Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம்
    தொழில்நுட்பம்

    புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட் உள்​ளிட்ட நவீன வசதி​களு​டன் ராயல் என்​பீல்ட் நிறு​வனம் புதிய புல்​லட் ‘ஹண்​டர் 350’ மாடலை அறி​முகம் செய்​துள்​ளது.

    ராயல் என்​பீல்ட் நிறு​வனத்​தின் கிளாசிக் 350, மீட்​டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்​கள் வாகன ஓட்​டிகளிடம் கவனம் பெற்ற நிலை​யில், அதன் தொடர்ச்​சி​யாக ‘ஹண்​டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்​து, அதன் மேம்​படுத்​தப்​பட்ட மாடல் வகை நேற்று முன்​தினம் டெல்லி மற்​றும் மும்​பை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. டேப்​பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளு​டன் புதி​தாக டோக்​கியோ பிளாக், லண்​டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்​களில் 2025-ம் ஆண்​டின் ‘ஹண்​டர் 350’ அறி​முக​மாகி​யுள்​ளது. புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழி​காட்​டும் டிரிப்​பர் என பல்​வேறு நவீன வசதி​கள் இதில் இடம்​பெற்​றுள்​ளன.

    இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் தலைமை வணிக அதி​காரி யத்​விந்​தர் சிங் குலேரியா மற்​றும் தயாரிப்பு உத்​தி​கள் பிரிவு நிர்​வாகி அனிஷ் அருண் ஆகியோர் கூறிய​தாவது: தின​மும் மாறிவரும் உலகில் ராயல் என்​பீல்ட் காலத்​தால் அழிக்க முடி​யாத அடை​யாள​மாக உள்​ளது. மக்​களிடம் தனி இடத்​தைப் பிடித்​திருக்​கிறது. கடந்த நிதி​யாண்​டில் மட்​டும் 10 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ராயல் என்​பீல்ட் வாக​னங்​கள் விற்​பனை​யாகி உள்​ளன.சர்​வ​தேச சந்​தை​யில் 1.07 லட்​ச​மும், உள்​நாட்டு சந்​தை​யில் (இந்​தி​யா) 9.32 லட்​ச​மும் வாக​னங்​கள் விற்​பனை​யானது குறிப்​பிடத்​தக்​கது.

    இந்​நிலை​யில், ராயல் என்​பீல்ட் சார்​பில் 2022-ல் அறி​முகம் செய்​யப்​பட்ட ‘ஹண்​டர் 350’ வாடிக்​கை​யாளர்​களிடம் பெரும் வரவேற்​பைப் பெற்​றது கடந்த 3 ஆண்​டு​களில் மட்​டும் 5 லட்​சம் பேர் இதை வாங்​கி​யுள்​ளனர். 6 மாதங்​களுக்கு ஒரு லட்​சம் வாடிக்​கை​யாளர்​கள் ஹண்​டரை வாங்கி வரு​கின்​றனர். எனவே, இதை அடுத்​தகட்​டத்​துக்கு கொண்​டு​செல்​லும் வகை​யில் ‘ஹண்​டர் 350’-யை மேம்​படுத்​தி​யிருக்​கிறோம். அதன்​படி, ஹெட் லேம்ப், ஹாலோஜன் லைட்​டில் இருந்து எல்​இடி​யாக மாற்​றப்​பட்​டிருக்​கிறது. நெடுந்​தூரப் பயணங்​களுக்கு உதவும் வகை​யில் ‘டிரிப்​பர்’ எனப்​படும் திருப்​பங்​களுக்​கான வழி​காட்​டும் கருவி (நேவி​கேஷன்) பொருத்​தப்​பட்​டுள்​ளது. இது ராயல் என்​பீல்ட் செயலி​யுடன் இணைந்து செயல்​படும்.

    பழைய 2022 மாடலில் சார்​ஜிங் வசதிக்​காக இடம்​பெற்​றிருந்த ‘டைப்​-ஏ’ யுஎஸ்பி தற்​போது மாற்​றப்​பட்டு 27 வாட்​ஸுடன் கூடிய ‘டைப்​-சி’ போர்ட்​டாக மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் கடந்த மாடலை​விட 30 சதவீதம் வேக​மாக செல்​போன்​களை சார்ஜ் செய்ய முடி​யும். அதே​போல, 350 சிசி வாக​னங்​களில் முதல்​முறை​யாக ‘ஸ்​லிப் அசிஸ்ட் கிளட்ச்’ எனப்​படும் கிளட்ச் வகையை ஹண்​டருக்கு பொருத்​தி​யிருக்​கிறோம். இதன்​மூலம் கிளட்ச்​சின் அழுத்​தம்குறை​வாக இருக்​கும். அதனால் நகரப் பகு​தி​களில் அடிக்​கடி கியர் மாற்​று​வது எளி​தாக இருக்​கும்.கடந்த மாடலில் தரைதளத்​தில் இருந்து 150 மி.மீ. உயரத்​தில் மட்​டுமே சைலென்​சர் இருந்​த​தால், ஸ்பீட் பிரேக்​கர்​களில் செல்ல கடின​மாக இருந்​த​தாக சிலர் தெரி​வித்​திருந்​தனர். எனவே, சைலென்​சரை மாற்​றியமைத்​து, அந்த இடைவெளியை 160 மி.மீ. ஆக உயர்த்​தி​யிருக்​கிறோம்.

    அதே​போல, கடந்த மாடலில் சஸ்​பென்​சன் கடின​மாக இருந்​த​தால் வாக​னத்தை ஓட்​டு​வதற்கு சவு​கரிய​மாக இல்லை என்​றும் சிலர் தெரி​வித்​தனர். எனவே, ஹேண்​டிலிங் மற்​றும் சவு​கரி​யத்​துக்​காக இரட்டை ஸ்பிரிங்​குடன் கூடிய சஸ்​பென்​சனை வடிவ​மைத்து இருக்​கிறோம். இத்​துடன் சீட்​டிலும், ஹேண்​டில்​பாரிலும் மாற்​றம் ஏற்​படுத்​தி​யிருக்​கிறோம். இதன்​மூலம் பயணம் மிக​வும் சவு​கரிய​மாக இருக்​கும். அந்​தவகை​யில் மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் புதிய ‘ஹண்​டர் 350’ பேஸ் விலை ரூ.1.49 லட்​ச​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மிட் வேரியண்ட் (ரியோ வைட், டேப்​பர் கிரே) வகை​யின் விலை ரூ.1.76 லட்​ச​மாக​வும், டாப் வேரியண்ட் (டோக்​கியோ பிளாக், லண்​டன் ரெட், ரிபல் ப்ளூ) வகை​யின் விலை ரூ.1.81 லட்​ச​மாக​வும்​ நிர்​ண​யம்​ செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?

    June 29, 2025
    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    June 28, 2025
    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் ஒப்போ K13x ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    June 28, 2025
    தொழில்நுட்பம்

    படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

    June 26, 2025
    தொழில்நுட்பம்

    விவோ T4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    June 25, 2025
    தொழில்நுட்பம்

    இனி ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம்: பிஹார் தேர்தலில் புதுமை!

    June 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
    • ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்துக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன் – ஆமிர்கான்
    • திமுக ஆட்சி கால காவல்நிலைய மரணங்களுக்கு மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? – தவெக
    • மகிழ்ச்சியான திருமணத்திற்கு 5 பழக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்
    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.