Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
    கல்வி

    பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நம்நாட்டில் ஆண்டுதோறும் கல்வி, கலை, மருத்துவம், பொது விவகாரங்கள், அறிவியல், இலக்கியம், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் 2026-ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் எனும் இணையதளத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

    இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் அனுப்பலாம். விளம்பரத்துக்காக அல்லாமல் அந்தந்த துறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியவர்களை கண்டறிந்து விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

    தன்னலமின்றி பொதுமக்களுக்கு சேவையாற்றுவோருக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கல்வி நிறுவனங்களின் சார்பில் பரிந்துரைக்கப்படுபவர் ஆற்றிய சாதனைகள், சேவைகள் குறித்து 800 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிடப்பட வேண்டும்.

    மேலும், அந்தநபர் பரிந்துரை செய்யப்படுவதற்கான காரணத்தை அது தெளிவாக விளக்க வேண்டும். பத்ம விருதுகளுக்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்ற வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

    July 4, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!

    July 3, 2025
    கல்வி

    பள்ளிக்கல்வித் துறையில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள்: பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

    July 3, 2025
    கல்வி

    நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு 

    July 3, 2025
    கல்வி

    ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 ஆன்லைன் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்

    July 3, 2025
    கல்வி

    மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவு தேர்வு முடிவு நாளை வெளியீடு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகனுக்காக மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதி!
    • சிபிசிஐடி விசாரணைதான் வேண்டும்: அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார்
    • முடியை விரைவாக மீண்டும் வளர்க்க 10 தேசி நுஸ்காஸ்
    • ஸ்ரீநகரில் அமைதியாக நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    • ஸ்டோக்ஸ் மீது கடும் ‘பிரஷர்’ – இந்திய அணி பந்து வீச்சில் கட்டுக்கோப்பு தேவை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.