Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
    ஆன்மீகம்

    பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 11 Apr, 2025 12:24 PM

    Published : 11 Apr 2025 12:24 PM
    Last Updated : 11 Apr 2025 12:24 PM

    பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
    சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது

    ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கைலாசநாதர் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    பங்குனி உத்திரத்தை ஒட்டி, வள்ளி, தெய்வானை சமேதரராக மலர் அலங்காரத்தில் அருள் பாலித்த சென்னிமலை முத்துக்குமாரசுவாமி.

    விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையொட்டி, அதிகாலை, கைலாசநாதர் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, சுவாமிகள் தேரில் அமர வைக்கப்பட்டனர். தேருக்கு கற்பூரம் ஏற்றப்பட்டு வடம் பிடிக்கப்பட்டது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வடக்கு ராஜ வீதி சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மாலையில், மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை அடிவாரத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாளை (சனி) காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது. 13-ம் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ர.பழனிவேல், கோயில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

    June 29, 2025
    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    June 28, 2025
    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    June 26, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    June 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்
    • 477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!
    • ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
    • தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்
    • நாய்கள் மற்றும் பூனைகள்: எது புத்திசாலி? பதில் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.