ச்சி கண்ட பிரச்சார உத்திகள்! – தேர்தல் வந்துவிட்டாலே ‘வாக்காளர் பெருமக்களுக்கு’ மவுசு அதிகமாகிவிடும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலளிக்காத பிரதிநிதி கூட கந்தசாமிக்கும், கருப்பசாமிக்கும் நின்று நிதானமாக பதிலளித்துவிட்டு, தேவைப்பட்டால் மன்னிப்பு கூட கேட்டுவிட்டு வாக்கு கேட்பார். தேர்தல் பிரச்சாரத்தில் ஏஐ-ன் பங்கை அலசுவதற்கு முன்னர், கடந்த…
மழைக்காலம் வீட்டில் கொத்தமல்லி (தனியா) வளர்ப்பதற்கான சிறந்த நேரங்களில் ஒன்றாகும். வழக்கமான மழை, குளிரான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றின் இயற்கையான ஊக்கத்துடன், இந்த மணம் கொண்ட மூலிகை உயிர்வாழாது, அது செழித்து வளர்கிறது. நீங்கள் ஒரு முழு கொல்லைப்புற தோட்டம் அல்லது ஒரு சிறிய பால்கனியில் அல்லது விண்டோலில் கிடைத்தாலும், கொத்தமல்லி வேகமாகவும் வம்பு இல்லாததாகவும் வளர்கிறது, இது மழையின் போது வீட்டு தோட்டக்கலைக்கு ஏற்றதாக இருக்கும். கொத்தமல்லி கறிகள் முதல் சட்னிகள் வரை அனைத்திற்கும் புத்துணர்ச்சியின் வெடிப்பை சேர்க்கிறது, மேலும் உங்கள் சொந்த ஆலையிலிருந்து புதிதாக அதைப் பறிப்பதைப் பற்றி நம்பமுடியாத அளவிற்கு திருப்தி அளிக்கிறது. ஆனால் இது குறைந்த பராமரிப்பு என்றாலும், ஒரு சில கவனமுள்ள பழக்கவழக்கங்கள் உங்கள் பயிர் எவ்வளவு பசுமையான மற்றும் நீண்ட காலமாக மாறும் என்பதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். சரியான மண்ணைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து, அதற்கு எவ்வளவு நீர் மற்றும்…
புதுடெல்லி: உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். அவர்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 140 கோடி இந்தியர்களும் கொண்டாடுகின்றனர். இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்து வருகிறது. இந்த மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என்பது ஆபரேஷன் சிந்தூரின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த ராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் ராணுவ வலிமை, தொழில்நுட்பத் திறனை பார்த்து ஒட்டு மொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்தது. குறிப்பாக, உள்நாட்டில்…
