Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்!
    விளையாட்டு

    WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்!

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புளோரிடா: பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு WWE அமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிளியர்வாட்டர் நகரில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை காலை ஹல்க் ஹோகன் காலமானார். அமெரிக்காவில் அவசர கால உதவிக்கான ‘911’ எண்ணுக்கு மாரடைப்பு குறித்து அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது வீட்டுக்கு விரைந்த நிலையில் அவர் காலமானார். அவரது மறைவுக்கான மருத்துவ காரணத்தை அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

    “WWE-ன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ள மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஹல்க் ஹோகன் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்துள்ளோம். WWE-ன் முகங்களில் ஒருவராக பரவலான மக்களால் அறியப்படுபவர் ஹல்க் ஹோகன். 1980-களில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று WWE கூறியுள்ளது.

    அவரது மறைவுக்கு உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜுனியர், ரிக் ஃபிளார் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆறு முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் ஹல்க் ஹோகன். கடந்த 2005-ல் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டார். திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார். தலையில் அவர் அணியும் ஸ்கார்ஃப், கண் கண்ணாடி மற்றும் ஹார்ஸ்-ஷூ ஸ்டைல் மீசையும்தான் அவரது அடையாளம். 90-களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட WWE மல்யுத்த வீரர்களில் ஒருவர்.

    WWE is saddened to learn WWE Hall of Famer Hulk Hogan has passed away.

    One of pop culture’s most recognizable figures, Hogan helped WWE achieve global recognition in the 1980s.

    WWE extends its condolences to Hogan’s family, friends, and fans.


    — WWE (@WWE) July 24, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    வா.சுந்தரை 69-வது ஓவர் வரை ஓரங்கட்டியது ஏன்? – இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்குப் பின் சர்ச்சைகள்!

    July 26, 2025
    விளையாட்டு

    டெஸ்ட்டில் தனது சாதனையை ஜோ ரூட் முறியடித்தபோது ரிக்கி பாண்டிங் ரியாக்‌ஷன் என்ன?

    July 26, 2025
    விளையாட்டு

    10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500+ ரன்களை வாரி வழங்கிய இந்தியா | மான்செஸ்டர் டெஸ்ட்

    July 26, 2025
    விளையாட்டு

    ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் முதன்முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வெல்கிறது

    July 26, 2025
    விளையாட்டு

    இந்திய அணிக்கு திரும்பினர் லோவ்லினா, நிகத் ஜரீன்

    July 26, 2025
    விளையாட்டு

    அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி |  சீனா ஓபன் பாட்மிண்டன்

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?
    • “அரசு ஊழியர் நலனில் பின்தங்கிய நிலையில் தமிழகம்” – பழைய ஓய்வூதிய திட்ட இயக்க தேசிய தலைவர் பேச்சு
    • ராமநாதபுரம் சமஸ்தான சொத்துகள் விற்கப்படுவதாக புகார் – போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
    • முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.