தமிழில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தாலும், இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிப்பில் கலக்கியவர்கள் பலர் உண்டு. ஆனால் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரமோ, வில்லத்தனமோ, ஒரே ஒரு காட்சியில் வரும் கேரக்டரோ, எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதுவாகவே மாறி தனது ஆளுமையை நிரூபிப்பவர்கள் ஒருசிலரே. அப்படி, தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுப்பவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.பாஸ்கர். நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், டப்பிங் கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். சொஸைட்டி ஃபார் நியூ டிராமா என்னும் நாடகக் குழுவின் அங்கமாக இருந்த எம்.எஸ்.பாஸ்கர், அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் ஒளி/ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழில் ஒளிபரப்பான புகழ்பெற்ற ‘விழுதுகள்’ தொடரிலும் அவர் நடித்திருக்கிறார். தன் அக்கா டப்பிங் துறையை சேர்ந்தவர் என்பதால் தானும் அதே துறையில் பணியாற்ற விரும்பினார் எம்.எஸ்.பாஸ்கர். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு அவர் டப்பிங் பேசினார்.…
Author: admin
திருநெல்வேலி: திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக துப்பு துலங்காத நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதி ஒருவரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். திமுகவின் முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர், தொழிலதிபர் ராமஜெயம். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைபயிற்சியின்போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும் வழக்கில் துப்புதுலங்கவில்லை. குற்றவாளிகளும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி சுடலைமுத்து என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தண்டனை கைதி சுடலைமுத்து, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக சுடலைமுத்து சென்றிருந்ததாக…
திருவனந்தபுரம்: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்கு, கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் உட்பட 3 பேர், ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜூலை 25-ம் தேதி சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். சத்தீஸ்கரின் நாராயண்பூரைச் சேர்ந்த 3 சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்து கடத்தியதாக உள்ளூர் பஜ்ரங் தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சிபிஎம் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரள மாநில பாஜகவும் இந்த கைது குறித்த அதிருப்தி தெரிவித்தது. கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,…
நடிகர் அபினய்க்கு பாலா நிதியுதவி வழங்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபினய். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு படங்கள் நடித்து வந்தார். பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இந்த வீடியோ பதிவினையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை ஒட்டி இணையத்தில் பலரும் பாலாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், அபினய் சீக்கிரம் குணமாகி நடிப்புக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் அபராத வட்டி, இஎம்ஐ வட்டி தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இஎம்ஐ வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர். கடைசியாக 2023-ம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடிதிட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்திவிட்டனர். ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தற்போது நிலுவையிலுள்ள ரூ.1000 கோடி கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இஎம்ஐ வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை.…
உங்கள் சாக்ஸை குளிர்சாதன பெட்டியில் அல்லது உங்கள் சாவியில் மடுவில் கண்டுபிடிக்க எப்போதாவது எழுந்திருக்கிறீர்களா, அவர்கள் எப்படி அங்கு சென்றார்கள் என்பதற்கான நினைவகம் இல்லாமல்? ஸ்லீப்வாக்கிங் என்பது ஒரு நகைச்சுவையான திரைப்பட ட்ரோப் அல்ல. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு உண்மையான தூக்கக் கோளாறு, நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. நரம்பியலில் வெளியிடப்பட்ட ஒரு ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வின்படி, அமெரிக்க பெரியவர்களில் சுமார் 3.6% பேர் கடந்த ஆண்டின் ஒரு முறையாவது தூக்கமயமாக்கப்படுவதாக அறிவித்தனர், அதே நேரத்தில் கிட்டத்தட்ட 29% பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தூக்கத்தில் உள்ளனர். அதுதான் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்க்கையை அரை ஏழை நோக்கிச் செல்கிறார்கள், அதாவது. ஸ்லீப்வாக்கிங் உண்மையில் என்ன, அதற்கு என்ன காரணம், மற்றும் வாசகங்களில் தொலைந்து போகாமல் அறிகுறிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை உடைப்போம்.தூக்கமயமாக்கப்படுவதற்கு என்ன காரணம்?ஆழ்ந்த தூக்கத்திற்கும் ஓரளவு விழித்தெழுதலுக்கும் இடையில் உங்கள்…
‘மோனிகா’ பாடல் வைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ’கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இதில் சவுபின் சாகிரின் நடனம் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இப்பாடல் உருவான விதம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அப்பேட்டியில், “மோனிகா பாடல் வியாபார நோக்கத்திற்காக வைக்கப்பட்டது தான். என் படங்களில் அப்படியான பாடல்கள் இடம்பெறாது. முழுமையாக த்ரில்லர் பாணியில் படம் இருக்கும் போது, கதையில் ஒரு சின்ன ரிலாக்ஸ் தேவைப்பட்டது. படமாக பார்க்கும் போது அப்பாடல் தவறாக தெரியாது. கதையோடு போய்விடும். கதைப்படி அப்பாடலில் ரஜினி சார் வரமுடியாது. நிஜத்தில் அந்த இடத்தில் அப்பாடல் வைக்கப்பட்டதற்கு காரணம் சவுபின் சாகிர் தான். ஏனென்றால் ’பீஸ்ம பரவம்’ படத்தில் அவருடைய நடனம் ரொம்பவே பிடிக்கும். கதைப்படி இந்தக் கதாபாத்திரம் இப்படியொரு நடனம் செய்தால் எப்படியிருக்கும் என்று திட்டமிடப்பட்டு அப்பாடல் வைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’…
சென்னை: எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து இணைவதால், தொகுதி பங்கீட்டில், பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. அதை முதல்வர் பார்த்துக் கொள்வார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அடையாறில் விசிக மாணவரணி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது: நாம் பேசுவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலைமைப் பண்பு. தூண்டிவிட்டு போய்விடலாம். அது சாதி கலவரமாக மாறிவிடும். அது துப்பாக்கிச்சூடு வரை செல்லக்கூடும். அந்த பாதிப்புகள் யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்னும் பொறுப்புணர்வு தேவை. தனக்கு அரசியல் ஆதாயம் கிடைத்தால் போதும், யார் எக்கேடு கெட்டால் என நினைக்கக் கூடாது. நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புணர்வு தேவை. தலைமைப் பொறுப்பு சும்மா வந்து விடாது. ஈர்ப்பின் அடிப்படையில் மக்கள் திரளக் கூடும். அதை தக்க வைப்பது சிரமம். ஈர்ப்பு இருக்கும்:…
கவனம் பற்றாக்குறை ஹைபராக்டிவிட்டி கோளாறு என்பது உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களைத் தாக்கும் ஒரு நிலை. அதன் அறிகுறிகளில் பெரும்பாலானவை குழந்தை பருவத்தில் தொடங்கி இளமைப் பருவத்தில் தொடர்கின்றன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஏ.டி.எச்.டி நோயாளிகளின் நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் புரிந்துகொள்ள சுகாதார நிறுவனங்களிலிருந்து விரிவான ஆய்வுகள் மற்றும் பெற்றோர் கணக்கெடுப்புகள் மற்றும் தரவைப் பயன்படுத்தின, மேலும் 3-17 வயதுக்கு இடையே சுமார் 7 மில்லியன் குழந்தைகள் 2022 ஆம் ஆண்டில் ஏ.டி.எச்.டி நோயால் கண்டறியப்பட்டுள்ளனர், இது 78% குழந்தைகள். உலகளவில் உலகளவில் 2.5% முதல் 6.67% வரை உலகளாவிய பாதிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான எண், அதாவது இது அவசரமாக உரையாற்றப்பட வேண்டும். இந்த நிலை அதிகரித்து வருவதால், பலர் செறிவை மேம்படுத்துவதற்கும், அவற்றின் ஆற்றலை சமன் செய்வதற்கும், அதன் பக்க விளைவுகளை குறைப்பதற்கும் வழிகளைத் தேடுகிறார்கள், மேலும் இதுபோன்ற ஒரு துணை அதன் செயல்திறனுக்காக நன்கு…
‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ படத்தின் திட்டங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் “’மாஸ்டர் 2’ படத்தின் ஐடியாவை விஜய் சாரிடம் கூறினேன். அப்படம் ரொம்பவே ஜாலியாக இருக்கும். ஏனென்றால் ஜே.டி கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதே போல் ’லியோ 2’ ஐடியாவும் விஜய் சாரிடம் கூறியிருக்கிறேன். ஆனால் அவருடைய பார்வை இப்போது மக்களுக்கு சேவை செய்வதாகும். சினிமா என்பது பொழுதுபோக்கு. இது முக்கியமா, மக்கள் சேவை முக்கியமா என்றால் மக்கள் சேவை தான் முக்கியம். ஆகையால் அவரிடம் பெரிதாக அதைப் பற்றி விவாதிக்கவில்லை. ஆனால் அவரை மீண்டும் இயக்க…
