சென்னையின் புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணக்கு (உதயா) என்கிற விசாரணைக் கைதியை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் போலீஸ் ‘எஸ்கார்ட்’களில் ஒருவராக உடன் பயணிக்கிறார் வேந்தன் (அஜ்மல்). ஆனால், சேலத்தைச் சென்றடையும் வழி நெடுக, கணக்கைக் கொலை செய்ய ஒரு கூலிப்படை சளைக்காமல் துரத்தி வந்து தாக்குகிறது. இன்னொரு பக்கம், போலி என்கவுன்டர் மூலம் கணக்கின் கதையை முடிக்கச் சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். போட்டிப் போட்டு இவர்கள் ஏன் கணக்கைக் கொல்ல நினைக்கிறார்கள்? ‘எஸ்கார்ட்’ மாறனால் கணக்கைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை. ஒரு கொலை விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, துண்டாடப் பட்ட பிளாஷ் – பேக்குகள் வழியாகச் சொல்லும் திரைக்கதை உத்தி ஈர்க்கிறது. கணக்கின் காதல் வாழ்க்கையைச் சிறிது சிறிதாகத் தெரிந்துகொண்டு, அவனைப் பாதுகாக்கத் தொடங்கும் வேந்தனுக்கும் கணக்குக்கும் இடையில் அன்பும் அக்கறையும் பூக்கும் தருணங்களை நன்றாகவே சித்தரித்திருக்கிறார்கள். பேருந்துக்குள்…
Author: admin
பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் பாஜக தரப்பில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்த சூட்டோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், அதிமுக உள் விவகாரங்களை நன்கு அறிந்த பெங்களூரு புகழேந்தியிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். அதிமுக ஒருங்கிணைப்புக் குழு இன்னமும் செயல்படுகிறதா? அதிமுக-வை ஒருங்கிணைக்க நாங்கள் சில முயற்சிகளை எடுத்தோம். ஆனால், அதிமுக-வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த எங்களை, “தெருவில் செல்வோருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என, இபிஎஸ் அவமானப்படுத்தினார். தன்னை உலக மகா தலைவராக நினைக்கும் இபிஎஸ், அதிமுக ஒன்றுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். “நிபந்தனை இன்றி, அதிமுக-வில் இணையத் தயார்” என்று ஓபிஎஸ் தெரிவித்தும், இபிஎஸ் பிடிவாதமாக இருக்கக் காரணம், ஓபிஎஸ் கட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்ற பயமா? கட்சியை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு,…
புதுடெல்லி: ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் காந்தி கூறுவது தரமற்ற சிந்தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் சட்டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது நடந்த சம்பவம் எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி என்னை மிரட்டினார். வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலோ, மத்திய அரசை எதிர்த்து பேசினாலோ, என் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அருண் ஜெட்லி மிரட்டினார். அதற்கு, ‘‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் காங்கிரஸ்காரர்கள். கோழைகள் அல்ல. நாங்கள் வளைந்து கொடுக்க மாட்டோம்.…
காதல் திருமணம் செய்துகொள்ளும் கார்த்தியும் (தர்ஷன்) அனுவும் (அர்ஷா சாந்தினி) சென்னை வேளச்சேரியில் பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதேபோல ரமேஷ் (காளி வெங்கட்), விஜி (வினோதினி) வீட்டிலும் நடக்கின்றன. பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டுகளில் இந்த 2 குடும்பமும் ஒரே அடுக்குமாடி வீட்டில்தான் வசிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால், கார்த்தியும் அனுவும் ரமேஷும் விஜியும் வெவ்வேறு டைம் லைனில் வசிக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் பிரச்சினைகள் எழுகின்றன. இதை எப்படித் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை. வித்தியாசமான கதைக் களத்தைக் கையில் எடுத்து, அதைத் திகிலாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் எமோஷனல் கலந்தும் இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ்வேல். முதலில் ஒரு பேய்க் கதை போலவே நகர்ந்து செல்லும் திரைக்கதையில் இது பேய்க் கதை அல்ல என்பது தெரிய வருகிறபோது சுவாரஸியம் பற்றிக் கொள்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும்…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் மினி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.4) தூத்துக்குடி வருகிறார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில், ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை (ஆக.4) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர்…
சென்னை: பிரபல நடிகர் மதன்பாப் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் இசைக் கலைஞராக இருந்தார். தனது சகோதரர் பத்மநாபன் என்ற பாபுவுடன் இணைந்து ‘மதன் – பாபு’ என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வந்தார். இதனால் மதன் பாபு என்று அவரை அழைத்தனர். அதுவே பின்னர் மதன்பாப் ஆனது. ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அவர், ‘வானமே எல்லை’ படம் மூலம் அறியபட்டார். தொடர்ந்து, தேவர் மகன், மகளிர் மட்டும், பூவே உனக்காக, கண்ணுக்குள் நிலவு, தெனாலி, பிரண்ட்ஸ், சந்திரமுகி, கிரி உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது இவருடைய தனித்த அடையாளமாகும். சன்…
ஒரு சமீபத்திய ஆய்வில் காற்று மாசுபாட்டிற்கு நீண்டகால வெளிப்பாடு மற்றும் அல்சைமர் மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா உள்ளிட்ட டிமென்ஷியாவின் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறது. பி.எம். இந்த அமைதியான அச்சுறுத்தல் நம்மைச் சுற்றி உள்ளது. இது கண்ணுக்கு தெரியாதது அல்ல, ஆனால் இன்னும் கவனிக்கப்படவில்லை. அது ஏற்படுத்தும் அழிவு? மூளை சேதம். நம்மைச் சுற்றி ரகசியமாக பதுங்கியிருக்கும் ஒரு பொதுவான உடல்நல அச்சுறுத்தலைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். இந்த அபாயத்திற்கு நீண்ட காலமாக வெளிப்பாடு அல்சைமர் நோய் மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா உள்ளிட்ட டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது, இது முன்னர் வாழ்க்கை முறை மற்றும் மரபியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எம்.ஆர்.சி) தொற்றுநோயியல் பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வில், வெளிப்புற காற்று மாசுபாட்டிற்கு நீண்டகாலமாக வெளிப்படுவது முதுமை அபாயத்தை அதிகரிக்கும் என்று…
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், ப.செந்தில்குமார் தெரிவித்தனர். நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இந்த திடம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை தொடர்பு அதிகாரியும், மின்வாரிய தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடக்கத்தில் தொற்று நோய்கள் அதிகமாக இருந்தன. ஆனால், தற்போது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால் தான் தமிழக அரசு, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.2-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகம் தாய் சேய்…
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி மூவர்ணக் கொடி யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்க தமிழக பாஜகவில் மாநில அளவிலான குழுவை நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திரங்கா (மூவர்ண கொடி) யாத்திரை, வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஆக.10-ம் தேதி முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூவர்ணக் கொடி யாத்திரை உள் ளிட்ட பணிகளை ஒருங்கி ணைக்கவும், வழி நடத்த வும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, மகளிர் அணி தலைவர் கவிதா காந்த், ஓபிசி அணி தலைவர் வீர திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, மகாசுசீந்திரன்,…
சென்னை: 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறிய தாவது: உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால் இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக் கிறார்கள். வேறு யார் வைத்திருக்க முடியும். இது குறித்து காவல் துறை யிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீ ஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறை யிடம் ஒப்படைத் துள்ளோம். மேலும், நான் தனியாக சிறப்பு அமைப்பு மூல மாகவும் விசாரணை நடத்தச் சொல்லி யுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை அன்புமணி சொல்கிறார். தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத் துக்கு நான் ஏற் பாடு செய்து, அதில்…
